gragavan
New member
முந்தைய பாகத்திற்கு இங்கே சொடுக்கவும்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4318&goto=lastpost
வணக்கம் அன்பர்களே. இன்று முப்பத்து ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்.
இவையெல்லாம் மங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் அருணகிரிக்கு இருந்தது ஒரே காரணம்தான். அதைக் கந்தரலங்காரத்தில் இப்படிச் சொல்கிறார்.
"கண்டுண்ண சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும்!".
"கண்ணால் கண்டுவிட்ட சொல்லி அழைக்கும் மெல்லிய பூவையரின் காமக் கலவிக் கள்ளினை மொண்டு உண்டு அயர்ந்தேன்," என்று நயமாக இயம்புகிறார். கலவிக் கள்ளைப் பருகினேன் என்று சொல்ல வில்லை. அள்ளியள்ளி மொண்டு உண்டாராம். அடேயப்பா! எப்படி அநுபவித்திருக்கிறார். அதன் பலன் என்ன? முதலில் அறிவு மங்கியது. கொண்டிருந்த புகழ் மங்கியது. பிறகு கையிலிருந்த செல்வமெல்லாம் மங்கியது. நற்பண்புகள் மங்கின. குலப் பெருமை மங்கியது.
அப்படி மங்கிய அனைத்தும் முன்னிலும் பிரகாசமாக சுடர் விட்டது எங்ஙனம்? முருகப் பெருமானின் திருவருளால். அந்த நன்றியை இங்கே மறக்காமல் சொல்கிறார் அருணகிரி. "முருகா, சிங்காரம் செய்து கொண்ட பெண்களோடு இன்பம் துய்க்கும் தீய வழக்கங்களால் புகழும் அருளும் மங்காமல் காத்தருள்வாய்!" ஏற்கனவே சொன்னதுதான். சிங்கார மடந்தையர் போக வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்கார மடந்தையர் தீநெறி போக வேண்டும் என்றுதான் அருணகிரி கேட்கிறார்.
சங்க்ராம என்றால் போர்திறம் மிகுந்த என்று பொருள். "செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்!" என்று விளையாட்டாக சொல்லியிருக்கின்றார் காளமேகம். செரு என்றால் போர்க்களம். செருவில் புகும் வீரர்களை வெல்லும் வேலன் என்பது பொருள். சிகாவல என்றால் மயிலேறி வலம் வருகின்ற என்று பொருள். சங்க்ராம சிகாவல சண்முகனே! பொருள் புரிகின்றதல்லவா. கங்காநதி பால கிருபாகரனே என்பது இறுதியடி. கங்கை இங்கே ஏன் வந்தது? மங்கியதெல்லாம் துலக்க நீர் வேண்டுமல்லவா! கங்கை இந்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்படும் நதி. வற்றாத ஜீவநதி. அதனால்தான் கங்கா நதி பால கிருபாகரனே என்று செய்யுளை முடிக்கிறார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே
கங்கா நதி பால கிருபாகரணே
மங்குவது எது? தங்கம் மங்கும். வெள்ளி மங்கும். பட்டை தீட்டாத வைரமும் மங்கும். புழங்காமல் ஓரத்திலே வைத்திருந்தால் வெங்கலப் பாத்திரமும் மங்கும். அவற்றைத் துலக்கினால் ஒளி வீசிப் பிரகாசிக்கும். ஒவ்வொன்றைத் துலக்கவும் ஒவ்வொரு பொருள். வெங்கலப் பாத்திரத்திற்குப் புளியும் சாம்பலும். வைரத்திற்கு இரும்பு அல்லது வைர அரம். வெள்ளிக்கு தூயவெண் திருநீறு. தங்கத்திற்கு பன்னீரில் நனைத்த பட்டு அல்லது பருத்தித் துணி. இவைகள் எல்லாம் உயிரற்ற பொருட்கள். உயிருள்ள மனிதர்களுக்கு எவையெல்லாம் மங்கும். எவையெல்லாம் மனிதனிடத்தில் தங்குமோ, அவையெல்லாம் மங்கும். அறிவு மங்கலாம். புகழ் மங்கலாம். செல்வம் மங்கலாம். நற்பண்புகள் மங்கலாம். குலப் பெருமை மங்கலாம்.மங்காமல் எனக்கு வரம் தருவாய்