தமிழ்நாடு அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனம் 36 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்கா வாழ் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று பல பணிகளை தமிழகத்தில் செய்து வருகிறது. இதன் பணிகள், அனாதைக் குழந்தைகளுக்கு கல்வியளித்தல் முதல் தமிழகத்திலிருந்து தொழுநோயை வேறறுத்தல் என்பது வரை பலவாகும். நன்கொடைப் பணம் 98% பணிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது என்பதில் இதில் உறுப்பினராகவுள்ள அனைவருக்கும் பெருமை.
1. உறுப்பினராவதன் மூலம் (ஆயுள் சந்தா $200 தனி, $300 குடும்பம்).
2. நன்கொடை மூலம்
3. இதன் சென்னை அலுவலகத்தை அணுகி, அவர்களுடைய செயல்களைப் பார்வையிடுவது. பிடித்தால், தொண்டூழியராகப் (volunteer) பதிவு செய்வது. (http://www.tnftnc.org/)
-கண்ணன்
பி.கு: அமெரிக்காவில், இந்நிறுவனத்திற்கு கொடுக்கும் நன்கொடைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.