ஆறு வார்த்தைகள் !

முரளி1

Facebook User
ஆறப்போவது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
தீரப்போவது எப்போது இப்பாவம் ?
சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?

இளையாழ்வான் கணைகளை கொடுக்க
எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்

வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !

'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !

அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ

ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை

ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமாஸ்ரைய! '
ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !

பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !


015.jpg
 
Last edited:
ஜீவனை நல்வழி படுத்தும் விதமாக வந்த இவ்வாறு வார்த்தைகள் ஆறு கட்டளைகளாக கொண்டு வாழ்ந்தால் சிறப்பு எய்தலாம்.

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

என்ற பழைய திரைப்பட பாடல் வரியை நினைவுபடுத்துகிறது இந்த பதிவு. மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
 
Back
Top