சச்சின் நூறு அடித்தால் இந்தியா தோற்குமா?

ஆதவா

New member
கிட்டத்தட்ட பழமொழியாகவே ஆகிவிட்ட இந்த சொற்றொடர் மீண்டும் மீண்டும் இந்தியா தோற்பதால் உருவாகிவருகிறது. இந்திய அணி அப்படியொன்றும் அசாதாரண அணி அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும், சச்சின் ட்ராவிட் கங்குலி போன்ற ஜாம்பவன்களால் அது கபில்தேவ் காலத்திய அணியிலிருந்து உருமாறி இன்றைய அதிரடி நிலைக்கு வந்து நிற்கிறது. இந்திய அணியின் மாபெரும் உருவாக்கத்தில் சச்சினது பங்கு நிச்சயம் பெருமளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை, யாராலும் எட்டமுடியாத சாதனை எனும் அளவுக்கு படைக்காவிட்டாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதன்முதலான சாதனைகள் பெரும்பாலானவைகளை இவர் செய்திருக்கிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பெரும்பாலும் தனிநபர் சாதனைகளாக அமைந்துவிடுகிறது. ஒரு தனிநபர் சாதனை புரிய ஏராளமான இடங்களை கிரிக்கெட் விட்டுத்தருகிறது. மொத்த அணிக்கான சாதனை என்று பார்க்கும்பொழுது தனிநபர் சாதனைகளே அதிகம் கிடைக்கிறது. இதில் சச்சின் மட்டும் ஒரு சாதனை வீரனாக, சுயநலத்தின் பால் பார்க்க்கப்படுவது பார்வையின் பட்டும்படாத மேலோட்டத்தையே காண்பிக்கிறது.

ஒரு இளம் வீரனாகக் களமிறங்கி வக்கார் யூனிஸிடம் அடிவாங்கி, இரத்தம் சொட்டச் சொட்ட அணிக்காக ஆடியவர் சச்சின் என்பதை நம்மில் பலர் மறந்தே விடுகிறார்கள். ஒரு அணிக்கான அர்பணிப்பு உள்ளவனாக இருப்பவனை நாம் வீரன் என்கிறோம். சச்சினிடம் மட்டுமல்ல, எல்லா வீரர்களிடமும் அதையே நாம் எதிர்பார்க்கிறோம். சொந்த சாதனைக்காக அணியை கைவிட்டவன் எனும் பெயர் சச்சினுக்கு எப்படி ஏற்பட்டது என்பதே தெரியவில்லை. ஒரு அணியின் வெற்றியும் தோல்வியும் எல்லா வீரர்களையே சார்ந்திருக்க, ஒருவரை மட்டும் குறைசொல்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாமனைவருமே புரிந்து கொள்ளவேண்டும். சச்சின் ரன்னே அடிக்காத ஒரு இன்னிங்க்ஸில் அல்லது முக்கியமான போட்டிகளின் போது அடிக்காமல் போனால் “சச்சினால்தான் இந்தியா தோற்றது” எனும் வாதத்தை ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்ளமுடியும், ஏனெனில் சச்சின் மீதான எதிர்பார்ப்பு அத்தகையது. ஆனால் நூறு ரன்கள் அடித்தால் இந்தியா தோற்றுவிடும் எனும் மூடநம்பிக்கையை இந்தியர்களிடம் மட்டும்தான் காணமுடியும். தோற்ற போட்டிகளில் சச்சினது பங்களிப்பு என்பதைவிட மற்ற 10 பேரது பங்களிப்பு எப்படிப்பட்டது என்று ஆராயாமல் விடுவது தவறானதாகத் தெரியவில்லை இல்லையா? உதாரணத்திற்கு நேற்றைய பங்களாதேசுக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொண்டால், என்னிடம் சச்சின் குறித்த மூன்று சந்தேக/சர்ச்சைகள் எழுப்பப்பட்டன,

1. சதத்திற்காக ஆடியதால் ஸ்கோரிங் ரேட் குறைந்து போய்விட்டது, அதனால் இந்தியா அதிகம் ஸ்கோர் செய்ய இயலவில்லை
2. பங்களாதேஷ் எல்லாம் ஒரு அணியே அல்ல, அதற்கு எதிராக ஒரு சாதனை சதம் அடித்தது நன்றாக இல்லை,
3. வழக்கம் போல சச்சின் சதமடித்து இந்தியா தோற்றுவிட்டது!

