அண்ணே... கண்மணி, கமலோட நடிப்பை ரசிக்கிறாங்க.... இதை வெச்சு பார்த்தா,
கமலோட ரசிகர்கள் எப்படியெல்லாம் கமலை ரசிக்கிறார்கள்?
1. கமலின் மிகத்திறமையான நடிப்பு
2. கமலின் வேறுபட்ட கதைக்களம்
3. கமலின் வித்தியாசமான முயற்சிகள்.
இந்த மூன்றின் கீழ் ரசிகர்கள் வருவார்கள்... நடிப்பை ரசிக்கத் தெரிந்த யாராக இருந்தாலும், அது கண்மணியாக இருந்தாலும் கமல் மட்டுமல்ல, மற்ற நடிகர்களின் திறமையான நடிப்பையும் ரசிப்பார்கள்... எனக்குத் தெரிந்து கமல்ரசிகர்களே, “காஞ்சிவரத்தில் பிரகாஷ்ராஜ் நல்லா நடிச்சான்” “பிதாமகனில் சூர்யா நல்லா நடிச்சான்” என்று சொல்லக் கேட்டிருக்கிரேன்.
ஆனால் இந்த வேறுபட்ட கதைக்களம், வித்தியாசமான முயற்சி ஆகியவற்றில்தான் இப்போ பிரச்சனையே...
அதற்கு அவர் துளியும் சொந்தமில்லாதவர்... ஜஸ்ட் ஒரு கைமாத்தி விடுபவர் மாதிரி, அங்கிருபப்தை இங்கு கொண்டுவருகிறார்... சொந்தமாக யோசிக்க எண்ணம் மட்டுமல்ல, திறமையும் கூட கமலுக்குக் கிடையாது என்பதை எல்லாரும் உணரவேண்டும்....
சரி.... நீங்களே சொல்லுங்கள்... ஏன் கமலால் தனது சொந்த திறமையை முழுமையாக உபயோகப்படுத்தி அல்லது ஒரு சிறந்த எழுத்தாளரின் கதையை உபயோகப்படுத்தி சினிமா எடுக்க முடியவில்லை???
( ஹேராம், ஆளவந்தான் என்று சொல்வீர்கள். அவைகளும் காப்பியடிக்கப்பட்ட லிஸ்டில் இருப்பதை இத்திரியிலேயே பார்க்கலாம்..)
(பி.மு. குறிப்பு: மருத நாயகம் வந்தாலொழிய அதைப் பற்றி பேசமுடியாது!!)
கமலிடம் மட்டுமில்லை. நமக்குத் தெரிஞ்ச அத்தனை பேரிடமும் நமக்கு எதாவது ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டே இருக்குது. அதைச் சொல்லிச் சொல்லியே பலபேரை நாம டென்சனாக்கிடறோம். டென்சனாகிடறோம்.
இத்திரியில் அறிவுரை கூறுவதெல்லாம் கமலுக்கு அல்ல. கமலை மிகப்பெரிய சக்தி என்றும் திரையுலகை வாழ்விக்க வந்த கடவுள் என்றும் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு... அவர்களிடம், “கமல் அப்படியெல்லாம் இல்லை” என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனில், கமலிடம் எதிர்பாராதீர்கள் என்பது மறைமுகமாக அர்த்தமாகிவிடுகிறது. ஆக, தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் எனக்கு சார்பாக எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது!!
கமல் என்றால் வித்தியாசம் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் வரை கமல் காப்பியடித்துக் கொண்டுதான் இருப்பார்.
உண்மையில் நாம் கடமைகளைச் செய்யணும். அடுத்தவர்களின் உரிமைகளை மதிக்கணும். இதுதான் அமைதியான நிம்மதியான, சந்தோஷமான, நிறைவான வாழ்க்கைக்கே அஸ்திவாரம்.
