மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்

மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்

நீண்ட நெடு நாட்களாகவே சில பல விசயங்களை சில பதிவுகளைப் பார்க்கும்போது விளக்கவேண்டும் அல்லது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நினைத்து சிலவற்றை ஆரம்பித்து உங்களை குழப்பி முழுமையாய் முடிக்காமல் இருந்தேன். இரு நாட்கள் முன்பு ஒரு சிறு கையேடு கிடைத்தது. நானாக குழப்புவதைவிட கோர்வையாய் எளிமையாய் ஏற்கனவே சொன்னதை சொல்வது எளிது.

எனவே "உலக சமயம்" (உலகப் பொது அருள்நெறி சமயம் ஏன்?) என்ற தலைபில் அருட்தந்தை "வேதாத்திரி மகரிஷி" அவர்கள் கூறியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி: உலகப் பொது அருள்நெறி சமய அறக்கட்டளை, கும்பகோணம்.


ஆறாவது அறிவைப் பெற்ற மனிதப் பிறவியினது நோக்கம்


அறிவிலே முழுமைப் பெற்று மனம், உயிர், டெய்வம் எனும் மூன்று மறை பொருட்களையும் உணர்ந்து கொள்ளுதல்.

இறைநிலையே மனிதனிடத்தில் அறிவாக விளங்குகின்றது என்ற உண்மையினைத் தெரிந்து கொண்டு நிறைவு மற்றும் அமைதி பெறுதலாகும்.

உடல், உயிர், அறிவு முன்றும் ஒருங்கிணைந்து இயங்கௌம் ஒரு சிறப்பு நிலையே உடலாகும். அதில்
1. பசி
2. வெட்பதட்ப ஏற்றத்தாழ்வு
3. உடல் கழிவுப் பொருட்களின் உந்துதல் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் என மூவகையான உணர்ச்சிகள் உண்டாகின்றன. இது இயற்கை நியதி.

காலத்தோடு தக்கப் பொருட்களையும், இன நட்பையும் கொண்டுதான் பசி முதலிய மூவகை உணர்ச்சிகளையும், சமப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வகையில் ஏற்படும் மூவகைத் தேவைகளும் உடலியக்கத்தின் விளைவாக உடலிலிருந்தே தான் எழுகின்றன.

இதோடு உடலுக்கு வெளியே இருந்தும் வரக்கூடிய மூன்று தாக்குதல்களாலும் துன்பங்கள் எழலாம். அவை:

1. இயற்கைச் சீற்றம்
2, வேற்றுயிர் பகை
3. தற்செயலாக எதிர்பாராது ஏற்படும் மோதல் என்னும் விபத்து என்பனவாகும்.

இவ்வாறு உள்ளிருந்து எழும் மூன்றுவகையான தேவைகளையும் அவ்வப்போது காலந்தாழ்த்தாமல் தக்க பொருட்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்ளவும், வெளியிலிருந்து வரும் இயற்கைச் சீற்றம், வேற்றுயிர் பகை, விபத்து ஆகிய மூன்றுவகையான சங்கடங்களையும் தாங்கிக் கொள்ளவும், எதிர்த்து நின்றூ வெற்றி கொள்ளவும், மனிதன் ஐந்து வகையான இன்றீயமையாச் செயல்களில் ஈடுபட வேண்டியுள்ளது. அவையாவன:

1. உணவு உண்னல்
2. உழைத்தல்
3. உறங்குதல்
4. உடலுறவு கொள்ளுதல்
5. மனதை ஆளுதல் எனபனவாகும்.

இந்த ஐவகைத் தொழில்களையும் அலட்சியம் செய்வதோ, மிகையாகக் கொள்வதோ, உடலுக்கும், மனதுக்கும் பொருந்தா உணர்வாகித் துன்பம் உண்டாக்கும். வாழ்வில் சிக்கல் பெருகும்.

இந்த ஐவகைச் செயல்களையும் முறையாகவும், ஒழுங்காகவும் ஆற்றுவதற்கு

1. உடலியக்க, மன இயக்க நியதிகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. தொடர்பு கொள்ளும் மக்களுடைய மற்றும் பொருட்களுடைய மதிப்பையும், தன்மைகளையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
3. அணுக்களின் சேர்க்கையால் அமையும் எந்தப் பொருளும் ஒன்றோடு மற்றது நெருங்கும்போது, உரசும்போது அல்லது கலக்கும்போது எழும் விளைவுகளை உணர்ந்து கொள்ளவேண்டும்.

இத்தகைய அறிவின் விழிப்புடன் பொருட்களோடும் மக்களோடும் அளவு மற்றும் முறையோடு உறவுகொள்வதும், அனுபோகிப்பதும் நெறியான, சிக்கலற்ற துன்பம் விளையாத வாழ்வுக்கு இன்றியமையாதானவாக இருக்கின்றன. இந்த முறைகளில் வாழ்வில் இனிமையும், பொருத்தத்தையும் காத்து வாழ்ந்தால்தான் மனதில் அமைதி நிலவும். ஆன்மீகச் சிந்தனை ஓங்கும்; அறிவு முழுமை நிலை அடைந்து, இறைநிலையுணர்ந்து, இயற்கையோடு ஒன்றிப் பேரின்ப வாழ்வை எய்தமுடியும்.
 
Last edited:
மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்

நாமாக எழுதினால் எழுதினால் எதுனா தப்பாக போய்விடலாம் என்றூ ஈ அடிச்சான் காப்பி அடிச்சேன் அது சரிவரல போல. பரவாயில்ல கொஞ்சம் அடுத்த தலைப்புக்கு போகலாம்.

மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்

மேற்கூறிய அனைத்தையும் கற்பதற்கும், வாழ்ந்து பயன்பெறுவதற்கும் மனிதனிடம் போதிய அளவில் அறிவு அமைந்திருக்கிறது. மனித இனம் பழங்காலத்தில் திட்டுத் திட்டாக உலகமெங்கும் சிதறுண்ட கூட்டங்களாக வாழ்ந்து கொண்டிருந்ததால், ஆங்காங்கும் அவ்வப்போதைய தேவைக்கேற்ப ஏற்பட்டு, மரபு வழித் தொடராக வந்த பண்பாடானது கல்வியாகவும், வாழ்க்கை நெறியாகவும் அமைந்தது.

இத்தைகைய பண்பாடுதான் பிற்காலத்தில் ஆங்காங்குத் தோன்றி வாழ்ந்த அறிஞர்களால் சடங்குகளாகவும், ஆன்மீக வாழ்க்கைச் சட்டங்களாகவும் ஆக்கம் பெற்று, அந்தந்த அறிஞர் பெயரைக் கொண்டே மதங்களாக வழங்கப் பெற்றன.

கல்வியறிவு பெற வாய்ப்புக் குறைவாக இருந்த அக்காலத்தில் மக்கள் சமுதாயம் நம்பிக்கை வழியில் மதத் தலைவர்களின் போதனைகளை ஏற்றே வாழ வேண்டியிருந்தது. பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெறாதவர்களாக இருந்ததால், ஆசைகாட்டி நற்காரியங்களை செய்யத்தூண்டவும், அச்சமூட்டித் தீயவினைகளைத் தவிர்க்கச் செய்யவும் கடவுள், சொர்கம், நரகம், ஆன்மா, பிறப்பிற்கு முன்நிலை, இறந்தபின் அடையபோகும் நிலை என்பன பற்றிக் கற்பனைகளாக புகுத்தவேண்டிய அவசியம் மதத்திற்கு தலைமை தாங்கியவர்களுக்கு ஏற்பட்டது.

அந்த கற்பனைகள் அனைத்தும் ஒரே காலத்தில், ஒரே இடத்தில் ஒரே தலைவரால் புகுத்தப்படவில்லை. பல தலைமுறைகளில் ஒரு கற்பனையோடு மற்றொன்றாக சூழ்நிலை வாய்ப்புகளுக்கெற்ப, பல தலைவர்களால் சேர்க்கப்பட்டவையே.

உயிர், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்ற சொற்களைக் கொண்டு மதத் தலைவர்கள் கடவுள் பற்றிப் போதித்த கற்பனைகளில் கொண்ட கருத்துப் பதிவுகளாலும், சடங்கு முறைகளை கையாண்ட பழக்கவழக்கங்களாலும் மக்கள் சமுதாய்ம்கட்டுபட்டு, சிந்தனைத் திறமிழந்து, எங்கு போகவேண்டும்? எப்படி போகவேண்டும்? என அறியாமல் பழக்கப் பதிவுகளுக்குக் கட்டுபட்டவர்களாகவே வாழ்வேண்டிய நிலை உருவாகிவிட்டது.

மனித இனப் பண்பாட்டில் இயற்கையாக உருவான வாழ்க்கை நெறியில் அமைந்த அடிப்படை நோக்கங்கள் இரண்டு:

1. அறிவைப் படிப்படியாக உயர்த்தி மெய்ப்பொருளை உணர்ந்து மன நிறைவு பெறுவதற்கு இறைவழிபாடு.
2. பொருளை ஈட்டி காத்து, துய்த்து, பிறர்க்கிட்டு சமுதாயத்தில் நட்புறவோடு மக்கள் வாழ்வதற்குத் தேவையான ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றுறூப்புகளும் ஒன்றிணைந்த அறநெறி.

இந்த இரண்டு செயல்முறைகளையும் அடிப்படையாகக் கொண்டே அனைத்து மதங்களும் உருவாகின. ஆனால் பின்னர் வந்த தலைவர்களின் தெளிவின்மை, குறுகிய சுயநலப்போக்காலும் மதத்தின் அடிபடைக் கருத்துக்கள் வலுவிழந்து, மறைந்து, சடன்குகளும் கற்பனைகளுமே முதலிடம் பெற்றன.

இக்காலத்தில் விஞ்ஞான அறிவு மேலோங்கி வருகின்றது. மக்களின் சிந்தனை வேகம் பெருகிவருகிறது. வாழ்க்கை பொருட்கள், போக்குவரத்து என அனைத்தும் பெருகி பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வாழுங்காலம் வந்துவிட்டது. இந்நிலையில் போதிக்கப்பட்ட சடங்குகளாலும் வாழ்க்கை நெறிகளாலும் அறிவின் வேகம் மற்றும் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை. எனவே விஞ்ஞான அறிவு வளரும் காலசூழலுக்கு ஏற்ப அனைத்து அடிப்படை உண்மைகளையும் மக்களுக்கு விளங்கவைத்தால் காரணகாரியம் புரிந்து இன்னும் வேகமாக செயலாற்ற மதங்கள் அதன் அடிப்படை நோக்கம் மாறாமல் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டலாம்.
 
நன்றிகள், இளந்தமிழ்ச்செல்வன்ஜி. இவ்வளவு தூரம் ஆய்ந்து அறிந்திருக்கிறீர்களே! வாழ்த்துக்கள்.

===கரிகாலன்
 
கரிகாலன் ஜி. வணக்கம். நலமா? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.

நான் எங்கே ஆய்ந்தேன். ஆய்ந்தவர் பலர். தொகுத்தவர் ஒருவர். தட்டச்சும் கொஞ்சம் படித்ததும் மட்டுமே நான். நன்றி
 
ஆழமான கருத்துக்கள் கொன்ட உங்கள் விளக்க உரைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...
 
Back
Top