மதுரை மைந்தன்
New member
ஐயா ஐயா என்று கத்திக் கொண்டு கிளி வீட்டினுள் பறந்தது.
என்னாச்சு? எதற்க்கு இப்படி கத்துகின்றாய்? என்றார் குடந்தை ஜோஸ்யர்.
யாரோ வந்துருக்கா!
ஜோஸ்யம் கேட்க வந்திருப்பா!
இல்லை! கையில கம்பு இடுப்புல வாள்! இரண்டு பேர் வந்திருக்கா!
யார் வந்திருப்பார்கள் என்று நினைத்தவர், பூஜை அறையில் சென்று "அம்மா! தாயே! ஜகன்மாதா! ராஜராஜேஸ்வரி! நீயே துணை! என்று வணங்கினார்.
வாசலுக்கு வந்தவர், வந்தியத்தேவனையும் திருமலையும் பார்த்து நண்பர்களே வரவேண்டும் என்றார்.
நமது மஹாராஜாவுக்கு ஒரு மனு வந்துள்ளது; ஒரு சந்தேகம்! என்றான் திருமலை.
என்ன சந்தேகம்? என்றார் ஜோஸ்யர்.
ஜோஸ்யம் சரி! ஜோஸ்யர் சரியா? இதுதான் அவரது சந்தேகம்.
அதற்கு நான் என்ன சொல்ல முடியும்! நானும் ஒரு ஜோஸ்யர்தானே!
ஐயா, கல்யாணத்திற்கு ஜாதகம் பொருத்தம் பார்த்ததில் இரண்டு ஜோஸ்யர்கள் வேறு வேறு கருத்து சொல்கிறார்கள். இருவரில் யார் சரியாக சொல்கிறார்கள் என்று தெளிவு படுத்தும்படி அரசருக்கு மனு வந்துள்ளது என்றான் வந்தியத்தேவன்.
நண்பா! ஒரு ஜோஸ்யரின் கருத்து சரியா? தவறா? என்று நான் அபிப்ராயம் சொல்ல முடியாது. ஆனால், திருமண பொருத்தம் பார்க்க ஒரு உபாயம் உள்ளது!
அது என்ன?
மொத்தமுள்ள 27 நக்ஷத்திரங்களும் 12 ராசியில் அடங்கும்; ஒரு ராசிக்கு இரண்டேகால் நக்ஷத்ரம் என்று பிரித்து அட்டவணை போடவேண்டும். மேஷ ராசியில் அடங்கியுள்ள அஸ்வதி, பரணி, கார்த்திகை முதல் பாதம் ஆகிய நக்ஷத்ரங்களும் துலாம் ராசியில் அடங்கியுள்ள சித்திரை 3,4ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம் ஆகிய நக்ஷத்ரங்களும் ஒன்றுக்கொன்று "சமசப்தமம்" என்று சாஸ்திரம் சொல்கின்றது. அதேபோல்,
ரிஷபம் விருச்சிகம் ராசிகளில் உள்ள நக்ஷத்திரங்கள்,
மிதுனம் தனுசு ராசிகளில் உள்ள நக்ஷத்திரங்கள்,
கடகம் மகரம் ராசிகளில் உள்ள நக்ஷத்திரங்கள்,
சிம்மம் கும்பம் ராசிகளில் உள்ள நக்ஷத்திரங்கள்,
கன்னி மீனம் ராசிகளில் உள்ள நக்ஷத்திரங்கள்
ஒன்றுக்கொன்று சமசப்தமம் ஆகும்.
சமசப்தமம் என்றால் பூர்வ ஜன்ம பந்தம்; அவர்கள் திருமணம் செய்து கொண்டால் பூர்வ ஜன்ம பந்தம் தொடர்கிறது என்று அர்த்தம். வேறு எந்த பொருத்தமும் பார்க்காமல் தைர்யமாக திருமணம் செய்யலாம்.
ஐயா, ஆயில்யம் மூலம் என்று இரண்டு நக்ஷதிரங்களைப் பற்றி உங்கள் அபிப்ராயம்?
நண்பா! திருவோணம் மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரம்; திருவாதிரை ஸ்ரீருத்ரனின் நக்ஷத்ரம். ஆயில்யத்திற்கு திருவோணமும், மூலத்திற்கு திருவாதிரையும் சமசப்தமம்.
அந்த நக்ஷத்திரங்கள் பற்றி ஒரு பழமொழி சொல்லப்படுகிறதே!
நண்பா, அது பழமொழி அல்ல; வழி வழியாக சொல்லப்பட்டு வரும் ஒரு அபிப்ராயம்! அது உண்மையா? அல்லது மருவலா! தெரியாது. ஆனால், காலம் மாறிவிட்டது; கூட்டு குடும்பம் என்ற நிலை மாறி
பெற்றோர் ஓரிடம் குழந்தைகள் ஓரிடம் என்ற நிலை உருவாகிவிட்டது.
நமது குழந்தைகள் திருமணம் நமது கருமம்(கடமை) என்று
நினைக்காமல், பலன் கருதாத காரியம் என்று நினைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இது காலத்தின் கட்டாயம்
நமது குலகுரு ஸ்ரீஸ்ரீஆசார்யாள் அனுமதி பெற்று சமசப்தம அடிப்படையில் தைரியமாக நமது குழந்தைகளுக்கு திருமணம் செய்யலாம்! எந்த பாதகமும் ஏற்படாது!
என்று மஹாராஜாவிடம் எடுத்து சொல்லுங்கள்.