சொல்வதெல்லாம் உண்மை

வாழும் சமுதாயத்தில் எவ்வளவு சீர்கேடுகள் இன்று தமிழ்சமூகம் எவ்வளவு கீழ்த்தரமான
வாழ்க்கை வாழ்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது. சொல்வதெல்லாம்
உண்மை என்ற நிகழ்வு. காதலுக்காக தகப்பன் செய்த மூன்று கொலையை ஒரு நிகழ்வில் மகள்
வெளிப்படுத்த தகப்பனும் தாயும் கைதுசெய்யபட்டதும் அவர்களுடைய வீட்டில் மூன்று
எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டதுவும் உங்களில் பலர் ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள்.
ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சனைகள்
விவேக்கின் காமெடி போல் கட்டிய மனைவியை
விட்டுவிட்டு பிச்சைக்காரியுடன் (எட்டு குழந்தை பெற்வள்)கணவன் வாழ்வதாக ஒரு மனைவி
குற்றம் சாட்ட கணவன் அவள் உத்தமி என்பதுபோல் பேசியது ...........
எமக்குள் இவ்வளவு அழுக்குகளா? அல்லது சம்மந்தப்பட்ட
தொலைக்காட்சி இதை கற்பனையில் தயாரிக்கின்றதா? இது உண்மையானால் எம்மினம்
ஆரோக்கியமானதாக உருவாக முடியுமா?
இந்நிகழ்ச்சி என்னை அடிக்கடி கண்கலங்க வைக்கின்றது
 
எனக்கும்,

14 வயதில் தம் மூத்த பெண்ணுக்கு தாமே வரன் பேசி மணம் செய்து வைப்பர். அதையே இரண்டாவது மகள் 16 வயதில் தானாய் விரும்பி ஒருவனுடன் சென்று தாலிகட்டி சில மாதங்கள் குடித்தனம் நடத்திய பின்னும் நீ மேஜராகவில்லையாதலால் உன் பெற்றோரிடம் போ அல்லது கோட்டில் ஒப்படைப்ப்போம். இதனால் உன்னவர் ஜெயிலுக்கு செல்வான் என மிரட்டுவர்.

இதெல்லாம் நம் தமிழ் சமுதாயத்தில் தானா நாடக்கிறது அதிலும் தமிழ் நாட்டிலா நடக்கிறது..

சந்தர்ப்ப சூழ் நிலையால் புலம் பெயர்ந்து வெளி நாடுகளில் வாழ்வோரே.. நம் பெண் ஒருவனை விரும்பி அவனுடன் குடும்பம் நடத்தினால் என அறியும் போது வயதினை நோக்காது அந்தஸ்தினை நோக்காது அவன், அவள் விருப்பமறிந்து சேர்த்து வைக்கும் இக்காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் கலாச்சாரத்தில் மேன்மைபெற்றிருப்பதாக கூறப்படும் நம் சமுக்த்திலா இப்படியெல்லாம் என தோன்றும்.

தோழியென நம்பியவள் சக்களத்தியாகி என் தோழியின் கணவனே எனக்கும் கணவன் . அவனை என்னோடு சேர்த்து வையுங்கள் என கோடானு கோடிப்பேர் முன் தயக்கமின்றி எப்படி இந்த சிறிய பெண்களால் தைரியமாய் பேச இயல்கிறது.
 
ஒரு தாய், ஒரு ம்கள், ஒரு மகன், சொத்துக்காய் சண்டை.. தமிழில் இல்லை..ஆங்கிலத்தில் .. பார்த்தால் படித்தவர்களாய் மிகவசதியானவர்களாய் நாகரீகம் மிக்கவர்களாய் தெரிகிறார்கள். ஆனால் தம வீட்டு விடயத்தை எப்படி பகிரங்கமாக்கிட முடிகிறதோ..

