சர்வதேச படவிழா

tnkesaven

New member
vசென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச படவிழா, வரும் 12 ஆம் தேதி தொடங்கி, 8 நாட்கள் நடக்கிறது.

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்படவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச திரைப்படவிழா வருகிற 12ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோர் இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்கள்.

சர்வதேச திரைப்படவிழாவின் தொடக்க நிகழ்ச்சியும், நிறைவு விழாவும் சென்னையில் உள்ள முத்தா வெங்கடசுப்பாராவ் அரங்கில் நடைபெறுகிறது.

இந்த திரைப்படவிழாவில் 58 நாடுகளில் இருந்து 165 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது.

இதில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படங்களும் அடங்கும்.

இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ், ஐநாக்ஸ், அபிராமி, கேசினோ, ராணி சீதை ஹால் ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளன.

தமிழ்படங்கள்

தமிழ் படங்களுக்கான போட்டிக்கு ஆதலால் காதல் செய்வீர், 6 மெழுகுவர்த்திகள், அன்னக்கொடி,

ஹரிதாஸ், கும்கி, மரியான், மூடர்கூடம், மூன்று பேர் மூன்று காதல், பரதேசி, பொன்மாலைப்பொழுது, சூது கவ்வும்,

தங்கமீனகள் ஆகிய 23 படங்கள் வந்துள்ளன
.

தமிழ்திரைப்படங்களை விருதுக்கு தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் தலைவராகவும்,

நடுவர் குழு உறுப்பினர்களாக நடிகை ஸ்ரீபிரியா, எழுத்தாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

courtesy;''vikatan news
 
Back
Top