pradeepkt
New member
திருவாசகம் சிம்பொனி - இசைஞானி இளையராஜா
இந்தப் பதிப்பை எந்தப் பகுதியில் போடுவதென்று தெரியாமல், ஆன்மீகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். கண்காணிப்பாளர்கள், மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரும்பினால் வேறு எங்கும் மாற்றிக் கொள்ளலாம்.
தமிழால் இசையால் எந்தையை நுந்தையை சிந்தையை ஒருமைப் படுத்தித் தொழுத மாபெரும் காப்பியம் திருவாசகம். ?திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்? என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை. அதற்கு இசை வடிவம் கொடுப்பதற்கு தன்னை மறக்கும் தன்மை, இறையிடம் முழுதாய்த் தன்னைக் கொடுக்கும் உண்மை அவசியம்.
அந்த உண்மையை உளமார உணர்ந்தே இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இசைஞானி என்று அன்று கலைஞர் கொடுத்த பட்டம் இன்று மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. அற்புதமான கிழக்கு ? மேற்கு இசை இணைப்பு, மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்ப்பு, என்று அனைத்துமே மிக மிக அருமை. தமிழ்ப் பதிகங்களில் மேற்கத்திய இசை வடிவத்தைக் கச்சிதமாய்க் கலந்ததில் ஒன்றும் வியப்பேயில்லை.
எனக்கு சிம்பொனி வடிவம் என்றெல்லாம் அதிகமாய் கருத்துகள் இல்லை. எனவே ஒரு சாதாரண ரசிகனாய் என் பார்வையை உங்கள்முன் படைக்கிறேன். எந்தப் படைப்பும் நூறு விழுக்காடு சிறந்த படைப்பென்று சொல்லி விட இயலாது. மக்களைச் சென்றடையும் எந்த வடிவிற்கும் குற்றம் குறைகள் இருக்கும். இதை இசைஞானியும் உணர்ந்தே இருக்கிறார். இதற்கு எந்தப் பெருமையும் அந்த நாதனின் தாளைச் சென்றடையும் என்கிறார். இதோ என் பார்வை. இதற்கு மதிப்பென்று நான் எதையும் கொடுக்கவில்லை. அது மக்கள் பார்வைக்கு!
1. பூவார் சென்னி
பாடியவர்:இளையராஜா.
இந்தப் படைப்பின் பெரும்பாலான பாடல்களை இளையராஜாவே பாடி இருக்கிறார். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. மெல்ல மேற்கத்திய தோல் வாத்தியங்களும் வயலின்களும் முழங்க மெல்ல ?பூவார் சென்னி? என்று இளையராஜாவின் குரல் எழும்போது அந்த உணர்விலும் உச்சரிப்பிலும் மெல்ல மெல்ல உள்ளாழ்கிறோம். அனைத்து கர்வங்களையும் அறுக்கும் இப்பதிகங்கள் எல்லா புகழும் புயங்கன் ஆள்வான் என்று முடியும் வரை கட்டிப் போடுகிறது இந்தப் பாடல். இந்தப் பாடலில் எந்த ஆங்கிலக் கலப்பும் இல்லை. பதம் பிரித்து இசை குரலை அமிழ்த்தாமல் ஒவ்வொரு வார்த்தையும் காதுகளை வந்தடைய தனிமையில் அமர்ந்து கேட்க இப்பாடல் கொள்ளை கொள்ளும் நம் மனதை!
2. பொல்லா வினையேன்
பாடியவர்:இளையராஜா, ராய் ஹார்கோர்ட்.
இந்தப் பாடல் இந்தத் தொகுப்பின் மிக நீண்ட பாடல். அங்கங்கு ஆங்கில ஆக்கங்கள் தலை காட்டுகின்றன. ?நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!? என்ற நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய பதிகங்கள். குழுவினரின் குரல் கூடத் தங்கள் பங்கை அருமையாய்ச் செய்திருக்கின்றன. மெதுவாய்ப் பொல்லா வினையேன் என்று ஒரு குரலில் ஆரம்பிக்கும் பாடல் செல்லச் செல்ல முடிவில் நமச்சிவாயத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம் குழுவினரும் சிம்பொனி குழுவினரும் முறையே குரலுயர்த்தி வாழ்த்த உடல் சிலிர்க்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பும் அத்தனைக் கச்சிதம். அதிகமாய்த் தோல் வாத்தியங்கள் தலை காட்டாது குழுவினரும் வயலினும் மட்டுமே வைத்துச் சிறந்திருக்கிறது இந்தப் பாடல். வசன நடையாய் நகரும் பாடல் சட்டென்று ஒரு மெல்லிசையாய் ?மாசற்ற சோதி! மலர்ந்த மலர்ச்சுடரே? என மலர்வது சுகம்! இது எனக்குப் பிடித்த ரகம்!
