உதவும் கரங்கள் போல தொண்டு நிறுவனங்கள்..

நண்பர்களே...!

உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், சென்னையில் வித்யாசாகர் என்பவரால் சீராக நடத்தி வரப்படும் தொண்டு நிறுவனம், உதவும் கரங்கள். இது போன்ற வேறு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் உங்களுக்கு தெரிந்திருந்தால் இங்கே கொடுத்து உதவவும்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். ஆனால், எனக்கு வேறு வழியில்லை. தொலை தூரத்தில் இருப்பதால் சரியான, உண்மையாக உதவி தேவைப் படும் தொண்டு நிறுவனங்களை அடையாளம் காண முடியவில்லை.

என்னிடம் அவ்வப்போது சேரும் நிதிகளை தொண்டு நிறுவனங்கள், அனைதை விடுதிகள், முதியவர் விடுதிகள், கைம்பெண் விடுதிகள் என்று கொடுக்கிறேன், கொடுக்க உள்ளேன். உதவும் கரங்களுக்கு இரண்டு முறை கொடுத்து விட்டேன், இணையத் தளம் வைத்து அதிலும் பெறுகிறார்கள். இந்த வசதி கூட இல்லாமல் எத்தனையோ சிறிய தொண்டு நிறுவங்கள் தமிழ் நாட்டில் இருக்கும், அவற்றிற்கு இனி வரும் வருடங்களில் உதவி செய்யலாம் என நினைத்துள்ளேன்.

நீங்கள் அவற்றின் முகவரிகளை இங்கே தெரிவிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு அது உதவியாக இருக்கும், அந்த தொண்டு நிறுவனத்திற்கும் நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

சன் தொலைக்காட்சியின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சியிலும் நிறைய தொண்டு நிறுவனங்களை காட்டுகிறார்கள். அவற்றிலிருந்தும் முகவரிகள், தகவல்கள் கொடுக்கலாம். ஏனென்றால் எல்லோருக்கும் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேரமிருக்குமா என தெரியவில்லை.

நன்றி..
.
 
Last edited by a moderator:
அவசியமான பதிவு இது.. தலைவரின் உள்ளம் கண்டு நெகிழ்கிறேன்..
அந்த தொண்டு நிறுவனங்களுக்கு மேலும் சில உதவும் கரங்கள் நீளப்
போகின்றன இம்மன்றத்தின் இவ்வாசல் வழியாக...
 
நல்ல தலைப்பு. சிவானாந்தா ஆசிரமம் கூட நன்றாக செயல்படுகிறது என எண்ணுகிறேன். விரைவில் எனக்கு கிடைக்கும் பட்டியலை தருகிறேன்
 
தலைவரே,

நீங்கள் எங்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். எத்தனனயோ சுயநலவாதிகளை தினமும் சந்தித்தாலும் உங்களை மாதிரி உத்தமர்கள் ஒருவரை சந்தித்தாலே மனதிற்கு அத்தனை சந்தோஷத்தையும் கொடுத்துவிடும்.

உங்கள் தொண்டு தொடரட்டும். நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நிச்சயம் நம் மக்கள் முகவரிகளை விரைவில் கொடுப்பார்கள்.

நன்றி! வணக்கம்!!

ஆரென்
 
Last edited by a moderator:
இந்த பதிவிற்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளேன். இதுமாதிரி நம் மக்கள் தானாகவே வந்து உதவிட வேண்டும்.

தலைவரே நானும் உங்களுடன் சேர்ந்துகொண்டு நல்ல காரியங்கள் செய்கிறேன். முகவரிகளை அள்ளித்தாருங்கள் நண்பர்களே.
 
இன்று காலைதான் இந்த பதிவை பார்த்தேன்,
மனம் மிக மிக நெகிழ்வுற்றது

நேற்றைய தினம் எனது வீட்டிற்கு அருகாமையில்
உள்ள உடல் குறையுள்ளோர் இல்லம் சென்று வந்தேன்.
தங்கள் உடல் குறைகளை பெருது படுத்தாமல் தாங்களாகவே
தனது தேவைகளை பூர்த்தி கொள்வதை கண்டு
மனம் மகிழ்வுற்றது. இதே போல நமது மன்றமும் சமூக சேவை செய்ய முற்பட்டது கண்டு நாமும் சேர்ந்து செய்வோம் என எண்ணம்
கொண்டுள்ளேன். என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்

மனோ.ஜி
 
Last edited by a moderator:
இந்த தலைப்பை மறந்து விட்டவர்களுக்கு மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன்.

ஏதாவது தகவல்கள் கிடைத்தால் தெரிவிக்கவும். இதில் பலர் பயனடைந்தால், உங்களுக்கும் அந்த் புண்ணியத்தில் பங்கு உண்டு.

நன்றி..
 
இங்கே பார்க்கவும்...

http://www.udavumkarangal.org/

http://www.personal.psu.edu/azs155/donate/orglist.html

http://www.orphanage.org/

child.jpg
 
தேனிசை,

முதல் சுட்டி நானே எனது பதிப்பில் கொடுத்துள்ளேன்.
இரண்டாவது மூன்றாவது சுட்டிகள் மிகவும் உபயோகமாக இருந்தது.
மிக்க நன்றி..
 
