கமல்ஹாசனின் (காப்பி)யங்கள் - பகுதி 5

ஆதவா

New member
முன்குறிப்புகள்

1. முன்பே சொல்லிவிடுகிறேன். இப்பதிவின் மூலம் யாரையும் நோகடிக்கும் எண்ணமில்லை. ஆனால் எல்லாரும் சிந்திக்கவேண்டிய விஷயம். குறிப்பாக கமலஹாசனை தனது ஆதர்ஷ நாயகனாக நினைக்கும் அவரது ரசிகர்கள்.. நம் மன்றத்திலும் கமல் ரசிகர்கள் உண்டு என்பதால் அவர்களும் தன் பங்கு நியாயத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

2. இப்பதிவு முழுக்க முழுக்க கருந்தேள்.காம் (http://www.karundhel.com) சென்ஸ் ஸ்பாட் (http://jackofall.blogspot.com) ஆகிய தளங்களில் உள்ள கமல்ஹாசனைப் பற்றிய கட்டுரைகளைச் சார்ந்தது. ஆகவே, பதிவின் மூலமான அவர்களுக்கு முதலில் நன்றி. எடுத்து வழங்குவது மட்டுமே என்னுடைய வேலை.

3. இந்த விவாதம் முழுக்க கமல்ஹாசனின் நடிப்பு, சினிமா சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டுமே பேசப்படும். கமல்ஹாசனின் அந்தரங்க நடவடிக்கைகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், மற்றும் தனிநபர் தாக்குதல் குறித்தெல்லாம் பேசப்படாமல் இருப்பது வரவேற்க்கப்படும்.

சரி இப்போது விவாதத்திற்குள் செல்லலாம்.

Plagiarism என்று சொல்லப்படும் அறிவு சார்ந்த சொத்து திருட்டு என்பது பரவலாக எல்லா மொழியிலும் குறிப்பாக இந்திய சினிமாக்களில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது போல பலவருஷங்களாகவே இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே... அதிலும் தற்சமயம் உள்ள இணைய தொடர்புகளின் வழியே எல்லா திரைப்படங்களையும் வெகு எளிதாக கண்டுவிடமுடிகிறது. ஒவ்வொரு சினிமாவையும் எடை போடுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக எத்தனையோ விஷயங்கள் வந்துவிட்டன. ஆக காப்பியடித்தல் என்பது இன்னும் கனஜோராக நடைபெற்று வரும் என்பதில் ஐயமில்லை.

சமீபத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் எண்ட் கிரடிட்டில் பிலிமோகிராபி என்று சில படங்களின் பெயர்களையும் அப்படங்களின் இயக்குனர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார் ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றி மாறன். அதில், cache, Amores perros, Babel, தேவர்மகன், விருமாண்டி, பருத்திவீரன் போன்ற படங்களின் இன்ஸ்ப்ரேஷனிலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக நாம் அறியலாம். ஆடுகளம் எந்த படத்தின் காப்பியுமல்ல. ஒரு இன்ஷ்ப்ரேஷன்,, தூண்டுதல் மட்டுமே. அந்த இயக்குனருக்கு அதனைத் தெரிவிக்க வேண்டுமென்று விருப்பம் இருந்திருக்கிறது. இது அவரின் நேர்மையையும் ஒழுக்கத்தையும், சினிமா மீதுள்ள காதலையும் காட்டுகிறது. ஆனால் கமலுக்கு அந்த நேர்மை இருக்கிறதா???

கமல்ஹாசன்!!! ஒவ்வொரு தமிழ்ரசிகருக்குள்ளும் கமல் பற்றிய ஒரு அதீத பிம்பம் இருக்கிறது. அவர் நல்ல நடிகர், திறமையான இயக்குனர், வித்தியாசமான கதைக்களனைக் கையாள்பவர், தொழில்நுட்ப ரீதியான பல புதுமைகளை தமிழ் திரையுலக்கு அளித்தவர், வணிக சினிமாக்களிலிருந்து தள்ளி ஒரு கலைப்படைப்பு ஒன்றினைத் தர கமலா மட்டுமே முடியும் என்ற பிரமிப்பு எல்லாரிடமும் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கமல் சொந்தமானவரா? கொஞ்சம் ஆராய்ந்தால் கமல் தனது தொழிலை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கிறார் என்பது புரியும். கமல்ஹாசன் எனும் பிம்பம் தமிழ் மட்டுமல்ல தென்னிந்திய சினிமாக்களின் மிக உயரிய பிம்பம். பல புதிய இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் ரோல்மாடலாக விளங்குகிறார். கமல் ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்தும் போது மற்றவர்களும் அதைப் பின்பற்ற தயங்குவதேயில்லை. ஏனெனில் கமல் எனும் உயரிய பிம்பம்!! இந்த பிம்பத்திற்குள் நெடியடிக்கும் விஷயமொன்று இருப்பது சாதாரண கமல் ரசிகர்களுக்குத் தெரியவாய்ப்பேயில்லை. ஏனெனில் அப்படியொரு திறமைக்காரர் இவர்.

முதலில் அவரது கடைசி படத்திலிருந்து செல்லுவோம்.

மன்மதன் அம்பு. இத்திரைப்படத்தை இந்நேரம் மன்றத்திலுள்ள அனைவரும் பாத்திருப்பீர்கள். ஒரு காதலன், கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் காதலியை வேவு பார்க்க உளவாளி ஒருவனை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். உளவாளியும் காதலியும் ஒருசமயத்தில் காதலிக்கத் துவங்க, தொடர்ந்து வரும் காதலனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம் இது. சரி, இதிலென்ன கமல் சினிமாவைக் கெடுத்துவிட்டார்?

இத்திரைப்படம் முழுக்க முழுக்க Romance on the High Seas எனும் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி. கணவன் கப்பல் பிரயாணத்தில் செல்லும் தன் மனைவியை சந்தேகப்பட்டு வேவு பார்க்க ஒரு உளவாளியை அக்கப்பலுக்கு அனுப்புகிறான். கப்பல் பிரயாணத்திற்கு முன்னர் மனைவி வேறொருத்தியை அனுப்பிவிட, உளவாளியும் இன்னொருத்தியும் காதலிக்கத் துவங்க தொடர்ந்து வரும் கணவனின் குழப்பங்கள் நிறைந்த திரைப்படம்...

இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள், மன்மதன் அம்புவில் காதலன் காதலி, Romance on the High Seas இல் கணவன் மனைவி, தவிர, மனைவிக்குப் பதில் இன்னொருத்தி செல்லுகிறாள்... மற்றபடி கதையின் முக்கியமான கரு (சந்தேகப்பட்டு வேவு பார்த்தல்) மற்றும் கதைக் களன் (க்ரூஸ்) போன்றவை அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் சினிமா உலகிலேயே இலக்கியங்கள் படிப்பவரும், பல உலகசினிமாக்கள் பார்ப்பவருமான கமல்ஹாசனுக்கு இந்த படம் பற்றி தெரியவாய்ப்பில்லை என்றும், தற்செயலானது என்றும் 0.0001% கூட சொல்ல முடியாது. ஒரு சாதாரண ரசிகருக்கே மூலப்படம் தெரியும் பொழுது அனைத்தும் அறிந்தவருக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமாகவே படுகிறது.

கதைதானே காப்பியடிக்கப்பட்டிருக்கு என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டால்??

அது தவறில்லையா??/ ஒருவரின் அனுமதியில்லாமல் அவரது கதையைத் திருடலாமா? பொருள் திருட்டுமட்டும் குற்றமல்ல, அறிவுசொத்துத் திருட்டும் ஒரு குற்றமே... மன்றத்தில் சிறப்பான கதைகளை எழுதும் சிவா.ஜி அண்ணா, கீதம் அக்கா, தக்ஸ் போன்றவர்களின் கதையை அப்படியே திருடி அல்லது, மூலக்கதைப் போக்கை மட்டும் மாற்றி இன்னொருவர் விற்று சம்பாதித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கோபப்படமாட்டீர்களா? அல்லது இன்னொருவன் தின்றுவிட்டுப் போகட்டும் என்று சொல்வீர்களா?? அதைவிடுங்கள், உங்களது வெற்றிகரமான ஒரு ஐடியாவை இன்னொருவர் திருடிக் கொண்டால் நீங்கள் உண்மையிலேயே என்ன நினைப்பீர்கள்?? சந்தோஷப்படுவீர்களா??? ஆடுகளம் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனது இன்ஸ்ப்ரேஷன் (கவனிக்க, படக்கதைகூட தழுவல் இல்லாத நிலையிலும்) படங்களைப் பட்டியலிடும் பொழுது, ஏன் கமலால் தான் இந்த படத்தின் கதையைக் கையாண்டோம் என்று சொல்லமுடியவில்லை?? தனது சொந்தக் கதை என்று ஏன் “அழுத்தி” சொல்லவேண்டும்...

“மன்மதன் அம்பு வின் இயக்குனரிடம் கேட்கவேண்டிய கேள்வியை ஏன் கமலிடம் கேட்கிறாய்” என்று யாரோ டைப்படிக்க எண்ணியிருப்பதாக கேள்வி... அப்படி டைப்படிக்கும் முன் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். அதற்கும் என்னிடம் பதில் இருக்கிறது.

அடுத்து, இந்த ஒரு படம்தானே ஆதவா என்று ஆதங்கப்படுபவர்களும் கொஞ்சம் யோசித்துவிடுங்கள். ஏனெனில் இன்னும் பல கமலின் படங்கள் காப்பியடிக்கப்பட்ட, கமலின் சொந்த சரக்கற்ற படங்களே என்று ஆதாரத்துடன் நிரூபிக்க இயலும்... அவ்வளவு ஏன், கமலின் நடிப்பு கூட சுயநடிப்பே கிடையாது என்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்...

இப்போதைக்கு கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டு பிறகு தொடர்கிறேன். அதற்குள் மக்கள் தங்களது கருத்துக்களை, முக்கியமாக விவாதத்தைத் தொடரும்படி கேட்டுக் கொள்கிறேன்!!! உங்களது பங்களிப்புக்கு ஏற்ப நிச்சயம் தொடருவேன்.... ஆதாரத்துடன்
 
Last edited:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இப்போவே கண்ண கட்டுதே..!!! எந்தளவுக்கு பாராட்டுக்கள் பெற்றாரோ அந்தளவுக்கு விமர்சனங்களும் கண்டனங்களையும் பெற்றவர் தான் கமலஹாசன். இதை தனியே விவாதிக்கும் அளவுக்கு என்ன இருக்குதுன்னு தான் தெரியவில்லை.

அடிதடி இல்லாமல் விவாதம் நடந்தால் சரி!:):)
 
ஏன் சார்? ரஜினி பண்ணின பெரும்பாலான படங்கள் அமிதாப்பச்சன் நடித்ததை பார்த்தது காப்பி அடிச்சது தானே. சந்திரமுகி கூட அப்படித்தான்.
கமல் பண்ணின அவ்வை ஷண்முகி கூட ஆங்கில படத்தின் தழுவல் தான்..
சூர்யா நடித்த கஜினி மற்றும் இதர படங்களும் இதற்க்கு விதி விலக்கல்ல...
என்னை பொறுத்த வரை கமல் ஒரு சிறந்த நடிகர். கமலுடைய நம்மவர், ஹே ராம் போன்ற படங்கள் நமக்கு பிடிக்கவில்லையே...
மேலும் சொல்வேன்
 
அந்த படங்களில் பட்டியல் முன்பு இதயம் அண்ணாவால் மன்றத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது..

கமல் காப்பி அடித்தார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், அந்த படங்களுக்கு அவர் நன்றி கூறுவதுமில்லை என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் கமல் இந்த தமிழ் சினிமாவுக்கு மேற்கு திசை காட்டியவர் என்று சொல்வதில் எந்த தவறுமில்லையே, வேறு பட்ட ரசனையை அவர் நமக்கு வழங்கினார், அதில் தவறிருக்கோ இல்லையோ, ஆனால் அவர் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஒரு சின்ன புள்ளி வைத்தார் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்..
 