3. பூஏறு கோனும்
பாடியவர்:இளையராஜா, பவதாரிணி.
இந்தப் பாடலில் கர்நாடக இசையின் மேற்கத்திய சங்கமம்தான் சிறப்பு. இரண்டு பதிகங்களை பவதாரிணி பாட மீதியை இளையராஜா பாடி இருக்கிறார். மிகச்சில இடங்களில் உச்சரிப்பு சறுக்கினாலும் கவனமாகப் பாட வேண்டும் என்ற முனைப்பிலேயே உணர்ச்சியைக் கைவிட்டு விட்டார் பவதாரிணி. அது உணர்ச்சிப் பிழம்பான இளையராஜாவோடு பாடும்போது தெளிவாகத் தெரிகிறது. ?சென்றூதாய், கோத்தும்பி? என்று இறைவனுக்குத் தூதனுப்பும் பாடல்கள். மேலும் விளக்கங்கள் ராகவன் கொடுக்கலாம். நடு நடுவில் இருபது வினாடிகள் இடைவெளி விட்டுப் பாடல் தொடர்கிறது. மற்ற பாடல்களைக் கவனிக்கையில் இந்தப் பாடல் அவ்வளவு சிறப்பாகத் தோன்றவில்லை!
4. உம்பர்கட்கரசே
பாடியவர்:இளையராஜா.
எந்நாட்டவர்க்கும் இறைவனைச் ?சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்து அருளுவதினியே?? என்று கேட்கும் பாடல்கள். இவையும் நாம் சிறு வயதில் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் படித்தவையே! ஒவ்வொரு வரியைப் பாடி முடித்ததும் இசை தொடர்கிறது. ஆனால் நிறைய மேற்கத்திய வாசனை. ?தெள்ளிடத் தடியார் சிந்தையும் புகுந்த செல்வமே! சிவபெருமானே!? என்று உளமார உருகியிருக்கிறார் இளையராஜா. தனிமையில் கேட்டு நாமும் உருக வேண்டிய பாடல் இது!
5. முத்து நற்றாமம்
பாடியவர்:உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி, குழுவினர்.
இத்தனை பாடகர்கள் பாடியிருந்தாலும் பெரும்பாலான வரிகளைக் குழுவினரே பாடி இருக்கின்றனர். இந்தத் தொகுப்பின் மிக உற்சாகமான பாடல் இது. இறைவனுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கும் போது பாடும் அருமையான பாடல்கள். அதற்கு இசையும் உற்சாகமாகப் பொங்கிப் பிரவாகிக்கிறது. அங்கங்கு தோல் வாத்தியங்கள் மெல்லியதாய்த் தன் இருப்பைத் தெரிவிக்க மற்ற மேற்கத்திய வாத்தியங்கள் குரலா குழலா என்று தெரியாத வண்ணம் கலக்கின்றன. அந்த உற்சாகம் சட்டென்று நம்மைத் தொற்றுகிறது, ஒற்றுகிறது, பற்றுகிறது.
6. புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்
பாடியவர்:இளையராஜா.
சிவனை நினையாத அன்பிலாதார், சிவனைத் தொழாதார், வெண்ணீறு அணிகிலாதார் என்பாரை மட்டுமே கண்டஞ்சுவேன் என்று வீர சைவராய் மாணிக்க வாசகர் உற்பத்தி செய்த பாடல் களஞ்சியங்கள் இவை. ஒரு பாடலுக்கு இசையமைக்கும் முன் வார்த்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை இசைஞானியின் வாயிலாகவே முன் கேட்கலாம். நல்ல மெல்லிசை மனதை வருடுகிறது. அப்படியே எண்பதுகளில் இசைஞானி போட்ட பாடல்களை ஞாபகப் படுத்துகிறது மெட்டு.
இந்த அனைத்துப் பாடல்களையும் கேட்ட பிறகு என் கருத்து இது!
இயைந்துச் செய்சிறுசெயலும் மனதைக் கிறக்கும் - அதில்
இறைத்தன்மை கலந்திருப்பின் மக்களை உருக்கும்
இத்திருவாசகம் மனத்தில் கறைகளைக் கறக்கும்
இந்நூற்றாண்டைக் கடந்திது கண்டிப்பாய்ச் சிறக்கும்
அன்புடன்,
பிரதீப்