சித்திரம் எழுப்பிய கவிதை

உடனடியாக யாப்பிலக்கணம் பற்றி அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவலாம்:
யாப்பிலக்கணம்
முருகேசபிள்ளை

http://noolaham.net/project/50/4950/4950.pdf

இந்தப் புத்தகத்துடன் என் 'கவிதையில் யாப்பு' தொடர்க் குறிப்புகளையும் படித்தால் ஆர்வத்துடன் மரபில் கவிதை முனைய ஏதுவாக இருக்கும். ஆல் த பெஸ்ட்!

*****

வாழத்துகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் நன்றி ரமணி அவர்களே!
சேமித்துக்கொண்டேன். கவிதையில் யாப்பையும் தொடர்ந்து வருகிறேன்.
 
2673d1366859136-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-img-eduexp.jpg


10. அனுபவம் பேசுமோ ஏங்குமோ?

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆங்கிலக் கல்வியும் அனுபவக் கல்வியும்
ஆங்கோர் சாலையில் எதிர்ப்படும் போது
ஏங்குவது எதுவென்(று) இப்படம் காட்டுமே
வாங்கிடும் கல்வியே ஆங்கிலக் கல்வியெனில்
தூங்கிடும் ஞானம் எழுப்புவ தனுபவம்
ஈங்கிதை யுணர்ந்தோர் வாழ்வில் நிம்மதி
ஓங்கி வளர்ந்தே உள்மனம் செழிக்குமே.

--ரமணி, 25/04/2013

*****
 
சித்திரம் பாடும் கவிதைகள் சிறப்பு புது எண்ணத்தில் வண்ணங்கள் வாழ்த்துக்கள் ஜெகதீசன்.
 
no-hands-boy-utensils-wash-up-motivational-and-inspirational.jpg


11. இறைவன் இருப்பில் ஐயம்

(பலவிகற்ப பஃறொடை வெண்பா)
கரங்களே இல்லாது கால்கழுவும் ஏனங்கள்
கர்மவினை யானாலும் கால்கள் இயக்கில்
சிறுவனவன் செய்திடும் சாகசம் நெஞ்சைப்
பறித்திடும் காட்சியில் பற்றுமே ஐயம்
இறைவனும் உள்ளானோ இங்கு?

--ரமணி, 07/06/2013

*****
 
கையறு நிலைதான்!
இல்லை இடக்கை வலக்கை!
கையறு நிலையல்ல....
இருக்கிறது வாழ்க்கை!

கரமில்லாக் காயம்தான்,
உரமில்லா உள்ளமன்று!
அஞ்சிலே வளைந்துவிட்டன கால்கள்!
ஐம்பதானாலும் வளைத்துவிடுவான் வாழ்வை!

அச்சமோ, அனுதாபமோ தேவையில்லை யார்க்கும்.
முடியுமாயின் அப்பிஞ்சு அசந்துறங்கும்வேளை
அதன் உறக்கம் கலைக்காமல்
கொஞ்சம் வெந்நீர் ஒத்தடம்
கொடுத்திடுவோம் வாரீர்!
 
mother-in-exam-hall-with-baby-child-india-inspirational-motivational.jpg


12. சின்னக் குழந்தை சமர்த்து!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)
அன்னையவள் தேர்வெழுத ஆர்வமுடன் நெஞ்சுறைந்து
கன்னற் கருவிழியால் கூர்ந்ததை நோக்கியே
மின்னற் கொடிபோலப் பொன்னின் நிறம்காட்டும்
சின்னக் குழந்தை சமர்த்து.

--ரமணி, 07/06/2013

*****
 
மார்மீதும், தோள்மீதும் வைத்தென்னை உன்னைப்போல்
யாரென்னை நேசித்தார் அன்னையே !-தேர்வெழுதி
இம்மா நிலம்புகழ பட்டங்கள் பெற்றாலும்
"அம்மா " விருதே உயர்வு.
 
என் கவிதையில் கவிஞன் சொல்வதைவிட, உங்கள் கவிதையில் குழந்தை சொல்வதில் கவிதைத்டுவம் அதிகம். Beautiful!

