ஜாம்பவான்கள் அடுத்தடுத்து மரணம்: அதிர்ச்சியில் தமிழ் சினிமா

nandagopal.d

New member
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து ஜாம்பவான்களை பறிகொடுத்து வருவதால் தமிழ் சினிமா கலைஞர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாஜி ஹீரோயின் ராஜசுலோச்சனா திடீர் மரணம் அடைந்தார். அடுத்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த சுகுமாரி மரணம் அடைந்தார். இசைத் துறையை சேர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ். டி.எம்.சவுந்தர்ராஜன், டி.கே.ராமமூர்த்தி, லால்குடி ஜெயராமன் ஆகியோர் அடுத்தடுத்து இயற்கை எய்தி இசை உலகில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்றார்கள்.

50 படங்களை இயக்கிய மணிவண்ணன் மரணத்தை முத்தமிட்டார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ராசுமதுரவன் இளம் வயதிலேயே புற்றுநோய்க்கு பலியானார். ஜெமினி லேப், ஆனந்த் சினி சர்வீஸ் நிர்வாகத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான ரவிசங்கர் பிரசாத் தற்கொலை செய்து கொண்டது சினிமாவில் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி குவித்து 50 வருடங்கள் தமிழ் சினிமாவின் ஆணிவேராக இருந்த காவியக் கவிஞர் வாலி நம்மை விட்டுச் சென்றது சினிமாவில் மட்டுமல்ல நாட்டு மக்களிடமும் பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது. அந்த துக்கம் முடிவதற்குள்ளாகவே மஞ்சுளாவை சினிமா இழந்தது. இப்படி அடுத்தடுத்து சினிமா ஜாம்பவான்கள் மறைந்தது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மரணம் கடவுளின் கையில் என்றாலும் அடுத்தடுத்து அதை சந்திப்பதால் அது கலைஞர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிகள் :::தினமலர் நாளேடு
 
இரண்டு தினங்களுக்கு முன்பு மஞ்சுளா விஜயகுமாரும் மரணமடைந்தார்.

ஆமாம், அடுத்தடுத்து இப்படி திரையுலகைச் சேர்ந்தவர்களின் மரணச்செய்த்ஹி அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இனிமேலும் இது தொடராமல் இருக்க நாம் வேண்டிக்கொள்வோம்.
 
அண்மையில் கரகாட்டக்காரன் பட புகழ் கனகாவைப் பற்றி வந்துகொண்டிருக்கும் செய்திகள் கூட கவலையை தருவதாக இருக்கின்றன...
 
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ்ஜாப்ஸ், மவுஸ் கண்டறிந்த டக்லஸ் என்கல்பர்ட் போன்ற கணினி வல்லுனர்கள் மறைந்தபோது நாம் இவ்வளவு கவலைப்படவில்லையே!
 
ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ்ஜாப்ஸ், மவுஸ் கண்டறிந்த டக்லஸ் என்கல்பர்ட் போன்ற கணினி வல்லுனர்கள் மறைந்தபோது நாம் இவ்வளவு கவலைப்படவில்லையே!

அவர்களுக்காக உலகமே கவலைப்பட்டது ஐயா.....இவர்கள் நம்மை சந்தோஷப்படுத்தியவர்கள்....உள்ளூர் ஜாம்பவான்கள்...அதற்காகத்தான் இந்தக் கவலை.
 
எங்கோ படித்தது ஆனால் எங்கே என்று நினைவில் இல்லை.

' MADRAS ' என்று எழுதினால் அதன் கூட்டு எண் 6. ஆறாம் எண் சுக்கிரனுக்கு உரியது. சுக்கிரன் கலைத்துறைக்கு அதிபதி. எனவே தமிழகத்தில் கலைத்துறை ஏறு முகத்தில் இருந்தது.

' CHENNAI ' என்று மாற்றிய பிறகு கலைத்துறை நலிவடைய ஆரம்பித்து விட்டது.

எனக்கு நியூமராலஜியில் பரிச்சயம் இல்லை. எனவே முழு ஆர்வத்துடன் நினைவில் வைத்துக் கொள்ள வில்லை. விஷயம் அறிந்த உறுப்பினர்கள் யாரும் இருந்தால் கருத்து தெரிவிக்கலாம்.

மும்பை நாதன்
 
Back
Top