சரன், ஒட்டுமொத்தமாக பேசினால் நிறைய திரைப்படங்கள் வெளிவரும்... ஆனால் கமல் படங்களோடு ஒப்புநோக்குகையில் சதவிகிதம் குறைவே.... நீங்கள் குறிப்பிட்ட, நம்மவர், ஹேராம் படங்களும் காப்பியடித்த திரைப்படங்கள் தான்........... விரைவில் அதையும் வெளிப்படுத்துகிறேன்.
 
அந்த படங்களில் பட்டியல் முன்பு இதயம் அண்ணாவால் மன்றத்தில் பதிக்கப்பட்டிருக்கிறது..

கமல் காப்பி அடித்தார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், அந்த படங்களுக்கு அவர் நன்றி கூறுவதுமில்லை என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் கமல் இந்த தமிழ் சினிமாவுக்கு மேற்கு திசை காட்டியவர் என்று சொல்வதில் எந்த தவறுமில்லையே, வேறு பட்ட ரசனையை அவர் நமக்கு வழங்கினார், அதில் தவறிருக்கோ இல்லையோ, ஆனால் அவர் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஒரு சின்ன புள்ளி வைத்தார் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்..

ஆதி, வேற்றுமொழி சாத்திரங்களை தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்று பாரதி விரும்பியது அறிவீர்கள்... அவரே “பாஞ்சாலி சபதம்” எழுதும்பொழுது

எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக இந்நூலை வியாச பாரதத்தின் மொழி பெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது 'கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது சொந்தச் சரக்கு அதிகமில்லை; தமிழ் நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி.

என்று குறிப்பிட்டிருந்தார். இது நேர்மைக்கு அழகு இல்லையா? ஒரு விஷயத்தை/பதிவை அறிமுகப்படுத்தும் பொழுது/எழுதும்பொழுது அதற்குரியவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நம் மன்றத்திலேயே விதி இருக்கிறது. ஏன் இந்த விதிகள்? எழுதியவர் யாராக இருப்பினும் அவர்களுக்கு முறைப்படி அனுமதியோ அல்லது நன்றியோ பெறப்பட்டிருக்கவேண்டும் என்ற கட்டுகோப்பு... சில நூறுபேர் புழங்கும் ஒரு இணையதளத்திற்கே இப்படியொரு நேர்மை இருக்கிறதென்றால் பல லட்சம் பேர் பார்க்கும் ஒரு படைப்புக்கு நன்றி கூறவேண்டுமா கூடாதா??/ அப்படியே அவர் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வுக்கு புள்ளி வைத்தார் என்றால் அது எப்படிப்பட்டது? அடுத்தவன் படைப்பைத் திருடி புள்ளி வைப்பது அசிங்கமானதாக இருக்காதா??

கமலே திருடும் பொழுது நாமும் திருடலாம் என்ற இளம் இயக்குனருக்கு “புள்ளி” வைத்த கமலால் தமிழ்சினிமா தலைகுனிந்ததா இல்லையா??

தமிழ் சினிமா ஒரு தரமான, காப்பியடிக்காத, சொந்த சரக்குள்ள சினிமாக்களின் உலகம் என்ற பெயரை உலகுக்குக் காட்டமுடியாதபடி செய்திருக்கும் கமல் போன்றவர்களால்தான் தமிழ் சினிமா அடுத்த கட்ட நகர்வுக்குச் சென்றிருக்கிறது என்கிறீர்களா?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இப்போவே கண்ண கட்டுதே..!!! எந்தளவுக்கு பாராட்டுக்கள் பெற்றாரோ அந்தளவுக்கு விமர்சனங்களும் கண்டனங்களையும் பெற்றவர் தான் கமலஹாசன். இதை தனியே விவாதிக்கும் அளவுக்கு என்ன இருக்குதுன்னு தான் தெரியவில்லை.

அடிதடி இல்லாமல் விவாதம் நடந்தால் சரி!:):)

மதி...!! கமலைப் பார்த்து நான் வியந்தவந்தாங்க// ஆனால் கொஞ்சம் ஆராய்ந்த பிறகு, சில படங்களைப் பார்த்தபிறகும் போலியானவர், காப்பிகேட் என்றும் தெரிந்த பிறகும் நேசிப்பது என்னை நான் அவமதிப்பதாகவே இருக்கிறது... நன்றாக கவனியுங்கள், ஒன்றும் அறியாதவரால் பாராட்டு பெற்றவர் கமல்ஹாசன். அறிந்தவர்களால் விமர்சிக்கப்பட்டவர்!!
 
இதை நான் வழிமொழிகிறேன்
 
கமல் ஒரு கலைஞர். இந்திரன் முதலில் கமலுக்காக உருவாக்கப்பட்டது. மனக்கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கு கிடைத்தது.
கமலுடைய ஒரு நல்ல குணாதிசயத்தை பற்றி சொல்லுகிறேன் கேளுங்கள்.

வடிவேலு, பசுபதி போன்றவர்களை வளர்த்து விட்டவர் கமல்தான்.

சிங்காரவேலன் படத்துல கவுண்டமணி டாமினேஷன் அதிகமா இருந்தது. இது கமலுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அதனால் கமல் கவுண்டருடன் நடிப்பதை குறைத்து கொண்டார் (மகராசன் படத்துக்கப்புரம் அவர்கள் இனைந்து நடித்ததாக எனக்கு தெரியவில்லை)

தேவர் மகனில் அவர் வடிவேலுக்கு ஒரு நல்ல பாத்திரம் கொடுத்தார். அது போல அவர் பசுபதிக்கும் விருமாண்டி படத்துல ஒரு கேரக்டர் தந்தார்.

நிற்க. கமல் ஒரு கம்பி, ஒரு சிறந்த படைப்பாளி. வேறோருத்தருடைய படைப்பை கமல் காப்பி அடித்தார் என்பது சரிதான். யார்தான் அப்படி செய்யவில்லை. கூகிள் இல்லாவிட்டால் எல்லா மென்பொருள் வல்லுனனும் சிங்கி தான் அடிப்பான்.

அபூர்வ சகோதரர்கள் மூலம் திரையுலகுக்கு கிரேசி மோகன் கிடைத்தார்.

