மலர் மன்றம் - விடுகதைகள், சிரிப்புகள்.

kanaka

New member
சிரிப்புகள் :


"பஸ் டே கொண்டாடுன பசங்களோட நிலைமை
பாவம்".

"என்ன ஆச்சு?"

"ஜெயில் டே ஆயிடுச்சு".

**********************

"அவர் ஒரு கஜினி ரசிகர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?"

"எதையும் நூறு தடவை சொன்னா தான் அவருக்கு
ஒரு தடவை புரியுது".

***********************
"என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டுத்
திரியுறாரே, முடிவெடுக்கிறதுல அவ்வளவு திடமானவரா?"

"பாவங்க, அவருக்கு காது சரியா இப்போ கேக்குறது இல்லை.
அதான், இப்படிச் சொல்லி சமாளிச்சுட்டு இருக்காரு".

********************

"தல, தலன்னு கிடந்த உங்க பிள்ளை இப்போ எப்படி
இருக்கான்?"

"அவரை மாதிரி உழைச்சு முன்னுக்கு வராம, செமெஸ்டர்க்கு
ஒரு அரியர் வச்சிக்கிட்டு தறுதலையா சுத்துறான்".

*********************

நிருபர் "-

"நடிக்க வராவிட்டால் என்ன நேர்ந்திருக்கும்?"

நடிகை :-

"டைரக்டரிடம் அறை வாங்கியிருப்பேன்".

************************
"முன்னாடி நின்னா ஒண்ணுக்குப் போற பயலுவ. நம்ம மேல
இப்போ பயமே இல்லாம போயிடுச்சு. சரிதானலே, சின்ராசு?"

"ஆத்தா, நீ ஆடு வளர்த்தே, கோழி வளர்த்தே, நாய் மட்டும்
வளர்க்கலை. வெட்டி வம்பைத் தான் வளர்த்தே."
********************
"என்ன தில்லு இருந்தா நம்ம
கார் லோனுக்கு டியூ
கட்டலைன்னு நமக்கே நோட்டீஸ் அனுப்பியிருப்பான்
அந்த மேனேஜர். எங்கடா டிரைவர், எடுடா வண்டியை".

"ஐயா அவனே பக்கத்துக்கு ஊர்ல இருந்து பஸ்ல இங்க
வந்துட்டு இருக்கான். ரோட்லயே மறிச்சு வண்டியை
பேங்க் அதிகாரிங்க எடுத்துக்கிட்டாங்களாம்".

*********************
வாங்கி நேர்முகத் தேர்வில் :-

"படமெல்லாம் பார்ப்பீர்களா? உங்களுக்குப் பிடித்த படம்
என்ன?"

"வசூல் ராஜா, எம். பி. பி. எஸ்."

"இப்போ பேங்கே இருக்கிற நிலைமைல உங்கள மாதிரி
ஆளுங்க தான் எங்களுக்கு வேணும். வராக் கடனை வசூல்
பண்ண, யு ஆர் அப்பாய்ண்ட்டட்.

*****************

"அப்பா, எதிர்ல உள்ளது ஐம்பது வருஷமா இருக்கிற பாரம்பரியமான ஓட்டல். அங்க போயி சாப்பிட
மாட்டேன்னு ஏன் அடம் பிடுக்குறே?"
"அவ்வளவு பழசா ஏண்டா சாப்பிடணும்? இது
சின்ன ஓட்டலா இருந்தாலும் பிரெஷ்ஷா இருக்கும்.
இங்கேயே சாப்பிடலாம்."

*****************
"தலைவர் வெளுத்து வாங்கிட்டார்".

"இன்னும் கூட்டமே ஆரம்பிக்கலை.
என்ன கதை விடுறீர்?"

"சலவைக்கு போட்டது வந்திடுச்சுய்யா
*********************
"நான் டாக்டருக்கு படிச்சு ஏழைகளுக்கு இலவச வைத்தியம்
பார்க்கபிப் போறேன்னு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்பு ரிசல்ட் வர்றப்போ குடும்பத்தோட போஸ் கொடுத்தவங்க
எல்லாம் இப்போ எப்படி இருங்காங்க?"

"தன் கிட்ட வைத்தியம் பார்க்க வர்றவங்களை ஏழைகளாக்கிக்கிட்டு இருக்காங்க".

*****************
"ஹலோ விஜய், நான் டாக்டர் ஷண்முகம் பேசுறேன்.
ஏன், ரெண்டு மாதமா ஹெல்த் செக்கப்புக்கு வரலை?"

"வணக்கம் சார், தினம் நாலு கிலோ மீட்டர் நடக்கச்
சொன்னீங்க. இப்போ திருச்சி வரைக்கும் வந்துட்டேன்.
பஸ்ஸோ, ரயிலோ பிடிச்சு சென்னைக்கு வந்துட்டு உங்களைப்
பார்க்குறேன்."

*******************

"என்னது, நீயும் வசூல் ராஜா ஆயிட்டியா?"