ஒரு மேலோட்டமான பார்வையில் இவை உண்மையாகவே தெரிகிறது. ஆனால் இது “நிஜமாகவே” (!) உண்மைகளா?

1. நேற்றைய போட்டியில் இறுதி நேர அழுத்தத்தின் காரணமாக ரைனா, தோனி தவிர வேறு யாரும் அடித்து ஆடவில்லை, குறிப்பாக கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 80.48, குறைந்த ரன்களே அடித்திருந்தாலும் காம்பிரும் பாலைத் தின்றிருந்தார். இந்த சூழ்நிலையில் சச்சினின் ஸ்டாண்டிங்கில் பந்துகள் வீணாகப்போவது “சுயநலம்” காரணமல்ல, தவிர பந்து மெதுவாக வந்ததை சச்சின் குறிப்பிடுகிறார். அடுத்த இன்னிங்க்ஸ் ஆடிய பங்களாதேஷின் தமிம் இக்பால், ஜஹருல் இஸ்லாம் ஆகியோரும் மெல்லவே ஆடினார்கள்,

2. பங்களாதேஷ் எனும் சிறூ அணிக்கெதிராக அடிக்கும் முதல் ஒருநாள் சதம் அது என்பதை அறியாமல் பேசுவது வீண். தவிர பங்களாதேஷ் ஒரு நல்ல எழுச்சி நிலை கண்டுள்ளது. அவர்களது அணியின் சகிப் அல் ஹசன், மொர்டாசா, தமிம் போன்ற தரம் வாய்ந்த வீரர்கள் வந்துவிட்டார்கள், ஒருகாலத்தில் இலங்கையும், அதற்கு முன்பு இந்தியாவுமே ஒரு “சப்ப” அணி தான் என்பதை மறந்துவிடக்கூடாது. தவிர டெண்டுல்கர் சுமாரான அணியிடம் அதிக ரன் அடித்தவர் கிடையாது, அவரது சதங்களும் ரன்களூம் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கெதிரானது என்பதை மறந்துவிடவேண்டாம். என்னதான் பங்களாதேஷ் வலிமை குன்றிய அணி என்றாலும் அவர்களும் வலிமை வாய்ந்த அணியினரை தோற்கடித்துள்ளனர் என்பதை மறக்கவேண்டாம். 2007 உலகக் கோப்பையில் பங்களாதேஷ் என்ன செய்தது என்பது ஞாபகம் இருக்கிறதா இல்லையா?

3. ஒரு அணியின் தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணமாக ஆகமாட்டார். இதை ஏன் இந்த கோணத்தில் பார்க்கக் கூடாது... இந்தியாவின் ஸ்கோரில் சச்சின் பங்களிப்பை எடுத்துவிட்ட்டிருந்தால் வெறும் 175 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கும், அதுவும் வலிமை குன்றிய ஒரு அணிக்கு எதிராக... ஒரு கெளரவமான ஸ்கோரில்தானே தோற்றிருக்கிறோம்.. தவிர இன்னொன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா எப்பொழுதுமே வலிமை வாய்ந்த அணீ அல்ல. வலிமை வாய்ந்த வீரர்கள் இருப்பினும் அது ஒரு சுமாருக்கும் மேலான அணிதான்!

சச்சினது காலம் ஒருநாள் போட்டிகள் துவங்கி எழுச்சி பெற்ற காலம், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவே அவரது முதல் ஐந்து வருடங்கள் கழிந்தன. இன்றும் அவரை ஒரு நல்ல டெஸ்ட் வீரராகப் பார்க்க முடிகிறது. சமகாலத்தில் காலிஸும் சச்சினும் டெஸ்டை அடுத்த கட்ட அல்லது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றார்கள். (ட்ராவிட்டும் தான்...) காலத்திற்கு ஏற்ப சச்சின் ஒருநாள் வீரராகவும், ட்வெண்டி 20 வீரராகவும் கூட தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். இல்லையா?