தன் தந்தையோ தன்னை கெடுத்ததாய் மகளும் அதற்கு தாய் உடந்தையென சொல்வதும், தாயும் தந்தையும் சேர்ந்து கொலை செய்ததாய் காட்டி கொடுப்பதும்.. நாலு சுவரிற்குள் இருவர் மட்டுமே பேச வேண்டியவை இலட்சம் கோடிபேர் முன்னால் பேசப்படுவதுமாய்.. எப்படி இவர்களால் முடிகிறது.. இன்றைய உணர்ச்சி வேகத்தில்பேசி விட்டு நாளைய நிலை குறித்து சிந்திப்பதே இல்லையா..:mad:

தமிழ் வின்னில் தமிழ் சமுகம் எங்கே செல்கிறது எனும் தலைப்பில் ஒரு காடசி செய்தியாய் வந்ததால் பார்க்க ஆரம்பித்து சில பழைய, புதிய சம்பவங்களை தொடர்ந்து பார்த்தேன். பின்னர் எனக்கும் பிடிக்காமல் போனதால் பார்ப்பதே இல்லை.
 
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி நம்பும்படியாக இல்லை. சித்தரிக்கப்பட்டவை என்றே எண்ணுகிறேன்.
 
நம்பும்படியாக இல்லைதான். ஆனாலும் பொழுது போகின்றதே...!!!
 
இவையெல்லாம் நம் சமூகத்தில் நடக்கவில்லை என்று நினைத்தால் நாம்தாம் அறியாமையிருளில் சிக்கியிருப்பவர்கள் ஆகிறோம்

ஒருத்தனுக்கு ஒருத்தி, தமிழகத்தின் முன்னால் முதல்வரே அதனை பின் பற்றவில்லை, கௌரவ கொலைகள், சொத்துக்காக சணடை, துரோகம், முறையற்ற காமம் எல்லாம் நம் சமூகத்தில் விரவிதான் கிடக்கிறது, அதற்குமேல் முட்டையின் லேசான ஓட்டை போல நாகரீகம், கலாச்சாரம் என்பன போலியாய் சூழ்ந்திருக்கின்றன
 
ஆதன், நீங்கள் கூறியிருப்பவையுடன் இன்னும் என்னவெல்லமோ நடக்கின்றது. உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் இங்கு "ZEE" தமிழ் தொலைக்காட்ச்சியின் நிகழ்ச்சியைத்தான் நம்பும்படியாக இல்லை என்றேன்.
 
சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி நம்பும்படியாக இல்லை. சித்தரிக்கப்பட்டவை என்றே எண்ணுகிறேன்.

நண்பரே நான் மேலே குறிப்பிட்ட தகப்பன் தன்மீது தவறாக நடக்க முயற்சிக்கின்றான்
என்று மகள் குற்றம் சுமத்திய நிகழ்வில் தன் தகப்பன் மூன்று பேரை கொன்றதாக கூறியபோது
அவர்களுடைய வீட்டை பொலிசார் தோண்டியபோது மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபடிக்கப்பட்டதை
வேறு ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நிகழ்வில் நடப்பவை உண்மையானால் நம் சமுதாயத்தை எண்ணி
கண்ணீர் விடுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்
.
 
இதில் ஆதங்கப்பட என்ன இருக்கிறது என்று வியக்கிறேன்.

கற்கால மனிதனின் செயல்பாடுகள் நமது மரபணுவில் மறைந்து கிடப்பன தானே..? அவை வெளிப்படுவதில் என்ன வியப்பிருக்கிறது..?

1. காதலனைக் கொன்று ஃப்ரிட்ஜில் வைத்து சமைத்துத் தின்ற கதை நாம் பார்த்ததுண்டே..

2. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாய் இருந்த குழந்தையைக் கொன்ற தாயை நாம் கண்டதுண்டே..

3. பெற்ற மகளை விபச்சாரத்திற்கு தூண்டும் தாயை நாம் சந்தித்ததுண்டே..

4.பெற்ற மகனைத் தன் காம இச்சைக்கு பயன்படுத்திய தாய்களை நாம் அவ்வப்போது பார்த்ததுண்டே..

5. தன் மகளையே வருடக்கணக்கில் கற்பழித்த தந்தையைக் கேட்டதுண்டே..

