தகவல் - தகவல்கள் சரியான உபயோகம் தான். ஆங்கிலத்தில் DATA என்று ஒரே சொல் இருக்கிறது.
எல்லாத் தகவலையும் (முழுத் தகவலையும்) சொல்லிவிட்டேன் என ஒருமையில் வரும்
உங்களைப் பற்றி வரும் தகவல்கள் சரியில்லை எனப் பன்மையில் வரும்
ஒருவரிடம் இருந்து பல தகவல்கள் வரலாம். பலரிடமிருந்து ஒரே தகவலும் வரலாம். தகவலில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்தே அது ஒருமையா பன்மையா எனத் தீர்மானிக்கப்படும்.
பலபதிவுகளில் ஒரே தகவலை சிலர் பதித்திருப்பர். ஒரே பதிவில் பல்லாயிரம் தகவல்களை சிலர் பதிப்பர்.
ஆகப் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒருமை-பன்மை இலக்கணத்தில் இருந்து தகவல்கள் சற்றே விதிவிலக்கு உள்ளவை எனத் தகவல்.
நம் தமிழ் மன்றத்தில் பல விதமான தகவல்கள் கிடைக்கும் என்பதை இது உறுதி படுத்துகிறது அல்லவா?
ஆங்கிலத்தில் கூட Information - ஒருமை, Informations - பன்மை. இவை உபயோகப்படுத்தப்படும் விதத்தில் இப்படி வேறுபாடுகள் உண்டு.