Arudkavi Ganesh
New member
ஓம்
சோற்றைக் குறைத்திடச் சோகம் தீர்ந்திடும்!
(ஆக்கம் அருட்கவி ஞானகணேசன்)
பானை வயிறும் பன்றிபோல் உருவமும்
ஆனை நடையும் அடிக்கடி நோயும்
மோனை ஏனடி? முழுதும் சோறடி
ஊனை மாற்றிட உருவமும் மாறுமே!
தட்டம் நிறைத்து தாளிதக் கறியுடன்
வெட்டுறோம் சோற்றை வெகுவாய்த் தினந்தினம்
முட்டையும் இறைச்சியும் மீனுடன் பலதும்
கொட்டியே வளர்க்கிறோம் குண்டான் வயிற்றையே!
கட்டுடல் பெருத்து களுத்தொடு வயிறும்
கெட்டியாய் இருந்த காலும் வீங்கி
இட்டும் முட்டும் இடுப்பு வலியொடு
பெட்டைகள் இருப்பின் பார்ப்பரோ பெடியள்?
பூதம் போலப் பொலிந்திட வைத்திடும்
பாதம் வீங்கிப் பருத்திட வைத்திடும்
ஊதி உடலின் உருவமும் மாற்றிடும்
சாதம் குறைத்திட சுகங்கள் பெருகுமே!
சோறு தருகுது சக்கரை வியாதியை
சோறே தருகுது சோர்வொடு பருமனை
சோற்றைக் குவித்து சோகம் பெருக்கா(து)
சோற்றைக் குறைத்துச் சுகத்தொடு வாழ்வமே!
சோற்றைக் குறைத்திடச் சோகம் தீர்ந்திடும்!
(ஆக்கம் அருட்கவி ஞானகணேசன்)
பானை வயிறும் பன்றிபோல் உருவமும்
ஆனை நடையும் அடிக்கடி நோயும்
மோனை ஏனடி? முழுதும் சோறடி
ஊனை மாற்றிட உருவமும் மாறுமே!
தட்டம் நிறைத்து தாளிதக் கறியுடன்
வெட்டுறோம் சோற்றை வெகுவாய்த் தினந்தினம்
முட்டையும் இறைச்சியும் மீனுடன் பலதும்
கொட்டியே வளர்க்கிறோம் குண்டான் வயிற்றையே!
கட்டுடல் பெருத்து களுத்தொடு வயிறும்
கெட்டியாய் இருந்த காலும் வீங்கி
இட்டும் முட்டும் இடுப்பு வலியொடு
பெட்டைகள் இருப்பின் பார்ப்பரோ பெடியள்?
பூதம் போலப் பொலிந்திட வைத்திடும்
பாதம் வீங்கிப் பருத்திட வைத்திடும்
ஊதி உடலின் உருவமும் மாற்றிடும்
சாதம் குறைத்திட சுகங்கள் பெருகுமே!
சோறு தருகுது சக்கரை வியாதியை
சோறே தருகுது சோர்வொடு பருமனை
சோற்றைக் குவித்து சோகம் பெருக்கா(து)
சோற்றைக் குறைத்துச் சுகத்தொடு வாழ்வமே!