Last edited:
பெயருக்கேத்த எண்ணம் உள்ள இதயமே, கரூரில் ஒரு பார்வை அற்றவர்கள் இல்லமும் மற்றும் ஒரு அனாதை சிறுவர்கள் இல்லமும் பார்த்தேன். ஒரு முறை இரு இல்லங்களுக்கும் சென்று வந்த பாதிப்பு, என் மனதில் யாரோ இரும்பை காச்சி ஊற்றுவது போல் இருக்கிறது இன்றும். என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

அங்கு ஒரு வயது குழந்தையை பார்த்தேன். அதே சமயம் என் மகனை பார்த்தேன். வேதனை தாங்க முடியவில்லை. கண்ணீர் வந்து விட்டது. உடுக்க ஒரு துணி இல்லாமல், மூக்கில் சளியுடன் கண்களில் சோகத்துடன்.. அப்பப்பா.. நினைத்தாலே செத்து விடலாம் போல இருக்கிறது.

உங்களுக்கு அந்த இல்லங்களின் முகவரி, தொலைபேசி தருகிறேன். நண்பர்களே..

உங்களிடம் அவர்களுக்கு உதவி செய்ய எழுதும் போது கூட, கண்ணீருடன் தான் எழுதுகிறேன்.
 
Last edited by a moderator:
எனது பாராட்டுக்கள் மிகத் தேவையான திரி இது.


தகவல் கிடைக்கும் போது கண்டிப்பாக சொல்லுகின்றேன்
 
மன்றத்திற்கு....

நாங்களும் "தோள்கள்" (shoulders) என்ற பெயரில் ஒரு சிறு நிறுவனமாக இயங்கி வருகிறோம்....

எங்கள் குழுவின் குறிக்கோள் மனயியல் உதவி தேவைப் படும் மக்களுக்கு லாபம் எதிர் பாராமல் உதவுவது...

தற்போது குழந்தைகளின் Autisum, ADHD, LD மற்றும் behaviour disorders போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறொம்....

பெரியவர்களுக்கான கவுன்சிலிங் இப்போது துவங்கியுள்ளோம்...

மன்றத்தில் இதை குறித்து விரிவாக எழுதுகிறேன்...
தற்போது இதன் வெப் சைட் உருவாகி கொண்டிருக்கிறது...
இந்த வேலை முடிந்ததும் பதியலாம் என்று இருக்கிறேன்...

நன்றி...
 
Last edited by a moderator:
அன்புமிக்க நண்பர்களே,

வணக்கம். கரூரில் இயங்கும் "ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமம்", சுவாமி ஆத்மானந்தர் அவர்களின் பராமரிப்பில் 60 ஆண் அனாதை குழந்தைகள் மற்றும் 150 அனாதை பெண் குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு, கல்லூரி வரை படிப்பும், உணவும், உடையும் வழங்கி வருகிறார் சுவாமி.

இந்த நிருவனத்திற்க்கு உதவ தங்களுக்கு விருப்பம் இருந்தால், இங்கு இறை தொண்டு செய்யும் சகோதரர் மாணிக்கவாசகம் என்பவரை தொடர்பு கொள்ளுமாரு கேட்டு கொள்கிறேன்.

முகவரி :
ஸ்ரீ ராமகிருஸ்ண ஆஸ்ரமம்,
பசுபதி பாளையம், கரூர்.
தமிழ் நாடு, இந்தியா.
போன் : + 91 4324 246301

குறிப்பு : நான் அங்கு நான்கு வருடம் சம்பளம் ஏதும் பெறாமல், கம்ப்யூட்டர் ஆசிரியராக பணி செய்தேன். என் பெயரை தயங்காமல் தெரிவித்து தொடர்பு கொள்ளலாம்.
 
Last edited by a moderator:
பெஞ்சமின்,
மனயியல் உதவி தற்காலத்திற்கு தேவையான, அரிதாக கிடைக்க கூடிய ஒரு சேவை. உங்கள் சேவை மிகவும் பாராட்டக் கூடியது. இதை தொடர்ந்து செய்ய எனது வாழ்த்துக்கள்.


தங்கவேல்,
ஊருக்கு செல்லுமுன் இந்த முகவரி கிடைத்திருந்தால் நிச்சயம் சென்று பார்த்திருப்பேன், சற்று தாமதமாகிவிட்டது.

இந்த முறை மருத்துவ உதவி தேவைப் படும் அனுக்ஷா என்னும் ஒரு சிறு குழந்தைக்கு உதவியுள்ளேன், அடுத்த முறை சுவாமியின் ஆஸ்ரமத்துக்கு என்னாலான நன்கொடை நிச்சயம் உண்டு.

மேலும் விவரங்கள் தேவைப் பட்டால் உங்களை தனிமடல் மூலம் தொடர்பு கொள்கிறேன்.

நன்றி..
.
 
Last edited by a moderator:
நமக்கு கடவுள் கொடுக்கும்போது.. தேவைப்பட்டோருக்கு கொடுப்பதில் இன்பமே... தங்களின் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள்
 
Last edited:
மிக்க நன்றி இராசகுமாரன். தாங்கள் நலமுடன் வாழ இறையிடம் பிரார்த்திக்கிறேன்.
 
திருப்பூர் காது கேளாதோர், மற்றும் வாய் பேசாதோர் பள்ளி
இங்கு பல குழந்தைகள் உள்ளனர்
எனக்கு தெரிந்து பல இலங்கையினரும் உதவிக்கொண்டிருக்கும் பள்ளி
மேலும் உதவிகள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டேன்.

உதவ முன் வருபவர்கள்
www.theo-deaf.com சென்று பார்க்கவும்
 
எனக்கு ஒரு உதவி தேவை

கமல்ஹாசனின் எய்ட்ஸ் நோயாளிக்கு நிதி உதவி எப்படி அனுப்புவது,யாராவது விவரம் தெரிந்தால் சொல்லுங்க.
 
Back
Top