குருதிப்புனல்- தமிழில் கமல் ஒரு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு எடுத்தார்
மகாநதி, (ஆம்நியுடன் ஒரு படம் பண்ணினார், பேர் தெரியவில்லை ), அன்பே சிவம் போன்ற படங்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள்?
 
Last edited:
//தமிழ் சினிமா ஒரு தரமான, காப்பியடிக்காத, சொந்த சரக்குள்ள சினிமாக்களின் உலகம் என்ற பெயரை உலகுக்குக் காட்டமுடியாதபடி செய்திருக்கும் கமல் போன்றவர்களால்தான் தமிழ் சினிமா அடுத்த கட்ட நகர்வுக்குச் சென்றிருக்கிறது என்கிறீர்களா?
//

முன்பே பேசியிருக்கிறோம், நீர் இன்றி அமையா உலகு, வள்ளுவனை தழுவிய நற்றிணையின் முதற்பாடல் குறித்து, சிலம்பின் இலக்கண மீறல்களை கண்டிருக்கிறோம், அதற்கு பிறகு வந்த காப்பியங்களை சிலம்பை மாதிரியாக வைத்துக் கொண்டு இயற்றப்பட்டவை என்றாலும், முந்தைய இலக்கணப்பிழைகளை அவைகள் சரி செய்தன..

இருக்கிற வசதிகளை பயன்படுத்திக் கொண்டு அடுத்தக்கட்ட நகர்வுக்கான எத்தனிப்புக்கள் தான் இவை, இது போல கலைஞருரைடய சந்தத்தமிழ் பேச்சு சுயமானது அல்ல, அது அண்ணாவின் பாணி ஆனால் அண்ணாவை தாண்டியும் ஜெய்தவர் கலைஞர், சுயபாணி இல்லை என்பதற்காக கலைஞரின் தமிழறிவை நிராகரித்துவிட முடியாதல்லவா ?

கோட்பாடுகளிலும் நிகழ்ந்தன, சசூர், ப்ராய்ட் இவர்களை தழுவித்தான் தெரிதா தன் பின்னவீனத்துக்கான கோட்பாடுகளை வகுத்தான், சசூரின் அமைப்பியல் வாதமும், ப்ராய்டின் உளபகுப்பாய்வு வாதமும் தகர்ப்பமைவு வாதமான பின்னவீனத்துவத்துக்கு உறுதுணையாக இருந்தன...

இந்த கோட்பாடுகளை தழுவித்தான் உலக இலக்கியம் பேசுகிறோம், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, நெரூதா என்று மேலை நாட்டுவர்களின் இலக்க்கியங்களை தழுவித்தான் இன்று படைக்க முயல்கிறோம், ஆனால் இவர்களை முதன் முதலி அறிமுகம் செய்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள், இவர்களின் படைப்புகளை உள்வாங்கி அந்த சாரத்தில் அல்லது அது போலவே எழுத முயன்றிருப்பார்கள், அவ்வளவுத்தான் அதற்காக அது காப்பி என்று நிராகரித்துவிட முடியுமா ?

சினிமா எனும் சாதணமுமே வெளிநாட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட ஒன்று தானே ஆதவா, அதற்காக சினிமாவையே புறக்கணித்துவிடலாமா ?

தமிழ் சினிமா கடந்து வந்த பாதை மிக பெரியது..

தமிழில் முதன்முதலில் எடுக்கப்பட்டப்படம் இராமாயணம், அதில் அனுமன்னாக நடித்தவர் மூக்கு கண்ணாடி போட்டிருப்பார், தூது போகிற காட்சிகளில் சைகிளில் போஸ்ட்மேன் வந்து போவார், இப்படித்தான் இராமாயணத்தையே சுதப்பலாக நாம் முதன் முதலில் படம் எடுத்தோம். இப்படி சுதப்பலாக ஆரம்பித்த தமிழ் சினிமா பல்வேறு கட்ட நகர்வுகளை தாண்டி தற்போதைய இடதிற்கு வந்து சேர்ந்திருக்கிறது, தமிழ் சினிமாவின் இந்த இடத்திற்கு தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரும் காரணம், இவர் அவர் என்று பதக்கம் ஓரிருவருக்கு தந்துவிட முடியாது..

மேலைநாடுகளின் படங்களை காப்பி அடித்து கமல் படம் பண்ணுகிறார், எனும் வாதம் சரியானது தான் என்றாலும், அதற்காக கமலை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்பது மிக மிக அபத்தமானது..

ஒரு சினிமா கலைஞன் மீது எழுகிற இது போன்ற ஒரு முரட்டுத்தனமான கடுமையான விமர்சனங்கள், மக்கள் முற்றாக நம்பி ஓட்டு போட்டும் ஒரு எம்.எல்.ஏ மேல் ஏன் எழுவதில்லை ?

விளையாட்டுக்களை க்ரிக்கட்டை மற்று ஊக்குவித்து மற்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்காத விளையாட்டுத்துறை மேல் ஏன் எழுவதில்லை.
 
எந்த ஒரு மனுஷனுடைய படைப்பும் அவனுடைய சொந்தம் அல்ல. ஒன்னு அவன் அதை கண்கூடாய் பார்த்து இருப்பான், இல்ல படிச்சு இருப்பான், இல்லை அனுபவிச்சு இருப்பான்.

பாரதிராஜா படங்கள் மட்டும் என்ன அவரது சொந்த படைப்புகளா என்ன? முதல் மரியாதை ஏதோ ஒரு ஊருல நடந்த கதை தான், பெண் கொடுமை , பெண் சிசு வதை எல்லாம் நடந்தவைகள் தான், அப்போ அது பத்தி எல்லாம் படம் எடுத்தவர்கள் என்ன சொந்த படைப்பா என்ன?

