nandagopal.d
New member

பரபரப்பான சாலையின் சிறிது தூரத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் கட்டிடங்கள் அதன் அகன்ற மாடியின் உள்ளே
பழிங்கு கல்லால் ஆன மாளிகை அது ஒரு படபிடிப்பு தளம்
பிரபல நடிகர் அவர் வயது என்னவோ ஐம்பத்தி ஐந்து ஆனாலும் இன்னமும் கதாநாயகன்தான்.
அந்த படத்தில் அவரின் வேடம் ஒரு பணக்காரனின் கார் ஓட்டுனர்
அன்றைய தினம் எடுக்கபட வேண்டிய காட்சியை பற்றி துணை இயக்குனர் அந்த நம்மூர் நடிகையிடம் விளக்கி கொண்டு இருந்தார்.
ரெடி டேக் சொல்லி தயாரானார் இயக்குனர்.
காதலி தன் அப்பாவிடம்
"அப்பா நான் ஒரு டிரைவரை காதலிக்கிறேன் கல்யாணம் செய்தால் அவரைத்தான் என்று
இன்னும் பழைய சினமாவில் வரும் சில வசனங்களை சேர்த்து ஒரு பக்க அளவில் விடாது பேச முடியாமல்,
சொதப்பி கொண்டிருந்தாள் தமிழில் ராவும் லாவும் வராத நடிகை,
எரிச்சல் அடைந்து ஒரு தம் போட கிளம்பி விட்டார் நம்ம நடிகர்.
மாடியின் ஜன்னலிலிருந்து எறும்பாகி போன மனிதர்களையும் வாகனங்களையும் பார்த்து கொண்டு இருக்கையில்
செல்போனை அவரின் ( p .a )கொண்டு வந்து கொடுத்தான். மேடம் லைன்ல இருகாங்க சார்"
எரிச்சலுடன் வாங்கிய நடிகர் கொஞ்சம் தூரம் தள்ளி சென்று,
சொல்லு "ஏங்க கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு வாங்க" பதட்டத்துடன் சொல்லி விட்டு லைனை கட் செய்தார் அவரின் மனைவி,
என்ன ஆச்சி இவளுக்கு நடிகரின் மனம் பதட்டம் அடைந்து தன்( பி எ) விடம் சொல்லி விட்டு
வேக வேகமாக காரை ஓட்டி வீட்டை அடைந்தார் நடிகர்.
மனைவியிடம் என்னாடி ஆச்சி சொல்லி தொலை அப்படின்னு கோபத்துடன் கேட்டார் நம்ம பொண்ணு அப்படின்னு சொல்லி நிறுத்தினாள் உடனே அருகில் இருந்த மகள்,
அப்பா நான் நம்ம வீட்டில கார் டிரைவரா இருக்கிற ஆனந்தனை காதலிக்கிறேனப்பா இன்னும் ஏதோதோ சொல்லி
அவள் காதல் வசனத்தை சொல்லி முடிக்க
அவருக்கு மயக்கும் வராத குறைதான் தன் படத்தின் பிரதியை போலவே கதையும் வசனமும் இருக்கேன்னு
புரியாமல் விக்கித்து நின்றார் அந்த பிரபல நடிகர்