இதைத்தான் பதிவு முழுக்க சொல்லிக் கொண்டிருக்கிறேன். நமது கடமைகளைச் சரிவரசெய்யணும்... அடுத்தவர் உரிமைகளை மதிக்கணும்!! கமல் அப்படி செய்கிறாரா?? அடுத்தவருக்குச் சொந்தமான உரிமையை மதித்து தனது படங்களில் நன்றி போடுகிறாரா?? இல்லை... எனில் அவர் தொழில்ரீதியாக உரிமைகளை மிதிப்பவர். இந்த கருத்துப்படியும் நீங்கள் எனக்கே சார்பாக வாதாடுகிறீர்கள்!
உதாரணமா அந்த நீலவானம் பாடல்..
அவருக்கு அந்தக் காட்சி பிடித்து அதை நாமும் செய்யணும் என்று ஆசைப்பட்டு இருக்கலாம்,
அதை இரவிகுமார்கிட்ட சொல்லி, அவர் அதில வருமானம் இருக்கு என்று உணர்ந்து சரி செய்து விடலாம் என்று சொல்லி இருக்கலாம்.
தவறில்லை... தவறேயில்லை... ஆனால் ஒரு உத்தியைக் கொண்டு இன்னொன்றுதான் படைக்கவேண்டுமே தவிர, இருப்பதையே எழுதக்கூடாது. சிறுகதைக்கு பல உத்திகள் உள்ளன. குறிப்பாக இறுதி வார்த்தையில் மொத்த சிறுகதையின் முடிவும் மாறுவது ஒருவகை உத்தி. அதைப் பயன்படுத்தி இன்னொன்றுதான் உருவாக்கவேண்டுமே தவிர, இருப்பதையே காப்பியடிக்கக் கூடாது.. இன்னும் சொல்லப்போனால் வெண்பா என்பது ஒரு உத்தி... அதற்காக ஔவையாரின் ஒரு பாடலை அப்படியே எடுத்துக் கொண்டு தனது என்று சொல்லக் கூடாது!!
சோ, முன்பே சொன்னதுதான்.... தழுவுங்கள்!!! நன்றாகத் தழுவுங்கள்!!!! ஆனால் மூலத்திற்கும் காப்பிக்கும் வித்தியாசப்படுத்தித் தழுவுங்கள்!! அப்படியே ஒற்றுமை இருந்தால் மன்சாட்சிப்படி நன்றி கூறி தழுவுங்கள்
கதையை தமிழ்படுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஏத்த மாதிரி நகாசு வேலைகள் செய்து அதில் அவருக்குத் தெரிந்த சில பல நுணுக்கங்கள் செஞ்சு கடை விரிக்கிறார். அவர் ஆசையை அவர் நிறைவேற்றிக் கொள்கிறார்.
அதே அதே!! முற்றீலும் உண்மை!! அப்படியெனில் கமலை ஒரு பெரிய ஐகானாக நாம் பார்ப்பது நமது தவறுதானே??? அப்படியெனில் கமலைவிட, கமலை உயர்த்திப் பிடிப்பவர்களே குற்றம் செய்கிறார்கள்.. கமலிடம் ஒரிஜினல் படைப்பு வேண்டி நிராகரித்தால், நிச்சயம் தனது திறமையை அல்லது இன்னொரு கதாசிரியன் திறமையை மதிப்பார்!!!
கமல் காப்பியடிச்சா தமிழ் சினிமாவுக்கு கெட்ட பேரு என்பது நம்ம ஆசை நிறைவேறாதா கடுப்புதானே தவிர வேற ஒண்ணுமில்லை.
தமிழ் சினிமாவுக்கு நல்ல பெயர் வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு சினிமா ரசிகர்களுக்கும் உண்டு!! அதைக் கெடுக்கும் கமல் போன்ற காப்பிகேட்டுகளால் எங்களைப் போன்றவர்கள் கடுப்பாவதில் தவறேயில்லை.... மிகத் துளி தவறுகூட இல்லை!!!