ரஜினியோட வள்ளி கதை கூட தன்னுடையது என்று ஒருத்தன் சண்டை போட்டான். ரஜினி அவனுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்து செட்டில் பண்ணிவிட்டார். இது வெளியே தெரியவில்லை. கமுக்கமாக மூடி மறைத்து விட்டார்கள்.
ஐந்து ரூபா நாவல் எல்லாம் படம் ஆகுது இல்ல.... சர்தார்ஜி ஜோக் தமிழ் சினிமாவில் களை கட்டுது.. அது பத்தி யாரும் பேசமாட்டீங்களே.
கமல் செஞ்சா/ சொன்னா குத்தம் கண்டு பிடிப்பீங்க
 
Last edited:
கமல் ஒரு கலைஞர். இந்திரன் முதலில் கமலுக்காக உருவாக்கப்பட்டது. மனக்கருத்து வேறுபாடு காரணமாக ரஜினிக்கு கிடைத்தது.
கமலுடைய ஒரு நல்ல குணாதிசயத்தை பற்றி சொல்லுகிறேன் கேளுங்கள்.

வடிவேலு, பசுபதி போன்றவர்களை வளர்த்து விட்டவர் கமல்தான்.

சிங்காரவேலன் படத்துல கவுண்டமணி டாமினேஷன் அதிகமா இருந்தது. இது கமலுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அதனால் கமல் கவுண்டருடன் நடிப்பதை குறைத்து கொண்டார் (மகராசன் படத்துக்கப்புரம் அவர்கள் இனைந்து நடித்ததாக எனக்கு தெரியவில்லை)

தேவர் மகனில் அவர் வடிவேலுக்கு ஒரு நல்ல பாத்திரம் கொடுத்தார். அது போல அவர் பசுபதிக்கும் விருமாண்டி படத்துல ஒரு கேரக்டர் தந்தார்.

நிற்க. கமல் ஒரு கம்பி, ஒரு சிறந்த படைப்பாளி. வேறோருத்தருடைய படைப்பை கமல் காப்பி அடித்தார் என்பது சரிதான். யார்தான் அப்படி செய்யவில்லை. கூகிள் இல்லாவிட்டால் எல்லா மென்பொருள் வல்லுனனும் சிங்கி தான் அடிப்பான்.

அபூர்வ சகோதரர்கள் மூலம் திரையுலகுக்கு கிரேசி மோகன் கிடைத்தார்.

குருதிப்புனல்- தமிழில் கமல் ஒரு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு எடுத்தார்
மகாநதி, (ஆம்நியுடன் ஒரு படம் பண்ணினார், பேர் தெரியவில்லை ), அன்பே சிவம் போன்ற படங்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

கமல் காப்பியடிக்கிறார்தான் என்று சொன்னேனேயொழிய, அவர் நல்லவரில்லை, மோசமானவர் என்று சொல்லவில்லை. வடிவேலுவை விடுங்கள், விருமாண்டியில் பசுபதிக்கு அழுத்தமான பாத்திரம் கொடுத்து வளர்த்தவர்தான், நாகேஷ் எனும் நடிகனை கடைசி வரைக்கும் வாய்ப்பு கொடுத்த ஒரே தமிழ்சினிமா நடிகன் கமல்ஹாசன் மட்டுமே.... அட... இப்படி நிறைய இருக்குங்க... நான் அதைப் பற்றி பேசவே வரவில்லை.

கமல், கூகில் இல்லாத காலத்திலேயே காப்பியடிக்கத் துவங்கிவிட்டார். அதையும் ஆதாரத்துடன் விளக்கிவிடுவோம்....

அப்பறம்.... மகாநதி, அன்பேசிவம்.... இரண்டும் காப்பிதான்... கொஞ்சம் பொறுத்தருள்க, அடுத்தடுத்த கட்டுரைகளில் எப்படி அன்பே சிவம் காப்பியடிக்கப்பட்டது என்பதை விளக்கமாகவே கூறுகிறேன்.
 
ஆதி, உங்கள் விவாதத்திலிருந்தே வருகிறேன்...

ஒரு படைப்பிலிருந்துதான் இன்னொரு படைப்பு உருவாகிறது. நவீனத்துவம் இல்லையேல் பின்னவீனத்துவம் இல்லை.... நீங்கள் உங்கள் பதிவிலேயும் அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. அதன் வழியோ ஒன்று, இதன் வழியே இன்னொன்று என பரிணாமங்கள் வளர்கிறதேயொழிய, அசலைப் போல நகலெடுக்கும் ஜெராக்ஸ் வேலையிருந்திருந்தால் எப்படி இலக்கியம் முன்னேறியிருக்கும்???

ஒரு கோட்பாடுகளை வகுக்கும் பொழுது, ஏன் ஆசிரியன் சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறான்? தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர், சில இலக்கணநூல்களைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார். (ஆதாரத்தை விரைவில் தருகிறேன்). ஒரு உத்தியைத் தழுவுவதற்கும் படைப்பைத் தழுவுவதற்குமுள்ள வித்தியாசத்தையே நான் பேசுகிறேன். இன்று நாம் எழுதும் சிறுகதை உத்தி அனைத்தும் பழந்தமிழக இலக்கியத்திலேயே கிடையாது. மேற்கத்திய பாணிதான் சிறுகதை என்பது நீங்கள் அறிவீர்கள். அதற்காக மேற்கத்திய கதைகளை காப்பியடித்துவிட்டு, காப்பியல்ல என்று சொல்லிவிடமுடியுமா?? நாவல் என்பதே நூறு வருஷத்திற்கு முன்னர் கிடையாது!!! ஆனால் இன்று நாவல் எழுதுபவர்கள் மேலைநாட்டினரின் நாவல்களையா காப்பியடிக்கிறார்கள்??? நாவல் எனும் ஒரு பரிமாணம் மட்டும்தானே அவர்கள் தந்தது?

சினிமா என்ற சாதனம் காப்பியடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது... சினிமாவை வெளிநாட்டவந்தான் நமக்கு அறிமுகப்படுத்தினான். அதனை பின் தொடர்கிறோம். ஒரு சாதனத்தின் வழியே வெளிவரும் படைப்புகள் எப்பொழுதும் புதுமையாகவே இருந்தாலொழிய தனிப்பட்டு நிற்கமுடியாதல்லவா? சினிமா சாதனமும் அவனே தந்தான், கதையும் அவனுக்குத் தெரியாமலேயே எடுக்கிறோம் என்பது நமது சினிமாவின் வளர்ச்சிக்கு மிகவும் முட்டுக்கட்டையாக இருக்கும் இல்லையா?