6. கணவன் இருக்கையில் பிறனையும் மனைவி இருக்கையில் பிறத்தியையும் மோகித்த கதைகள் சர்வ சாதாரணமாய் கேள்விப்பட்டதுண்டே..

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.

நாம் பண்பாடு என்னும் மேல்பூச்சினால் நமது கற்காலச் சிந்தையை அடக்கிவைத்தாலும் அடங்க மறுக்கும் காமம் எவ்வகையிலாவது எங்காவது வெளிப்பட்டேதான் தீரும். இவற்றைத் தவிர்க்கவோ அடியோடு ஒழிக்கவோ இயலாது.

இயல்பினை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு எதனையும் செரிக்கும் தன்மையைப் பெற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது..?
 
சொல்வதெல்லாம் உண்மை என்றாலும் சொல்லாமல் இருப்பது உத்தமம் ....

ஒரு வரியில் ஓராயிரம் உண்மைகள். வாழ்த்துக்கள் நாஞ்சில். விஜய்.
உண்மை என்றும் பேசபடுவதில்லை, உணரபடுவது உயிராக வாழ்வது.
 
ஆதன் சொன்னதுதான்.. ஒப்பனை செய்யத் தேவை இல்லை.. இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.. ஆனால் இந்த "உண்மை"கள் உலகுக்குத் தெரிவதால் ஏதேனும் நன்மை உண்டா?
 
ஆதன் சொன்னதுதான்.. ஒப்பனை செய்யத் தேவை இல்லை.. இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.. ஆனால் இந்த "உண்மை"கள் உலகுக்குத் தெரிவதால் ஏதேனும் நன்மை உண்டா?

ஒருவருக்கும் தெரியாமல் இருப்பதால் அந்த தைரியத்தில் இன்னமும்
தவறு செய்கின்றார்கள். தொடர்ந்து தவறுகளை செய்பவர்களை வெளிக் கொண்டு வருவதால்
பலர் தப்பித்துக் கொள்ளவும் முடியுமல்லவா?அவமானத்துக்கு அஞ்சி மெளனமாக
இருந்துவிடுவதால் தப்பு செய்பவர்கள் அதை தங்கள் பலமாக நினைத்துக்கொண்டு
தங்கள் செயற்பாட்டை தைரியமாக செய்வார்கள். என்பது எனது கருத்து அமரன் சார்
 
சமுதாய தவறுகள் வெளிச்சத்துக்கு வரவேண்டும், அப்போதுதான் இவைகள் குறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஒருவன் தவற்றிலிர்ந்து மற்றவன் திருந்தி வாழ வாய்ப்புக்கள் அதிகமே.
எனவே வியாசனின் கருத்துக்கள் ஏற்க்கதக்கவை.
 
ஒரு வரியில் ஓராயிரம் உண்மைகள். வாழ்த்துக்கள் நாஞ்சில். விஜய்.
உண்மை என்றும் பேசபடுவதில்லை, உணரபடுவது உயிராக வாழ்வது.

என்ன தோழர் எனது பெயரை விஜய் என மாற்றி விட்டீர் ..அமரன் கூறுவது போல் இதனால் எந்த ஒரு மாற்றமும் நிகழ போவதில்லை அந்தந்த தொலைகாட்சிகளின் வருமானம் மட்டுமே கூடும் ...இதற்கு பதில் தமிழ் மன்றம் வந்து பதிவேனும் போடலாம் ...
 
சொல்வதெல்லாம் உண்மை கிட்ட தட்ட சின்ன திரை சீரியல்களை போல தான் ! .. கிட்ட தட்ட எல்லா எபிசோடிலும் கள்ள உறவுகள்! அதற்கு ஒரு பஞ்சாயத்து ..

இப்படியும் நடக்குமா என நினைக்க தோன்றினாலும் எப்படி தான் துணிந்து கேமிரா முன் பேசுகிறார்களோ என்று தெரியவில்லை
 
கதாநாயகர்களே வெற்றி பெற்றால் அது பெரிய திரை. வில்லிகளே வெற்றி பெற்றால் அது சின்னத் திரை.
சீனியர்
 
Back
Top