Honeytamil
New member
கமல்-50 க்கு பிறகு கோடம்பாக்கத்திலே புது பீவர் கிளம்பியிருக்கு. ஷாம் ஒம்போதரை, சங்கவி புளியோதரை என்று ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொண்டு விழா நடத்த திட்டம் போடுகிறார்களாம். லேட்டஸ்ட்டாக சிம்பு கலைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைய போகிறதாம். இதனால் சிம்பு -25 என்ற நிகழ்ச்சியை நடத்தி, இன்டஸ்ட்ரியை கலங்கடிக்கலாமா என்ற திட்டத்திலிருக்கிறது அவரது வட்டாரம்.
இன்னொரு பக்கம் சின்னத்திரையின் முடிசூடா ராணியாக இருக்கும் ராதிகா, திரைக்கு வந்து முப்பது வருடங்கள் முடியப் போவதாகவும், அவருக்கும் ராதிகா-30 என்றொரு விழா எடுக்கலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.
ஏன் இப்படி ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்? எல்லாம் தொலைக்காட்சிகள் படுத்தும் பாடு. மக்களை மகிழ்விக்க எதையாவது செய்ய வேண்டும் என்று மண்டையை குடைந்து கொள்கிறார்கள். கமல் போன்ற மாபெரும் கலைஞர்களுக்கு விழா எடுக்கும் போது ரசிகர்களுக்கும் அது பெரிய திருவிழாவாக இருக்கிறது. திரையுலகமே ஒன்று சேர்ந்து கொண்டாடிய கமல் விழா பற்றி கூட தனியாக ஒரு சர்ச்சை, இறக்கை கட்டி அலைகிறது கோடம்பாக்கத்தில். (அந்த மேட்டருக்குள் நுழைந்தால் ஏகப்பட்ட திட்டுகள் விழும் என்பதால் கப்சிப்) ஆனால், இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருப்பதால், இதே ஸ்டைலில் பல லட்சங்களை இறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம் வேறு பல தொலைக்காட்சிகள்.
போகிற போக்கை பார்த்தால் வையாபுரிக்கு கூட விழா எடுப்பார்கள் போலிருக்கிறது. ஹ¨ம்ம்ம்ம்ம்...:sprachlos020: