வசந்தகாலம்....!!!!

வாழ்வின் வசந்த காலம் அவள்
என்று எண்ணியிருந்தேன்.....
வசந்தகாலம் வருமுன்னே அவள் என்
வாழ்வின் வசந்தமாய் மாறினால் .....
மனதில் தோன்றிய எண்ணில் அடங்க
வினாக்களுக்கு விடை என்று எண்ணினேன் அவளை ....
வினா தொடுக்கும் முன்னே விடை கொடுத்து
மறைந்தாள் என் வாழ்வில் .............
பகலில் என் குடும்ப சுமையும்
இரவில் அவளின் இனிமையான சுமையும்
சுமந்து சென்றேன் வாழ்வின் ஓட்டத்தில் வழியில்லாமல்
ஓடினேன் அவளை நினைவில் மட்டுமே சுமந்து .....!!
என்றாவது ஒரு நாள் அவளை காண வேண்டும் என்று
கண்கள் ஏங்க கனவுபோல் வந்தால்.........!!!!
கனவென்று கண்விழிக்கும் முன்னே கண் முன்னே
தோன்றினால் தேவதை பெண்ணாக ........
அவளை கண்ட கணப்பொழுதில் ............
காதலும் காமமும் எனை தழுவ ....
அவளை தழுவ ஏங்குகிறது என் விரல்களும் உதடுகளும் ......
உணர்வின்றி தவித்த என் உதடுகளும் உணர்வுற்று
ஏங்குகிறது அவள் இதழ் ருசிக்க ....!!!!
உயிரெழுத்து அறியாத என் உள்ளமும் கவிதை
வடிக்கிறது அவள் கண்களின் அசைவுகளை காணும் போது .....
இவள் பெண்ணென்று நினைக்கவே மறுக்கிறது
என் இதயம் .............
மன்மதனின் ரதியாயி மயக்கம் கொள்கிறேன்
அவள் மார்பின்மேல ......!!!!
இவள் நினைவுகளின் ஏக்கம் மறுபடியும்
கவிஅறிய என்னை கவிஞன் ஆக்குகிறது ...!!!
இவள் என் உணர்வல்ல உயிர் என்று கண்டேன்
அவள் இதழுடன் இதழ் சேர்க்கும் போது .....!!!!
 
Last edited:
Back
Top