"ஆமாம், எலக்சன் நேரத்துல ஒட்டுக்குப்
பணம் வாங்கிட்டு, போடாதவங்களை
அடையாளம் கண்டுபிடிச்சு, கொடுத்த காசை
வட்டியோட வசூல் பண்ற வேலை. என்ன மைத்திரி
அண்ணன் ஐம்பது பேரை வேலைக்கு வச்சிருக்காரு:.

********************
"என்னப்பா, ஐ.டி. ல வேலை பார்க்குற. நாய் பொழைப்புன்னு
அலுத்துக்குறே".
ஆமாப்பா. போன வருஷம் கம்பெனி லாபம் குறைச்சுடுச்சாம்.
கார்பொரேஷன் லாரியில் தான் இப்போ வேலைக்கு கூட்டிட்டுப் போறாங்க".

***************
"பொண்ணு எங்களுக்கு பிடிச்சுப் போச்சு.என்ன செய்வீங்க?"
முப்பது பவுன் நகை. இருபது குடம் தண்ணீர்."

**************
 
சனி பகவான்
சற்று ரிலாக்ஸாக₹ படித்ததில் பிடித்தது ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான் அழகா ஒரு மாளிகை கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்.. அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது... அதனால நீங்களே இடிச்சுடுங்க"

இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க....

புருஷன கூப்பிட்டு.... "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து..... இன்ன மாதிரி எம்பொண்டாட்டி ஒரு பங்களா கட்டி இருக்கா.... அதுல நீ என்னவோ வேலை காட்ட போறியாம்... அதெல்லாம் வேண்டாம்"ன்னு சொல்லிட்டு வா" ன்னாங்க..

உடனே சிவன் சொன்னார்... புரிஞ்சுக்கோ பாரு..... நான் பெரிய சாமியா இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி எப்போவுமே பெர்பெக்ட்.... நானே சொன்னா கூட அவன் மாத்தமாட்டான் ன்னு சொன்னார்...

புருஷன் சொன்னத எந்த பொண்டாட்டி தான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??

சோ..... சிவன பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம சனிய பார்க்கலாம்னு கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு முன்னாடி பாருவ கூப்பிட்டு..... "இதோ பார் பாரு.... உடனே நீ ஒரு பொக்லைன் ரெடி பண்ணி வை......நான் போய் சனிகிட்ட பேசி பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா ஒன்னும் பிரச்சினை இல்ல... இன்கேஸ் அவன் ஒத்துக்கலன்னா.... நான் அங்க இருந்து என்னோட உடுக்கைய அடிக்கிறேன்..... நீ உடனே பொக்லைன் வச்சு மாளிகைய இடிச்சுடு.... யாரும் கேட்டா , எனக்கு டிசைன் புடிக்கல.... வேற கட்ட போறேன்னு கெத்தா சொல்லிடு..."ன்னு சொன்னார்...

சரின்னு பார்வதியும் ஒத்துகிட்டாங்க....

சிவன் சனிகிட்ட போய் " உன்கிட்ட கேக்க ஒரு மாதிரியாத்தான் இருக்கு.... ஆனா வேற வழி இல்ல....... இந்த பார்வதி பெரிய பிரச்சினை பண்றா... நாலுநாளா உலை கூட வைக்கல..... உன்னால அந்த பில்டிங்க்கு ஏதும் பிரச்சினை வராம பார்த்துக்க...." என்றார்...

உடனே சனி...."அய்யனே... இதுக்கு நீங்க நேர்ல வரணுமா... ஒரு போன் பண்ணி இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு..... "நீங்களே சொன்னப்புறம் நான் எப்படிய்யா மறுக்க முடியும்.... சரி.... நான் ஒன்னும் பண்ணல.... ஆனா எனக்கொரு ஆசை.... அத நீங்கதான் நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...

சனி ஒத்துகிட்ட சந்தோஷத்துல சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம புள்ள நீ.... உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...

"உங்க உக்கிர தாண்டவத்த பார்த்து ரொம்ப காலமாச்சு.... எனக்காக ஒருதடவை ஆடிக்காட்ட முடியுமா "- சனி

"அதுக்கென்ன.... பேஷா ஆடிடலாம்" ன்னு சிவன் ஆட ஆரம்பிச்சார்.... சிவன் ஆட ஆட... உடுக்கை தன்னால குலுங்கியது..... உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த சனிப்பய ஒத்துக்கல போல..... எங்கயாச்சும் சிக்காமையா போய்டுவான்.... அப்போ இருக்கு அவனுக்கு..." என்று கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர கூப்பிட்டு நீ உடனே அந்த பில்டிங்க உடைச்சுடு...ன்னு ஆர்டர் போட்டாங்க...

சிவன் திரும்பி வந்து பார்த்தா... பில்டிங் தரைமட்டமா கெடக்கு..... "ஏன் பாரு ... நான் சொன்னதும் தான் சனி ஒத்துகிட்டானே.... பின்ன ஏன் இடிச்ச...."

"நீங்கதானே சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா இடிக்க சொல்லி.."ன்னா பாரு...

ஆக... சனி நினைச்சுட்டா யார் தடுத்தாலும் அவன் நினைச்சத சாதிச்சுடுவான்...
 
Back
Top