காப்பின்னு எப்படி சொல்றீங்க ஆதவா....இன்னைக்கு தமிழ்நாட்டுல நூத்துக்கு 60 பேர் ஆங்கிலம் தெரியாதவங்க(படிச்சவங்களையும்தான் சொல்றேன்). உங்களப்போல தேடித்தேடி நல்லப் படங்களப் பாக்காதவங்க. அவங்களுக்கு நதிமூலம், ரிஷிமூலம் பாக்கத் தெரியாது...பாக்கவும் நேரமில்ல....24 மணி நேரமும் இண்டெர்நெட்டுக்கு முன்னால இருக்கிறவங்க சொல்றதக் கேக்கவும் அவங்களுக்கு நேரமில்ல. திரையிலப் பாக்கறதை அனுபவிக்கறவங்க.
சமஸ்கிருத ராமயாணத்தைக் காப்பிப் பண்ணக் கம்பரைப்போல(நன்றி லெனின்) ஏன் கமல் இருக்கக்கூடாது...அவர் மேல மட்டும் ஏன் உங்களுக்கு இவ்ளோ....
எண்ட்டெர்டென்மென்....பொழுதுபோக்குன்னு வந்துட்டாலே அது காதல் மாதிரி....காதல்லயும், போர்லயும்.....எந்தக் கட்டுப்பாடும் கிடையாது...வுடுங்க......பாருங்க...முடிஞ்சா. எஞாய் பண்ணுங்க....முடிஞ்சா....
பாரதியார் என்ன சொன்னார்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.
அதைத்தானே கமல் செஞ்சுகிட்டு இருக்கார். பாரதி சொன்னதை செய்தால் ஆதவா அழுவதா?
அவரை விடுங்க.. நம்ம மன்றத்துச் சாம்பவி என்ன சொன்னாங்க?
வேண்டுமென கேட்டால் நான் வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான் வெந்திடுவேனோ.... !
நானில்லா உன்கவிதை வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை வெண்டாமரையே... !
நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே! கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..
ஆக
அப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே
அப்படி நான் மட்டுமே இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வெண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே!(வெண்டாமரையே)
அதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..!! ஆகவே உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் தமிழில் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நான் பழமாவேன்... இல்லாவிட்டால் வெம்பி உதிரும் பிஞ்சுதான்.
கமல் படம் சொல்லும் செய்திகள் சமூகத்திற்கு தேவையா இல்லையா என்று ஆராய்ந்தால் அதில் அர்த்தம் இருக்கு. அதன் மூலம் என்ன என்று ஆராய்ந்தால் அர்த்தம் இருக்கு. ஆனால் குற்றம் சுமத்தறது தப்பு!!!