hypergraph
New member
மூன்று வாரத் தொடர்
வாரம் மூன்று / நிறைவுப் பகுதி
______________________________________________________________________________
முன்கதை: பனிவயல் கிராமத்தில்... சிறிய ரயில் நிலையத்திற்கு வந்த பாபுவும்
ஜோவும்... குண்டு வைத்து அந்த இடத்தைத் தகர்க்க முடிவு எடுக்கிறார்கள்.

பையிலேயே போட்டுக்கொண்டான். ஜோ வெளிச்சத்தைக் காட்ட… பாபு பரபரவென செயல்பட்டான்.
நான்கு இடங்களில் வைத்துவிட்டு...
“இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கிறாப்பல செட் பண்ணிட்டேன். மிஸ்டு கால் குடுத்துடு.”
தட்டினான் ஜோ. இரண்டு ரிங் போனதும் இணைப்பைத் துண்டித்தான்.
திறந்து ஏறிக்கொண்டனர்.
எப்படியும் மத்தியானத்துக்குள்ள அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் எக்கச்சக்க வோல்டேஜ்ல ஷாக்
அடிச்சிருக்கும்.”
செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர் பாபுவும் ஜோவும் டிரைவரும். திரையில்... ஒரு
தகர்க்கப்பட்ட கட்டிடமும் சில போலீஸ்காரர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் காட்சிகளாய்
வந்து போக… செய்தி வாசிப்பவரின் கணீர்க் குரல் பின்னணியில் ஒலித்தது.
ஒரு ரயில்வே ஸ்டேஷன் செட் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. ஒரு வாட்ச்மேனும் இரண்டு செட்
ஊழியர்களும் காயமடைந்தனர். நள்ளிரவில் இது நடந்திருக்கக்கூடும் என்றும், இது போல சக்திவாய்ந்த
குண்டுகள் தீவிரவாத இயக்கங்கள்தான் கைவசம் வைத்திருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
எனினும்... எதற்காக ஒரு சினிமா செட்டுக்கு குண்டு வைக்கப்பட்டது என்பது புதிராக உள்ளது என்று...”
வாரம் மூன்று / நிறைவுப் பகுதி
குண்டு ஒண்ணு வெச்சிருக்கோம்
ஆர். தர்மராஜன்
முன்கதை: பனிவயல் கிராமத்தில்... சிறிய ரயில் நிலையத்திற்கு வந்த பாபுவும்
ஜோவும்... குண்டு வைத்து அந்த இடத்தைத் தகர்க்க முடிவு எடுக்கிறார்கள்.
______________________________________________________________________________
“ரெடி,” கிசுகிசுத்தான் ஜோ.
பாபு தன் பையிலிருந்து ஒரு பார்சலை எடுத்தான். அதன் மேலிருந்த துணியைப் பிரித்தெடுத்துப்
பையிலேயே போட்டுக்கொண்டான். ஜோ வெளிச்சத்தைக் காட்ட… பாபு பரபரவென செயல்பட்டான்.
முக்கால் மணி நேரத்தில்... சிறிய ஷூ பெட்டி சைஸில் நான்கு டைம் பாம்கள் தயாராயின. அவற்றை
நான்கு இடங்களில் வைத்துவிட்டு...
“ஓவர்,” என்றான் பாபு, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையை புறங்கைகளால் துடைத்துக்கொண்டே.
“இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கிறாப்பல செட் பண்ணிட்டேன். மிஸ்டு கால் குடுத்துடு.”
பைகளை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தனர். பத்தடி சென்றதும் தன செல்லை எடுத்து பட்டன்களைத்
தட்டினான் ஜோ. இரண்டு ரிங் போனதும் இணைப்பைத் துண்டித்தான்.
“வேகமா நட, ஜோ.”
ஓடாத குறையாய் நடந்து மெயின் ரோட்டை அடைந்தனர். சில நிமிடங்களில் ஜீப் வந்தது. பின் கதவைத்
திறந்து ஏறிக்கொண்டனர்.
திரும்பிப் பார்த்தான் டிரைவர். “எனனாச்சு?”
ஜோவும் பாபுவும் தங்கள் வலது கட்டை விரல்களை நிமிர்த்தி ‘தம்ஸ் அப்’ சைகை காட்டினர்.
“ஸ்பாட் எது?”
“பனிவயல் ரயில்வே ஸ்டேஷன்,” என்றான் பாபு.
“குட்,” என்றான் டிரைவர், ஜீப்பைக் கிளப்பிக்கொண்டே. “ரிசல்ட் காலைலயே நியூஸ்ல வந்தாலும் வரலாம்.
எப்படியும் மத்தியானத்துக்குள்ள அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் எக்கச்சக்க வோல்டேஜ்ல ஷாக்
அடிச்சிருக்கும்.”
ஜீப் வேகம் பிடித்தது.
காலை ஏழு மணி… வேறொரு ஊரில்... ஒரு ஒதுக்குப்புறமான வீட்டில்... மேக்னம் டி.வி. சானலில்
செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர் பாபுவும் ஜோவும் டிரைவரும். திரையில்... ஒரு
தகர்க்கப்பட்ட கட்டிடமும் சில போலீஸ்காரர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் காட்சிகளாய்
வந்து போக… செய்தி வாசிப்பவரின் கணீர்க் குரல் பின்னணியில் ஒலித்தது.
“ராயக்குடிக்கு அருகில் உள்ள பனிவயல் என்கிற கிராமத்தில் சினிமா படப்பிடிப்புக்காகப் போடப்பட்ட

(முற்றும்)