சினிமா புதிர்.

rajeshkrv

New member
1. நடிகர் பாலாஜி பெண் வேடமேற்று நடித்த படம் எது?

2. எஸ்-வி.ரங்காரவ் - பி.பானுமதி ஜோடியாக நடித்த படங்களில் இரண்டை கூறவும்

3. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலியின் முதல் பாடல் எது?

4. மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - பாடலின் படம், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்கள் ?

5. பி.சுசீலா, வாணிஜெயராம் இணைந்து பாடிய 3 பாடல்களை கூறவும்.

.
 
1. நடிகர் பாலாஜி பெண் வேடமேற்று நடித்த படம் எது? - வீர அபிமன்யூ

மீதியை பெருந்தன்மையோடு மற்றவர்கள் சொல்ல விட்டு வைக்கிறேன்.

வாங்க ராஜேஷ் எப்படி இருக்கீங்க, பார்த்து, பேசி பல ஆண்டுகள் ஆகுது. நலமறிய ஆவல்.

- பரஞ்சோதி
 
பரஞ்சோதி .. ஆஹா முதல் பதிலே நெத்தியடியாக அடித்துவீட்டீரே..
இனிமேல் மன்றத்தை விட்டு எங்கேயும் செல்லப்போவதில்லை .. அதனால் தினமும் பேசலாம்
 
3. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலியின் முதல் பாடல் எது?

ஜெண்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே???
ஏன் குழப்பம்னா உழவன் படமும் 1993ல்தான் வந்தது. வாலி அதில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருந்தார்...
 
rajeshkrv said:
1. நடிகர் பாலாஜி பெண் வேடமேற்று நடித்த படம் எது?

2. எஸ்-வி.ரங்காரவ் - பி.பானுமதி ஜோடியாக நடித்த படங்களில் இரண்டை கூறவும்

3. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாலியின் முதல் பாடல் எது?

4. மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - பாடலின் படம், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்கள் ?

5. பி.சுசீலா, வாணிஜெயராம் இணைந்து பாடிய 3 பாடல்களை கூறவும்

ஹி ஹி கடினமா படையப்பா படதோட ஹீரோ யாருன்னு கேட்டா சொல்லலாம் :D :D
இந்த மாதிரி எளிதா கேட்டா .....:confused: :confused:
 
4. மலரோடு விளையாடும் தென்றலே வாராய் - பாடலின் படம், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்கள் ?

தெய்வபலம்
பி பி ஸ்ரீனிவாஸ், ஜானகி

இசை யாருன்னு தெரியலையே... என் எம் பி 3 கோப்பில் இல்லை :)
 
5. பி.சுசீலா, வாணிஜெயராம் இணைந்து பாடிய 3 பாடல்களை கூறவும்

(1) அம்மா தாயே மகமாயி
ஆயிரம் கண்ணுடையாள்
சங்கர் கணேஷ்

(2) எங்கெங்கோ சில மணிகள்
சொன்னதைச் செய்வேன்
மெல்லிசை மன்னர்
இணைந்து பாடியவர் பாலசுப்பிரமணியம்

(3) மங்கல மாலைகள் வருக
சிவப்புக்கல் மூக்குத்தி
மெல்லிசை மன்னர்

இது மூணுதானா இல்லை இன்னும் இருக்காய்யா?
 
?ப்ரதீப்,
மிகவும் சரி
சிக்கு புக்கு ரயிலே தான்..
தெய்வபலம், பாடகர்கள் மிகவும் சரி. இசையமைப்பாளர் வேறு யாருக்காவது தெரிகிறதா என்று பார்ப்போம்
சுசீலா-வாணிஜெயராம் பாடல்கள் நிறைய உள்ளன - நீங்கள் கூறிய 3'ம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
 
குரு, கலக்கல் ஆரம்பம்

பதில் சொன்ன பரம்ஸ், பிரதீப்புக்கு பாராட்டுகள்..

(தம்பிகள் பதில் சொன்னா எனக்கும் வெற்றிதானே..ஹிஹி..)

இந்த சுற்றில் மூச்சுத்திணறிய கண்ணன் அணியில் நானும்.

தெய்வபலம் இருந்தால் அடுத்த சுற்றில் பார்க்கிறேன் குருவே..
 
ஆஹா!

