சன் தொலைக்காட்சியில் வள்ளி சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்துவைக்கிறார் நடிகை உமா.
முன்னாள் கதாநாயகி சுமித்ராவின் மூத்த மகள் உமா சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பெரிய அளவில் பிரபலமாகாவிட்டாலும் நல்ல நடிகை என்று பெயரெடுத்தவர். சொக்கத்தங்கம், தென்றல், கடல்பூக்கள், செல்வம் உள்ளிட்ட பல படங்களில் திறமையாக நடித்துள்ளார் உமா.
குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட உமா ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை. இதனால்தான் விரைவில் திருமணமாகி பெங்களூர் பக்கம் செட்டிலாகிவிட்டார். அங்கே போய் சும்மா இல்லை. கன்னட சீரியல்களில் நடித்து வருகிறார்.
அந்த அனுபவம்தான் தமிழ் சீரியல்களில் நடிக்க அவரை தூண்டியிருக்கிறது. விடுவார்களா நம் ஊர் சீரியல் தயாரிப்பாளர்கள். பெங்களூருக்கு டிக்கெட் போட்டுப்போய் புக் செய்துவிட்டார்கள்.
வள்ளி என்ற சீரியலில் இப்போது நடித்து வருகிறார். விரைவில் இது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சினிமாவில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த உமா டிவியில் இல்லத்தரசிகளிடம் பெயரெடுப்பாரா, அல்லது இவரும் அழ வைப்பாரா என்று சீரியல் ஒளிபரப்பாகும் போது தெரியு
---------------------------------------------------------------------------------------------------
தனியார் தொலைகாட்சி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2 வை நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவில் வில்லனாக நடித்து தனக்கென ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளவர் பிரகாஷ்ராஜ். சின்னத்திரை இவருக்கு புதிது அல்ல. சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் முன்பாக பாலச்சந்தரின் ‘கையளவு மனசு' தொடர்மூலம் நடித்து பிரபலமானார். பின்னர் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் நடித்தவர். இப்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அடிஎடுத்து வைக்கப்போகிறாராம்.
தனியார் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் பிரகாஷ் ராஜ் என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.
‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' சீசன் 1 தொகுத்து வழங்கிய சூர்யாதான் 2வது சீசனை தொகுத்து வழங்கப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மாற்றான் படத்திற்குப் பிறகு சிங்கம்-2 படத்தில் பிஸியாகிவிட்டார் சூர்யா. ஆனாலும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திற்காக அவருடன் பேசியுள்ளனர் தனியார் டிவி குழுவினர். நீங்களும் ஆனால் அதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம். தவிர்க்க முடியாத சில காரணங்களால் சூர்யா வேண்டாம் என்று கூறிவிட்டதால் தென்னிந்திய மொழிகளில் பாப்புலரான பிரகாஷ்ராஜை தேர்ந்தெடுத்துள்ளது தனியார் தொலைக்காட்சி.
----------------------------------------------------------------------------------------------------------
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.
சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.
இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்!
----------------------------------------------------------------------------------------
சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் பேசிய சிவா தன்னுடைய சினிமா, காதல், பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொண்டார்.
படிப்பதை விட தனக்கு நடிப்பதில் தான் ஆர்வம் அதிகம் என்று கூறிய சிவா, முதலில் நாடகத்தில் நடித்து பின்னர் எப்.எம், அப்புறம் சினிமா துறைக்கு வந்ததாக கூறினார்.
சினிமா துறைக்கு சென்றதற்கு தன்னுடைய வீட்டில் யாரும் விரும்பவில்லை என்று கூறிய சிவா, பின்னர் ரஜினி படத்தை வீட்டில் மாட்டிய பின்னர்தான் தனக்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததாக கூறினார்.
நடிகர் அஜீத் தனக்கு அண்ணன் மாதிரி என்றும், நடிகர் விஜய்யின் ரசிகன் என்றும் கூறினார். தன்னுடைய படங்களைப் பார்த்து விஜய் பாராட்டியும், ஆலேசானைகளையும் கூறியுள்ளார் என்றார் சிவா.
சினிமா துறைக்கு வருவதற்கு எனக்கு எந்த பின்னணியும் இல்லை. அதுதான் தனக்கு ப்ளஸ் என்று கூறிய சிவா தன்னால் சுதந்திரமாக செயல்பட முடிவதற்கு அதுதான் காரணம் என்றார். சினிமாவில் நுழைவதற்கு நானும் போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அந்த நாட்களில் நான் மிகவும் சந்தோசமாக சிரித்துக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருந்தேன் என்று கூறிய சிவா இப்போதைய வெற்றிக்கு அந்த நம்பிக்கைதான் காரணம் என்றார்.
I dnt have any background in cinema: siva
-------------------------------------------------------------------------------------------
எதிலும் புதுமைகளை படைப்பதில் கமலுக்கு நிகர் கமல் தான். ஹாலிவுட் தரத்தில் தான் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதனால் தாங்கள் பெருமளவு பாதிக்கப்டுவோம் என்று தியேட்டர் அதிர்பர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கமல் தரப்புக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் பிரச்னை உருவாகியுள்ளது.
கமல், நடித்து, இயக்கி, பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமாரும் நடித்துள்ளனர். ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் ஜனவரி 11ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது. நாளை 7ம் தேதி படத்தின் ஆடியோ ரிலீசை வைத்துள்ளார்.
இந்நிலையில், விஸ்வரூபம் ரிலீசாகும் அதேநாளில் 8 மணிநேரத்திற்கு முன்பாக டி.டி.எச். சேவை மூலம் டி.வி.யில் ஒளிபரப்பினால் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியும் என்றும், தியேட்டர்களுக்கு போகாதவர்களையும் படம் பார்க்க வைக்க முடியும் என்றும் கமல் கருதுகிறார். இதற்காக பிரபல டி.டி.எச். நிறுவனங்களுடன் பெரும் தொகைக்கு கமல் பேசியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளையும் கமல் சந்தித்து பேசி அவர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். திரையுலக சங்கத்தின் கூட்டு கூட்டத்தை கூட்டி இதுபற்றி முடிவு செய்யலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் தியேட்டர் உரிமையாளர்கள் இதனை எதிர்த்துள்ளனர். கமலை பின்பற்றி எல்லா படங்களையும் டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப முடிவெடுத்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராது என அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக முக்கிய முடிவு எடுக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
நன்றி -தினமலர்