காப்பியடிக்கப்பட்ட படங்களை ஏன் புறக்கணிக்கவேண்டும் அதிலும் கமலின் படங்களை?
கமல் ரஜினி போன்றவர்களுக்கு வெளிநாடுகளிலும் மார்கெட் உண்டு. தவிர, அவர்களை வெளிநாட்டவர்கள் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு அதிகம்... அவர்கள் மூலம் ஒரு நல்ல தமிழ் சினிமா வெளியே வந்தால் நிறைய ரீச் ஆகும். ஆனால் காப்பியடிக்கப்பட்ட சினிமாக்கள் வந்தால்???? கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன்!!

பருத்தி வீரன் போன்று எத்தனை கமல் திரைப்படங்கள் சுத்தமாக வந்திருக்கின்றன? வெளிநாடுகளில் திரையிடப்பட்டு பரிசுகள் பெற்றிருக்கின்றன?? (16 வயதினிலே என்று ஆரம்பித்துவிடாதீர்கள்... அந்த காலமெல்லாம் கமல்ஹாசன் இயக்குனரின் கட்டுப்பாடில் இருந்த காலங்கள்.)

எந்த ஒரு மனுஷனுடைய படைப்பும் அவனுடைய சொந்தம் அல்ல. ஒன்னு அவன் அதை கண்கூடாய் பார்த்து இருப்பான், இல்ல படிச்சு இருப்பான், இல்லை அனுபவிச்சு இருப்பான்.

பாரதிராஜா படங்கள் மட்டும் என்ன அவரது சொந்த படைப்புகளா என்ன? முதல் மரியாதை ஏதோ ஒரு ஊருல நடந்த கதை தான், பெண் கொடுமை , பெண் சிசு வதை எல்லாம் நடந்தவைகள் தான், அப்போ அது பத்தி எல்லாம் படம் எடுத்தவர்கள் என்ன சொந்த படைப்பா என்ன?

ரஜினியோட வள்ளி கதை கூட தன்னுடையது என்று ஒருத்தன் சண்டை போட்டான் ரஜினி அவனுக்கு ஒரு ஐயாயிரம் ரூபா கொடுத்து செட்டில் பண்ணிவிட்டார். இது வெளியே தெரியவில்லை. கமுக்கமாக மூடி மறைத்து விட்டார்கள்.
ஐந்து ரூபா நாவல் எல்லாம் படம் ஆகுது இல்ல.... sardharji joke tamil cinemavil kalai kattudhu அது பத்தி yaarum pesa maateengale..
kamal sonna kuththam kandu pidippeenga

சர்சரன்... எந்தவொரு படைப்பும் சொந்தமல்ல ; ஏதாவது ஒன்றின் இன்ஷ்ப்ரேஷன் என்று சொல்லுவது கிட்டத்தட்ட சரியான வாதம்தான்... நீங்கள் பேசுவது இன்ஷ்ப்ரேஷன் பற்றி, நான் பேசுவது ப்லாகரிஸம் பற்றி... இரண்டுக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.

நாய்ச்சண்டையை மையமாக வைத்து வெளிவந்த Amores perros எனும் திரைப்படமே, கோழிச்சண்டையை மையமாக வைத்து வந்த ஆடுகளத்தின் இன்ஷ்ப்ரேஷன்.. உண்மையில் இரண்டு படங்களையும் பார்க்கும் பொழுது ஒரு உயிரனத்தின் சண்டை மட்டுமே மையமே தவிர, அதன் கதை வேறு, இதன் கதை வேறு... ஒருவேளை “அமொரெஸ் பெர்ரோஸ்” திரைப்படத்தை வெற்றிமாறன் குறிப்பிடாமலிருந்தாலும் நாம் சிண்டுமுடிய வாய்ப்பில்லை..... இன்ஷ்ப்ரேஷன் என்பது மூலத்தின் பாதிப்பை தனக்கு நிறுத்தி, சொந்தமாக கதை செய்வது.... அப்படியே காப்பியடிப்பதல்ல!!
 
நன்றாக கவனியுங்கள், ஒன்றும் அறியாதவரால் பாராட்டு பெற்றவர் கமல்ஹாசன். அறிந்தவர்களால் விமர்சிக்கப்பட்டவர்!!

ம்ஹூம் எனக்கு இன்னமும் அந்தளவுக்கு அறிவு வளரலைங்க :D, ஆதலால் அறிந்தவர்கள் விமர்சிக்கையில் அறியாதவர்களில் ஒருவனாக துண்டு போட்டு உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்க்கப் போகின்றேன். :icon_ush:
 
நான் ஓவியன் போலல்லாம் உட்காந்திருந்து வேடிக்கை பார்க்க மாட்டன்.

எழுந்து நின்று வேடிக்கை பார்க்கப் போகின்றேன்...

புள்ளிவிபரம், ஆதாரம் எல்லாம் கொடுத்து வாதாட என்கிட்ட சரக்கில்ல...
ஆனால், நான் எந்தவொரு நடிகரையும் சினிமா என்ற நிலை தாண்டி, எனக்குள் உயர்த்தி வைத்திராதபடியால்,
கமலையும் ரசிக்க மட்டுமே செய்கின்றேன்...

சரி சரி... இன்னும் அருவா, கத்தி எல்லாம் வச்சுட்டு சண்டை போடுங்க....
 
மலையாளிகளை போல் நடிகனை நடிகனா பார்த்தல் வேண்டும், துக்கி வைத்து ஆடினால் நமக்குள் வெட்டு குத்துதான் - என்னை பொறுத்த மட்டில் நடிப்பு அவன் தொழில் அம்புட்டுதேன்
 
மலையாளிகளை போல் நடிகனை நடிகனா பார்த்தல் வேண்டும், துக்கி வைத்து ஆடினால் நமக்குள் வெட்டு குத்துதான் - என்னை பொறுத்த மட்டில் நடிப்பு அவன் தொழில் அம்புட்டுதேன்

நம்மை விட தெலுங்கர்களும் மலையாளிகள் தான் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆடுகின்றார்கள்.

