எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்....

Hega

New member
ஐரோப்பிய தமிழ் தொலைககாட்சியில் வெளியிட எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்....


ஈவண்ட்ஸ் manegment க்குரிய விளம்பரம்.

கேட்டரிக்ங் பார்ட்டி சேவிஸ், டெக்கரேசன், கேக் அலங்காரம் விழாவுக்கான முழு ஒழுங்குகளும் அமைத்து கொடுக்க படும்.



எப்படி
எங்கே
யார்முலம்
செலவாகும் தொகை

போன்ற விபரம் தெரிந்தவர்கள், அல்லது அது சம்பந்தமான துறையிலிருப்பவர்கள் உதவி வேண்டும்.
 
இங்கு (அவுஸ்திரேலியாவில்) நகைக்கடைகள் உணவு சாலைகள் போன்றவற்றின் விளம்பரங்கள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. (மலிவு என்பதால்)

ஆதவாவிடம் கேட்டுப்பாருங்கள்.
 
நன்றிகள் அன்பு ரசிகன் சார்.

இந்தியாவிலிருந்து தான் இங்கே இருப்பவர்களும் விளம்பரம் தயாரித்து எடுக்கிறார்கள். ஆனால் அதை எங்கே எப்படி என ஓரளவு இத்துறையில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை கிட்டினால் மேற்கொண்டு செயல்பட உதவியாக இருக்கும்.

மாடல்கள் இல்லாமல் கடந்த காலங்களில் நாங்கள் செய்து முடித்தவைகளையே காட்சிகளாக கொண்டு பின்னனி குரல்களோடு செய்யலாமா .. அல்லது மாடல்கள் கட்டாயம் வேண்டுமா ... அதற்கு ரெம்ப செலவாகுமா என்பது குறித்த ஆலோசனைகளும்தேவை..


இயன்றவர்கள், தெரிந்தவர்கள் இங்கே தமது கருத்தினை பகிர்ந்தால் மகிழ்ச்சியே..
 
நிகழ்வு ஒழுங்கமைப்புத் துறையில் உள்ளீர்கள். கிரியேட்டிவிட்டி நிச்சயம் உங்களுக்கு இருக்கும். படப்பிடிப்பாளர்களின் பழக்கமும், ஒப்பனைக் கலைஞர்களின் தொடர்பும், தொழில்நுட்பவியலாளர் பழக்கமும் இருக்கும். இதை வைச்சு நீங்களே தயாரிக்கலாம். குறைந்த செலவில்.. இலவசமாகக் கூட..

இல்லையேல், தொலைக்காட்சியிடம் பொறுப்பை விட்டாலும் செய்து தருவார்கள். உங்களிடமுள்ள வீடியோவைக் கொடுத்தும் செய்யலாம்..
 
தொலைகாட்சியில் விளம்பரம் கொடுக்கும்படி எனக்குள் எந்த ஐடியாவும் முன்னர் இல்லை. அதனால் அதுகுறித்து பெரிதான விபரம் தெளிவுகள் என்னிடம் இருக்கவில்லை. பல வாடிக்கையாளர்களின் வேண்டுதலின் பேரில் தான் இந்த ஐடியாவே தோன்றியது. திக்கு தெரியாத காட்டில் கண்ணை கட்டி விட்டால் போல் இருந்தது. யார் யாரிடம் எப்படி என்னன்னு விசாரித்து அறியவே இங்கே பதிவிட்டேன்.


ஆலோசனைகள் நல்கிய அன்புரசிகன் சார், அமரன் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்
 
Last edited:
Back
Top