நன்றி ராஜேஷ், நான் சொன்ன பதிலுக்கு ஏற்ப கேள்வியை மாத்திட்டீங்களா :)

பிரதீப் தம்பியை சினிமா அறிவில் மிஞ்ச முடியுமா என்ன?

இளசு அண்ணா, வழக்கம் போல் எஸ்கேப்பாஆஆஆஅ :)
 
rajeshkrv said:
?ப்ரதீப்,
மிகவும் சரி
சிக்கு புக்கு ரயிலே தான்..
தெய்வபலம், பாடகர்கள் மிகவும் சரி. இசையமைப்பாளர் வேறு யாருக்காவது தெரிகிறதா என்று பார்ப்போம்
சுசீலா-வாணிஜெயராம் பாடல்கள் நிறைய உள்ளன - நீங்கள் கூறிய 3'ம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
இன்னும் நெறைய இருக்கு. எனக்கு அதுல பிடிச்சது

ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்
திருமாலைத்தானே
மணமாலை தேடி
இந்த மங்கை சொந்த மங்கையோ
எந்த கங்கை தேவ கங்கையோ ஹோ ஹோ

இதுவும் மெல்லிசை மன்னர்தான். இந்தப் படமும் மறந்து விட்டது. ஆனால் மிகச்சிறந்த படம். மிக அற்புதமான தீம் உடைய படம். கே.ஆர்.விஜயா முத்துராமன் பத்மப்பிரியா நடித்தது.
 
அடுத்த கேள்வியை நான் கேட்கலாமா?

1. இளையராஜா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் என்ன?

2. மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி பாடியிருக்கிறாரா? ஆம் என்றால் பாடல் பற்றிய குறிப்புகள் தருக.

3. நடிகை ராதா அம்மன் வேடத்தில் நடித்த படம்?

4. நடிகர் விஜய்க்குத் திரையில் முதல் ஜோடி யார்?

5. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல்?
 
4. நடிகர் விஜய்க்குத் திரையில் முதல் ஜோடி யார்?

கீர்த்தனா. படம்: நாளைய தீர்ப்பு.

ஹி ஹி ;)
 
sarcharan said:
4. நடிகர் விஜய்க்குத் திரையில் முதல் ஜோடி யார்?

கீர்த்தனா. படம்: நாளைய தீர்ப்பு.

ஹி ஹி ;)
இதச் சரியாச் சொல்லீருவீங்களே!
 
5. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல்?

எது சுகம் சுகம்
வண்டிச்சோலை சின்ராசு
இணைந்து பாடியவர் பாலசுப்பிரமணியம்
 
1. இளையராஜா இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய முதல் பாடல் என்ன?
ஓடுகிறாள் நீர்
பத்திரகாளி
 
pradeepkt said:
5. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வாணி ஜெயராம் பாடிய பாடல்?

எது சுகம் சுகம்
வண்டிச்சோலை சின்ராசு
இணைந்து பாடியவர் பாலசுப்பிரமணியம்

அப்ப பிரதீப் மட்டும் என்னவாம்.. ஹ்ம்ம் இந்த பாட்ட மறக்க முடியுமா பிரதீப்பால....
 
sarcharan said:
அப்ப பிரதீப் மட்டும் என்னவாம்.. ஹ்ம்ம் இந்த பாட்ட மறக்க முடியுமா பிரதீப்பால....
அடடே! அதென்ன விஷயம். எடுத்து விடுறது.
 
பிரதீப் கூறிய இரண்டு விடைகளும் சரி.

எனக்குத் தெரிந்து சீர்காழி கோவிந்தராஜன் இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள்தான் பாடியிருக்கிறார். இது முதல் பாடல். அடுத்த பாடல் மிகவும் சிறப்பானது.
 
தாய் மூகாம்பிகை படத்தில் மெல்லிசை மன்னர், இசைச் சக்கரவர்த்தி பாலமுரளி கிருஷ்ணாவுடன் சீர்காழி அவர்களும் இணைந்து அந்தத் "தாயே மூகாம்பிகா" பாடலைப் பாடி இருப்பார்கள். கடைசியில் மலேசியா வாசுதேவனும் ஜானகியும் இணைவார்கள்.

அதில் மற்ற அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் சீர்காழி!
 
Back
Top