500 / 1000 செல்லாது என்று அறிவித்தது கருப்புப் பணத்தில் கொஞ்சத்தை அழிக்கும். அதை விட முக்கிய பயன் முடங்கிக் கிடக்கும் கரன்சிகள் பயன்பாட்டிற்கு வரும்.
ஒரு கேள்வி... இந்தியாவில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 18 இலட்சம் கோடி.
இந்தியாவின் 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் எவ்வளவு?
The Indian government has proposed to spend Rs.19,78,060 crore in the fiscal year 2016-17, which is 10.8% higher than Rs. 17,65,436 crore, revised estimates for previous year.
இப்பொழுது பலரும் சில கோடி ரூபாய்களை புழக்கத்தில் விடாமல் மறைத்து வைத்துருக்கிறார்கள்.
ஒருவர் 100 கோடி ரூபாய்களை ஹவாலா மூலம் டாலராக மாற்றுகிறார் என்றாலும் அந்த நூறு கோடி ரூபாய் ஹவாலா கும்பலிடம் இந்தியாவில்தான் இருக்கும். அதைச் சொத்தாக இன்னொருவரிடம் வாங்கி மறைத்தாலும் அந்த 100 கோடி ரூபாய் இந்தியாவில் இன்னும் சிலரிடம் போய் மறைகிறது. தங்கமாக வாங்கினாலும் ரூபாய் இந்தியாவில்தான் தங்க வியாபாரிகள், கடத்தல்காரர்களிடம் போய்ச் சேருகிறது.
ஆக ஊழல் செய்தவரிடம் காகிதப் பணமாக இல்லாவிட்டாலும் அது பலரிடம் பரவி மறைந்து கிடக்கும். ஒருவர் தன் நிலத்தை 1 இலட்சம் கணக்கு காட்டி விட்டு 50 இலட்சத்திற்கு விற்றிருப்பார். அந்த 49 இலட்சம் பணமாக அவரிடம் இருக்கலாம். அல்லது அதை அவர் தங்கமாக மாற்றினால் கடத்தல்க்காரர்களிடம் அந்தப் பணம் தங்கி விடலாம். இப்படி பணம் தேங்கி விடுவதால் அரசிற்கு வருமானம் குறைந்து விடுகிறது. பணப் பரிமாற்றம் நடக்கும் பொழுதெல்லாம் அரசிற்கு அதில் வரி செல்கிறது. எனவே பரிமாற்றத்தில் இல்லாத பணம் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கி விடும். ஒரு கோடி பேரிடம் ஆளுக்கு ஒரு இலட்சம் தங்கி விட்டால் இலட்சம் கோடி பணப்பரிமாற்றத்திற்கு ஆட்படுவதில்லை. அதனால் அதிலிருந்து அரசுக்கு ஒரு வருமானமும் வராது.
செல்வம் கைக்கு கை மாறிக் கொண்டே இருந்தால்தான் பொருளாதாரம் மேன்மையடையும். வங்கிகள் இதற்காகத்தான் உருவாகின.
இன்னொரு வகை கருப்புப் பணம் 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து விட்டு 40 ரூபாய்களை கணக்கில் காட்டி வெளிநாட்டின் பணத்தை அப்படியே வெளி நாட்டு வங்கிகளில் போட்டு விடுவது. இது இந்தியாவின் வளத்தைக் கொள்ளையடிப்பது. இதை ஒழிக்க உலகளாவிய நடவடிக்கை தேவை. இதற்கு அடுத்து அந்த இந்தியாவின் வளம் இன்னொரு நாட்டின் கருப்புப் பணத்தை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்து இலாபமெடுப்பது. இது கொள்ளையிலும் கொள்ளை. இதிலும் உலகளாவிய அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் செயல் பட்டால் மட்டுமே ஒடுக்க முடியும்