neechalkaran
New member
ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களைக் கொண்டு நகர்த்தி விளையாடப்படுகிறது. சிறுவயதில் திண்ணையைப் பிடித்து நடைபழகும் போதே திண்ணையில் ஆடுபுலி ஆட்டங்களைப் பார்த்திருப்போம். திண்ணைகளெல்லாம் விற்றுத் தின்றுவிட்டப் பிறகு அப்பார்ட்மெண்டில் அஞ்சாவது மடியில் திண்ணை அளவுள்ள வீடுகளில் குடிபுகுந்துவிட்டோம். அங்கும் ஆடு புலி ஆட்டத்தை ஆட இணையத்தில் ஆடு புலியாட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி[Application] இதோ,
ஆடு புலி ஆட்டம் -முகவரி
இச்செயலி தமிழக ஆடுபுலி வடிவத்தில் 15 ஆடுகளும் முன்று புலிகளும் கொண்டுள்ளது. இச்செயலியில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடலாம் அல்லது கணினியுடன் ஆடுபுலி விளையாடலாம். ஆடு/புலியை காய்களை சொடிக்கி, கட்டங்களின் [intersection]சந்தியைச் சொடுக்கி காய்களை நகர்த்த வேண்டும். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். ஆடு புலி ஆட்டத்திற்கு நீங்கள் புதுசு என்றால் அதன் விதிமுறைகளைப் படித்துக் கொள்ளவும்.