சில படங்களில் மோகன்லாலுக்கு ஒரு கிளைமாக்ஸ் மம்மூட்டிக்கு ஒரு கிளைமாக்ஸ் என்று சினிமா வந்துட்டுண்டு மக்களே (எ து: ஹரிக்ரிஷ்ணன்ஸ்)

மம்மூட்டி கூட்டத்தில் தனக்கு கை கொடுக்க வந்த ஒரு ரசிகனை கன்னத்தில் அடித்தார். ஆனால் மோகன்லால் மேடை ஏறி தனக்கு கை கொடுக்க வந்த வந்த ஒருவனை கன்னத்தில் அடிக்கவில்லை, ஒரு சவுட்டு சவுட்டினார்
 
Last edited:
நான் சின்ன வயசிலிருந்து ஆங்கில படங்கள் நிரைய பாத்திருகிறேன். இப்பவும் ஸ்டார் மூவீஸ் எச் பி ஓ வில அதிகம் ஆங்கில படம் பார்த்து கொன்டு இருக்கிறேன். பள்ளி முடிந்த பிறகு ஆங்கில நாவல்கள் (சிட்னி செல்டன், இர்விங் வேலஸ், டேனியல் ஸ்டீல், சார்லஸ் டிக்கன்ஸ், ஆத்தர் ஹைலி) நிறைய படித்திருகிறேன். தமிழ் பழைய கதைகளையும் படித்திருகிறேன்.
நாவல் மட்டுமல்ல ஆங்கிலம் மற்றும் தழில் இவற்றில் இன்னும் காப்பியங்கள் சிலவற்றை படித்திருகிறேன் (சிலப்பதிகாரம், சேக்ஸ்பியர் கதைகள் முழுமையாக)
இனையம் வந்த பிறகு மனுநீதி சாஸ்திரம், பாரடைஸ் லாஸ்ட், குரான், ஜோன் ஆப் ஆர்க், நோவா போன்ற மத சம்மந்த பட்டவைகளையும் பிச்சு பிச்சு படித்திருகிறேன்.மெத்த படித்தவன் என்று சொல்ல முடியாட்டியும் ஓரளவுக்கு படித்தும் அறிந்து இருக்கிறேன். 25 வருசமா ஹிந்து படித்து கொன்டு இருக்கிறேன். அதன் மூலமும் பல விசயங்கள் இலங்கியங்கள் வரலாறுகள் படித்து நினைவில் வைத்திருகீறேன். நானும் பல நாட்டு இசை ஆல்பங்களை கேட்டு ரசித்திருகிறேன்.

இதை எல்லாம் எதுக்கு சொல்லறேன் என்றால் பெரும்பான்மையான தமிழ் (இந்திய) படங்களாகட்டும் ஆங்கில படங்களாகட்டும் அனைத்துமே எங்காச்சிருந்து தான் காப்பி செஞ்சு கொஞ்ச மாற்றி இருப்பாங்க.
காப்பி அடிக்கறது என்பது கலைதுரையில் சகஜம்.
ஒன்றிலிருந்து ஒன்றாகவும்
ஒன்றிலிருந்து பலவாகவும்
பலவற்றிலிருந்து ஒன்றாகவும்

காப்பி அடிப்பது சகஜம். ஒரு இர்விங் வாலஸ் கதை படிச்சு பாருங்க அதிலிருந்து 100 ஆங்கில படம் காப்பி அடிச்சிருப்பங்கனு தோனும்.

இது ஒருத்தரை பிடிக்க வில்லை என்பதால் அவரை மட்டும் தாக்க சொல்லும் மேட்டர். காப்பி அடிச்சாலும் அதையும் திறமையா அடிச்சு ரசிக்க வச்சா நாம் அதை ரசிச்சுகிட்டு போவோம். எனக்கும் கமல் பிடிக்கும்.
 
வாங்க வாத்தியாரே....நல்லா இருக்கீங்களா....எவ்ளோ நாளாச்சு உங்களப் பாத்து....என்னை நினைவிருக்கா?

உங்கக் கருத்தை நான் முழுசா வழிமொழிகிறேன். எல்லாக் கதைகளிலும் மற்ற ஏதோ ஒரு கதையின் பாதிப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆதவா சொல்வது என்னவென்றால்...காப்பி அடிச்சிக்கோங்க....ஆனா...அதை தன்னோடக் கதைன்னு சொல்லிக்காதீங்க. வெற்றிமாறனைப்போல...என்னைப் பாதிச்சக் கதைகள்லருந்து உருவானதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நல்லாருக்குமே.
 
நான் சின்ன வயசிலிருந்து ஆங்கில படங்கள் நிரைய பாத்திருகிறேன். இப்பவும் ஸ்டார் மூவீஸ் எச் பி ஓ வில அதிகம் ஆங்கில படம் பார்த்து கொன்டு இருக்கிறேன். பள்ளி முடிந்த பிறகு ஆங்கில நாவல்கள் (சிட்னி செல்டன், இர்விங் வேலஸ், டேனியல் ஸ்டீல், சார்லஸ் டிக்கன்ஸ், ஆத்தர் ஹைலி) நிறைய படித்திருகிறேன். தமிழ் பழைய கதைகளையும் படித்திருகிறேன்.
நாவல் மட்டுமல்ல ஆங்கிலம் மற்றும் தழில் இவற்றில் இன்னும் காப்பியங்கள் சிலவற்றை படித்திருகிறேன் (சிலப்பதிகாரம், சேக்ஸ்பியர் கதைகள் முழுமையாக)
இனையம் வந்த பிறகு மனுநீதி சாஸ்திரம், பாரடைஸ் லாஸ்ட், குரான், ஜோன் ஆப் ஆர்க், நோவா போன்ற மத சம்மந்த பட்டவைகளையும் பிச்சு பிச்சு படித்திருகிறேன்.மெத்த படித்தவன் என்று சொல்ல முடியாட்டியும் ஓரளவுக்கு படித்தும் அறிந்து இருக்கிறேன். 25 வருசமா ஹிந்து படித்து கொன்டு இருக்கிறேன். அதன் மூலமும் பல விசயங்கள் இலங்கியங்கள் வரலாறுகள் படித்து நினைவில் வைத்திருகீறேன். நானும் பல நாட்டு இசை ஆல்பங்களை கேட்டு ரசித்திருகிறேன்.

