கிசுகிசுக்கள்

tnkesaven

New member
முழுநேர கிளாமருக்கு ரெடியாகும் நடிகை!
மூன்றெழுத்து நீர்ப்பறவை நாயகி நீச்சல் உடை நாயகியாகப் போவதாக செய்தி வந்துள்ளது. இந்த திடீர் முடிவுக்கு காரணம் என அவரிடம் கேட்டபோது, தற்போது நடித்த படத்தின்மூலம் என் கேரியர் மாறும் என எதிர்பார்த்தாராம். ஆனால் கொஞ்சம் இருந்த மவுசும் போய்விட்டதாம்..

இதனால் இளவட்ட ரசிகர்களை கவர முழுநேர கிளாமர் நடிகையாக மாற முடிவெடுத்திருக்கிறாராம். இனிமேல் அவர் நடிக்கும் படங்களில் இளமை ததும்புமாம். அதுபோல், முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போடவேண்டுமென்றாலும் தயார் என கூறியுள்ளாராம்.

சிக்ஸ் பேக்கிலிருந்து எய்ட் பேக்குக்கு மாறும் நடிகர்
!

விசாலமான நடிகர் ஏற்கெனவே போலீஸ் அதிகாரியாக நடித்த படத்தில் உடற்பயிற்சி செய்து தனது உடல் கட்டை சிக்ஸ் பேக்குக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து சில நடிகர்களும் சிக்ஸ் பேக்குக்கு மாறினார்கள்.

இந்நிலையில் தற்போது கஜராஜா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறாராம். ஒரு சண்டைக் காட்சிக்காக சிக்ஸ் பேக்கிலிருந்து எய்ட் பேக்குக்கு உடல்கட்டை மாற்றி வருகிறாராம்.

இதற்காக பிரத்யேக மாஸ்டரை நியமித்து முறையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுடன் எய்ட் பேக்குக்கு மாறி உள்ளாராம். இவரின் இந்த முயற்சி ஆக்ஷன் ஹீரோக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாம்
 
Back
Top