ravikrishnan
New member
![530919_10150661960753450_656813449_9474580_1459586647_n.jpg](http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s320x320/530919_10150661960753450_656813449_9474580_1459586647_n.jpg)
தமிழகத்தின் பரிதாப நிலையை பற்றிய ஒரு சிறு கண்ணோட்டம்...
1. குவார்ட்டர் கட்டிங், சைட் டிஷ் போன்ற அதிமுக்கியமான தலைப்புகளில் சினிமா படங்கள் தயாரிக்கப்படுவது இங்கே தான்.
2. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.
3. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியை விட்டு மீளமுடியாத அளவுக்கு போதைக்கு அடிமையானவர்கள்...
4. தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.
5. மிக அதிகமான சாலை விபத்துக்களை கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்தையே சேரும். ஒராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்கு குடித்து விட்டு வாகனத்தை ஓட்டுவதே முதன்மைக் காரணம்.
6. மதுபான விற்பனையால், ஆண்டு தோறும் தமிழக அரசுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழக அரசின் மொத்த வருவாயில், கிட்டதட்ட 30 சதவீத அளவுக்கு சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலை.
7. கிராமப் புறங்களில் உள்ளவர்கள் தங்கள் வருமானத்தில் 24 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 32 சதவீதத்தையும் மதுபானத்துக்காக செலவிடுகிறார்கள்.
8. இந்தியாவின் விவாகரத்து பட்டியலில் தமிழ் நாடு முதல் இடம்.
பால் விலை உயர்வு, பேரூந்து கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு....வேலையில்லா திண்டாட்டம்... தினம் தினம் கொலை, கொள்ளை, வழிப்பறி.... எங்கும் பார பட்சமின்றி லஞ்சம், ஊழல்... இவை அனைத்தையும் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து பார்க்கும் போது.... நமது எதிர்காலத்தையும், நமது எதிர்கால சமூகத்தை நினைத்து சற்றே அச்சம் ஏற்படுகிறது.
தமிழக மக்கள் அனைவரையும் ஓட்டாண்டியாக்கும் முயற்சியில் ஒருபுறம் அரசுக்கு நல்ல வெற்றி கிடைத்து வருகிறது...!!!
மறுபுறம் குடிமக்களை குடிகாரர்களாக மாற்றும் முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவருகிறது...!!!
சிறுவர்கள் வாங்கிச்செல்லும் அளவுக்கு மது விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது தமிழக அரசு...!!!
அன்பர்களின் கருத்துகளை அறிய ஆவல்,