ஈழ பிரச்சனைக்காக யார் எது செய்தாலும், குறுக்கு சால் ஓட்டி, அதை எப்படியாவது மழுங்கடிப்பதே வைகோவின் செயல்பாடாய் இருந்துவந்துள்ளது...வெளியிலே ஏதோ தீவிர ஈழ, புலிகள் ஆதரவு போல பேசினாலும், வேடமிட்டாலும், அவரின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையாக தான் இருந்துவந்துள்ளது..
முள்ளிவாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது, அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் பல பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளியானது. ஆனால், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர், அவர்களின் இறப்பினை உறுதிப்படுத்தாமல், பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இன்றும் பிராபகரன் உயிருடன் உள்ளார், நான்காம் ஈழ போரை துவக்குவார் என்று சொல்வது, தங்களின் ஈழ வியாபாரம் பாதிப்படையகூடாது என்பதற்கு தானே...இவர்கள் இப்படி பேசியது, பேசிவருவது, நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் செய்து விட்டது..
இவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது எல்லாம் கட்டுக்கதையா? இறுதிகட்ட ஈழ போரின் போது, புலி தலைமைக்கு, இந்திய நிலவரம் குறித்து தவறான தகவல்கள் கொடுத்து, கடைசிநேரம் வரை பொய்யான நம்பிக்கைகளை அளித்து அவர்களை கழுத்தறுத்தவர் வைகோ..
இந்த சம்பவங்கள் நடந்த அன்றே உண்மையை விளக்கி பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கும், ஆனால் மொன்னையாக, தெளிவில்லாமல் பேசி, பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்றும் நடக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, அங்கு உண்மையில் நடந்தவைகளை மறைத்து, அந்த படுகொலைகளின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்....