மார்மீதும், தோள்மீதும் வைத்தென்னை உன்னைப்போல்
யாரென்னை நேசித்தார் அன்னையே !-தேர்வெழுதி
இம்மா நிலம்புகழ பட்டங்கள் பெற்றாலும்
"அம்மா " விருதே உயர்வு.
 
Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg


13. யோகாசன யுவதியர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
ஆகாவென் றெழுந்ததுபார் பாரத யுவதியர்
யோகாசனப் பயிற்சிகள் அற்புதமாய் இங்கே!
சக்ராசன யுவதியின் உந்திமேல் பத்மாசனம்
உக்கிரமாய்ச் செய்யும் உல்லாச யுவதி!

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2011/07/Indian-Girls-in-Amazing-Yoga-Positions.jpg

*****
 
2782d1371209272-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-14.jpg


14. இலையோ செய்தி!?

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
இலைகளா லான இனிய கணேசர்!
இலையினில் செய்தி இயற்கையைப் போற்று!
கலைவண்ணம் கல்லிலே காண்பது போல
இலைகளில் காண்ப(து) இனிதோ எளிதோ
அலையலை யான வியப்பு.

--ரமணி, 14/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/10/ganesh-ji-made-by-leaf-of-tree-art.jpg
http://www.myindiapictures.com/pictures/up1/2012/04/leaf-art-amazing.jpg

*****
 
ஆலின்இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனும்
காலின்கீழ் முயலகனை இட்டுநடம் புரிபவனும்
வேலெடுத்து விளையாடி சூரனை வதைத்தவனும்
வாலெடுத்து எரியூட்டி இலங்கையை அழித்தவனும்
சிரசு நான்குடைய படைக்கும் தொழிலோனும்
அரசின்இலைக் கணபதிக்கு ஆவரோ இணை ?
 
tree-on-head-funny.jpg


15. மண்டையில் வளர்ந்த மரம்!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

*****
 
desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg


16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...del-and-funny-modeling-fashion-show-india.jpg

*****
 
tree-on-head-funny.jpg



பெண்ணை இடப்பாகம் வைத்த பெருமானும்
கண்ணைப் பெயர்த்து எடுத்தோனும்- மண்ணுலகைத்
தன்வாயில் காட்டிய மாலவனும் ஈடாமோ
தென்னை சுமக்கும் எனக்கு?
 
desi-model-and-funny-modeling-fashion-show-india.jpg



சதைகாட்டி பெண்கள் நடக்கின்றார் சீச்சீ
அதையும் சிலபேர் ரசிக்க- இதைவிட
பேன்மொய்க்கும் என்தலையில் எப்போதும் நாறுகின்ற
மீன்சுமந்து விற்றலே நன்று.
 
poor-and-rich-cartoon-jokes.jpg


17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/poor-and-rich-cartoon-jokes.jpg

*****
 

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
மண்ணை யகழ்ந்தெடுத்த மாமரத் தெங்கினை
விண்ணை யகழ்ந்திடும் வண்ணம் உயர்த்தி
சிரசில் இருத்தியே செல்வது விந்தை!
மரமண்டை தானோ இது?

--ரமணி, 19/06/2013

image:
http://www.myindiapictures.com/pictures/up1/2012/07/tree-on-head-funny.jpg

*****
மிகவும் ரசித்தேன்...
 
tree-on-head-funny.jpg



காடெல்லாம் காணாமல் போனதடா - அந்தக்
கார்மேகம் அழவில்லை சிரிக்குதடா - மரத்தை
சிரத்தின் மேல் கொண்டாட மறந்தால், உதிரமும்
நீராகும் நிலமகளின் நாவில்...
 
dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi.jpg


18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...eigners-are-not-allowed-funny-india-hindi.jpg

*****
 
girls-weight-without-makeup-and-with-makeup-funny.jpg


19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

image:
http://www.myindiapictures.com/pict...ight-without-makeup-and-with-makeup-funny.jpg
00ramaNi-chithtira kavi-18

*****
 
Back
Top