அமுத வாக்கு..

இன்றைய அமுதவாக்கு.

நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்..மெய்யறிவு உன்னைக் காத்துக் கொள்ளும்..நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி அது உன்னைப் பாதுகாக்கும்..
 
நன்றி தேம்பா... தூய தமிழில் படிக்கும்போது சில வரிகள் புரியவில்லை...
 
எனக்கும் முதலில் அப்படி சற்று கடினமாகத்தான் இருந்தது அறிஞரே!,,தற்போது பழகிவிட்டது...
 
தொடர்ந்து அமுதவாக்கினை படித்து வருகிறேன் சகோதரி.

சகோதரி அது என்ன நுண்ணறிவு, மெய்யறிவு.

விளக்கம் கொடுங்க, இல்லை என்றால் இராகவன் அண்ணா கொடுக்கட்டும்.
 
அண்ணா ஆங்கிலப் பதிப்பு பார்த்துவிட்டு சரியான விளக்கம் கொடுக்கிறேன்...
 
நுண்ணறிவை பகுத்தறிவு என்றும் சொல்லலாம். இது ஒவ்வொரு செயல்களையும் பகுத்தாய்ந்து உணர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. புறவியல் வாழ்வோடு தொடர்புடையது.

மெய்யறிவு என்பது அகவியல் வகையானது. இது புலன்களின் உணர்வுகளைத் தாண்டி நமக்குள் இருக்கும் அக அடையாளங்களை தெரிந்துகொள்ள உதவக் கூடியது .
 
பிரியன் said:
நுண்ணறிவை பகுத்தறிவு என்றும் சொல்லலாம். இது ஒவ்வொரு செயல்களையும் பகுத்தாய்ந்து உணர்ந்து கொள்ளப் பயன்படுகிறது. புறவியல் வாழ்வோடு தொடர்புடையது.

மெய்யறிவு என்பது அகவியல் வகையானது. இது புலன்களின் உணர்வுகளைத் தாண்டி நமக்குள் இருக்கும் அக அடையாளங்களை தெரிந்துகொள்ள உதவக் கூடியது .
மிகவும் சரி. எதையும் மேலோட்டாமாகப் பார்க்காமல் நுணுக்கி ஆராய்ந்து தெளிவது நுண்ணறிவு. அது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது. புறப்பொருட்களில் மட்டுமே செல்லுபடியாகும். அதுவும் குறிப்பிட்ட அளவிற்கு. ஆகையால் அன்றாட வாழ்வியல் காரணங்களுக்காக இவற்றைப் பயன்படுத்தலாம்.

மெய்யறிவு என்பது உண்மையான அறிவு. அகத்தையும் புறத்தையும் தாண்டிச் செல்வது. கட+உள் அனைத்தையும் கடந்தும் உள்ளும் அறிவது. ஆகையால் இது கடவுளால் மட்டுமே கொடுக்கப் படுவது. ஆகையால் அது இன்பத்தை மட்டுமே கொடுக்கும்.

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் உணர்வித்ததுதான்" என்கிறார் அருணகிரி.

அமுத வாக்கியமும் அதைத்தான் சொல்கிறது. நுண்ணறிவு காவலாக மட்டுமே இருக்கும். ஆனால் காக்கும் என்று சொல்ல முடியாது. அதனால்தான் மெய்யறிவும் தேவைப் படுகிறது.

ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். வீட்டிற்கு நாய் காவல். ஆனால் அந்தக் காவலையும் மீற முடியும். நமக்குக் கடவுள் காவல் அல்ல. கடவுள் நம்மைக் காக்கிறார். அதை யாராலும் மீற முடியாது. புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

இறையருளால் எழுதப் பட்ட நூல்கள் அனைத்தும் சொல்லும் கருத்துகள் ஒன்றாக இருப்பது இதிலிருந்து விளங்குகிறது. பைபிளில் எனக்குப் பழக்கமில்லை. சகோதரியின் அமுத வாக்குகள் உதவுகின்றன.
 
பரஞ்சோதி said:
தொடர்ந்து அமுதவாக்கினை படித்து வருகிறேன் சகோதரி.

சகோதரி அது என்ன நுண்ணறிவு, மெய்யறிவு.

விளக்கம் கொடுங்க, இல்லை என்றால் இராகவன் அண்ணா கொடுக்கட்டும்.

அண்ணா விவிலியத்தின் ஆங்கிலப் பதிப்பில் நுண்ணறிவு என்பது Insight எண்றும் மெய்யறிவு என்பது Understanding என்றும் கொடுக்கப்பட்டுள்ளது...
 
ராகவன் அண்ணா கூறும் விளக்கம் சரியாக இருக்கும் எனத் தெரிகிறது..பரம்ஸ் அண்ணா தங்களுக்கு விளக்கங்கள் போதுமா...
 
இன்றைய அமுதவாக்கு.

நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு அது(நுண்ணறிவு) உன்னைத் தப்புவிக்கும்..
 
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்

எங்கெங்கு சென்றாலும் நன்மையே செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் திருக்குறள்.
 
Back
Top