ரஜினியின் கோச்சடையான் ஓர் முன்னோட்டம்...!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் அந்த பொங்கல் விருந்தில் என்ன இருக்கிறது என்பதை கொஞ்சம் டேஸ்ட் பார்க்கலாம்...

* கோச்சடையான் தென் தமிழகத்தில் சங்க காலத்தை ஒட்டி ஆண்ட ஒரு தமிழ் மன்னனின் வீரமிக்க படைத் தளபதி. அவரது மகன் ராணா. அப்பாவுக்கு வீரம் மட்டுமே சொத்து என்றால் மகனுக்கு வீரமும், நடனமும் சொத்து.

* முதல் பகுதியில் கோச்சடையானின் ஆதிக்கம் இருக்கும். ஆர்வ கோளாறினால் மகன் ராணா சில வீரதீர காரியங்களில் இறங்கி எதிரிகளிடம் மாட்டிக்கொள்ள அவரை தனி ஆளாக எதிரியின் கோட்டைக்குள் சென்று கோச்சடையான் மீட்கும் காட்சியில் அனல் பறக்கும். எதிரிகளால் தந்தை கோச்சடையான் கொல்லப்பட தளபதி பொறுப்புக்கு வரும் ராணா ஆடும் ஆக்ஷன் ஆட்டம்தான் படத்தின் இரண்டாம் பகுதி.

* கோச்சடையான் ஜோடியாக ஷோபனா, ராணா ஜோடியாக தீபிகா படுகோனே. ராணாவின் டான்ஸ் மாஸ்டராக ருக்மணி. கோச்சடையானின் நண்பராக சரத்குமார், ராணாவின் நண்பராக ஆதி. வில்லன் ஜாக்கி ஷெராப். ராஜகுரு நாசர்.

* ஷோபனாவுக்கும், ராணாவுக்கும் நடக்கும் போட்டி நடனம் அரங்கத்தை அதிர வைக்கும்.

* படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பை தேசிய விருது பெற்ற நீத்தாலுல்லு செய்திருக்கிறார். தமிழ் நாட்டின் பண்டைய ஆடைகளை கோவில் சிலைகளில் இருந்து படியெடுத்து வரைந்து கொடுத்திருக்கிறார். அதனையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

* ஏ.ஆர்.ரகுமான் இசையில் 6 பாடல்கள் இடம்பெறுகிறது. அதில் ஒன்று "எதிரிகள் இல்லை..." என்ற ரத்தத்தை சூடேற்றும் யுத்த பாடல். வைரமுத்துவின் பாடலை தமிழ், தெலுங்கில் பாடியிருப்பவர் ரஜினி. இந்தி பதிப்பில் பாடியிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

* தமிழ் தெலுங்கு இரண்டிற்குமே ரஜினி டப்பிங் பேசியிருக்கிறார்.

* படம் ஓடும் நேரம் 125 நிமிடங்கள். இண்டர்வெல் கிடையாது.

* படத்தை 3டியிலும் வெளியிட இருக்கிறார்கள். இதற்கான பணிகள் சீனாவில் நடந்து வருவதால் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட படம் பொங்கலுக்கு வருகிறது.

கோச்சடையான் லேட்டா வந்தாலும் கண்டிப்பாக லேட்டஸ்ட்டா வருவான்.
 
Surely this film is a FLOP... its not a real Rajini movie.. its an animation movie... Real Thalaivar fans doesn't like this...
 
Back
Top