இதை எல்லாம் எதுக்கு சொல்லறேன் என்றால் பெரும்பான்மையான தமிழ் (இந்திய) படங்களாகட்டும் ஆங்கில படங்களாகட்டும் அனைத்துமே எங்காச்சிருந்து தான் காப்பி செஞ்சு கொஞ்ச மாற்றி இருப்பாங்க.
காப்பி அடிக்கறது என்பது கலைதுரையில் சகஜம்.
ஒன்றிலிருந்து ஒன்றாகவும்
ஒன்றிலிருந்து பலவாகவும்
பலவற்றிலிருந்து ஒன்றாகவும்

காப்பி அடிப்பது சகஜம். ஒரு இர்விங் வாலஸ் கதை படிச்சு பாருங்க அதிலிருந்து 100 ஆங்கில படம் காப்பி அடிச்சிருப்பங்கனு தோனும்.

இது ஒருத்தரை பிடிக்க வில்லை என்பதால் அவரை மட்டும் தாக்க சொல்லும் மேட்டர். காப்பி அடிச்சாலும் அதையும் திறமையா அடிச்சு ரசிக்க வச்சா நாம் அதை ரசிச்சுகிட்டு போவோம். எனக்கும் கமல் பிடிக்கும்.

வாத்தியாரே, விவாதத்தில் நீங்கள் இறங்கினாலே தனி கிக்குதான்!!!

பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் பேஸ்ட் ஆன் திஸ் ஸ்டோரி என்று ஏதாவது ஒரு நாவலின் பெயரைக் கொடுப்பார்கள். பெரும்பாலான படங்கள் நாவல்களிலிருந்தே தான் தழுவி எடுக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அகிரா குரோசாவாவை அதே காலத்தில் காப்பியடித்தவர்கள்தான் ஹாலிவுட் காரர்கள். ஆனால் இப்போது உலகளாவிய மார்கெட்டும் வீண் பிரச்சனைகளும் எழும் என்பதால் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன. தவிர, நமது விவாதத்தில் ஆங்கிலப்படமே இல்லை...

நான் Eternal sunshine of the spotless mind என்ற சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். மிகமிக மெல்லிய ஒலியில் ஒரு பாடல் ஒன்று பாடிக் கொண்டிருந்தது. சத்தியமாக அதிக ஒலியளவு இல்லாவிட்டால் அதைக் கேட்க முடியாது. லதா மங்கேஷ்கர் பாடிய ஹிந்திபாடல்கள் அவை. ஊர்ந்து கவனித்தாலொழிய கேட்கமுடியாது... அதற்கு end creditல் கொடுத்திருந்தார்கள். அந்த நேர்மை நம்மிடம் கிடையாது என்பதுதான் எனது ஆதங்கம்!!

சரி நான் ஏன் கமலை மட்டும் எடுத்தேன்?? ஏனெனில் தமிழ் சினிமாக்களிலேயே சட்டென திரும்பிப் பார்க்கக் கூடியவரும், மாற்றங்கள் ஏற்படுத்தியவராக எல்லாராலும் அறியப்படுபவரும் அதைவிட மிக முக்கியமாக நிறைய காப்பி படங்களைக் கொடுத்தவருமாவார்!!! நாம் கண்மூடித்தனமாக (நான் முதற்கொண்டு) கமலை ரசித்துக் கொண்டிருக்கிறோம். கமல் எப்படி கொடுத்தால் நமக்கென்ன? நல்லா இருந்தா சரிதான் என்பதுதான் பெருமளவு ரசிகர்கள் குற்றச்சாட்டுகளுக்குச் சொல்லும்பதில். நாளை தமிழ் சினிமாவை எடுத்துப் பார்த்தால் அதில் கமலின் எத்தனை சொந்த படைப்புகள் மிச்சமிருக்கும்???

. எல்லாக் கதைகளிலும் மற்ற ஏதோ ஒரு கதையின் பாதிப்பு நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆதவா சொல்வது என்னவென்றால்...காப்பி அடிச்சிக்கோங்க....ஆனா...அதை தன்னோடக் கதைன்னு சொல்லிக்காதீங்க. வெற்றிமாறனைப்போல...என்னைப் பாதிச்சக் கதைகள்லருந்து உருவானதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா நல்லாருக்குமே.

அதே அதே!!!! :icon_b:
 
ஆதவா சொல்வது என்னவென்றால்...காப்பி அடிச்சிக்கோங்க....ஆனா...அதை தன்னோடக் கதைன்னு சொல்லிக்காதீங்க.
அதை தான் நானும் சொல்லறேன் காப்பி அடிச்சது என்று சொல்ல வேன்டிய அவசியமே இல்லை. சினிமா தொழிலை பொருத்தவரை 95 சதவீதம் எங்கேயோ இருன்தது சுட்டது என்று நம் அனைவருக்கும் தெரியும் பிறகு அதை அவர்கள் வந்து சொல்ல வேன்டிய அவசியமே இல்லை.
சினிமா உலகில் மிச்சவர்கள் யாராச்சு வந்து நான் காப்பி அடிச்சது என்று சொன்னாங்களா? ஒத்துகிட்டாங்களா? இல்லையே. இப்படி காப்பி அடிச்சு பிழைக்கும் 95 சதவீதம் இருக்க கமலை மட்டும் இங்கு தனிபட்டு எழுதி இருப்பது அக்கரையில் அல்ல ஏதோ போட்டி பொறாமையில் எழுதி இருப்பது.
காப்பி அடிச்சா எல்லாம் தலை குனிவு ஏற்படாது. சினிமாவுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் விசயம் அதைவிட 1000 இருக்கு.
வாங்க வாத்தியாரே என்னை நினைவிருக்கா?
உங்களை எல்லாம் நான் மறப்பேனா சிவாஜி, அன்றைய நன்பர்கள் அனைவரையும் நினைவில் வைத்திருகிறேன்.
நீங்க எல்லாம் மறக்க கூடிய நபர்களா என்ன? (இது பம்பாய் படத்திலிருந்து காப்பி அடித்த வசனமுங்கோ. எப்பவுமே சப்ஜட்ல தெளிவா இருப்போமல்ல)
 
Back
Top