நேற்றைய பேட்டியின் போது தான் எந்தவித மனநெருக்கடிக்கு உள்ளானேன் என்பதை சுட்டிக் காட்டுகிறார். ஒரு வீரருக்கு மனநெருக்கடி என்பது சகஜமானதுதான். முதன்முறையாக ஒரு விருது விழாவில் உங்களுக்காக வழங்கப்படும் விருதிற்கு நீங்கள் மனநெருக்கடிக்கு உள்ளாவீர்களா மாட்டீர்களா என்பதை உங்களிடமே கேட்டறிந்து கொள்ளலாமே? சரி, நாட்டுக்காக ஆடுபவனுக்கு அணியின் நலந்தான் முக்கியம், சாதனையை மையப்படுத்திய மன அழுத்தம் கூடாது என்று அறிவுருத்துவதாக இருந்தால் ’நாட்டுக்காக’, ’அணிக்காக,’ என்று பாராமல் கோடிகள் புழங்கும் வியாபார ஆட்டமான ஐபிஎல்லை நாம் பார்க்கவே கூடாது... கிரிக்கெட் இன்று வியாபாரம் ஆகி பணம் கொழிக்கும் விருட்சமாக மாறிவிட்டது. இதில் நாட்டுணர்வு என்பது எங்கோ ஓரிரு இடங்களில் மிச்சமிருக்கும் வீரர்களிடம் இருப்பதையும் நாம் கொச்சைப் படுத்தி வருகிறோம்.

99 சதங்களைப் பேசாதவர்கள், நூறாவது சதம் குறித்து பேச அருகதையற்றவர்களாகிறோம். அதனைத்தான் சச்சின் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்... விஜய் மல்லய்யாவின் வியாபார விளம்பரங்களில் நடிக்க மறுத்தவரான சச்சின் விளையாட்டுத் துறையில் மிகப்பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்திருந்தாலும் அவர் அடிப்படையில் ஒரு வீரர்.. நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!

வாழ்த்துக்கள் சச்சின்!
 
சச்சினின் மூச்சு கிரிக்கெட்தான், கிரிக்கெட் தவிற அவர் எதையையும் நினைத்துப் பார்ப்பது இல்லை. பணம்கூட அவர் மூலம் லாபம் ஈட்ட நினைக்கும் வியாபாரிகள் அவருக்குக் கொடுத்தது. அவர் கிரிக்கெட் மட்டுமே யோசிப்பதால்தான் அவரால் இத்தனை ஆண்டுகள் நினைத்து நிற்க முடிந்தது.

எனக்குத் தெரிந்தவரை இதுவரை சச்சின் மாதிரி கிரிக்கெட்டில் இவ்வளவு ஈடுபாடு உள்ளவர் பிறக்கவில்லை அதுபோல் இனிமேலும் யாரும் பிறக்கப்போவதும் இல்லை.

சச்சின் ஒரு சாகச மனிதர். அவர் இந்தியாவில் பிறந்தது இந்தியாவின் அதிர்ஷ்டம்.
 
நாட்டுக்காக ஆடும் இன்றைய ஒரே வீரர்!!

வாழ்த்துக்கள் சச்சின்!

இதை மட்டும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கவாஸ்கர், வெங்சர்க்கார் வரிசையில் இப்போது சச்சின். தனக்காக மட்டுமே விளையாடும் சுயநல வீரர்கள்.
 
இதை மட்டும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கவாஸ்கர், வெங்சர்க்கார் வரிசையில் இப்போது சச்சின். தனக்காக மட்டுமே விளையாடும் சுயநல வீரர்கள்.

ஒரே வீரர் என்று எழுதும் போது சற்று உறுத்தலாகத்தான் இருந்தது. ஏன், வேறு யாருமே இல்லையா என்று கூட எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். ட்ராவிட் கூட நல்ல வீரர்தான்... இதைவிட்டுவிடலாம்.

ஆனால் “சுயநல வீரர்கள்” என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? அதற்கான காரணங்கள், கூறுகள் ஏதாவது கூறுங்கள்....
உங்கள் பார்வையில் வேறு யார் யார் தான் நாட்டுக்காக ஆடுகிறார்கள்?
 
நேற்றய போட்டியில் இந்தியா வென்றிருந்தால் சொத்தை அணியுடன் தான் நூறு அடித்தார் என்ற இன்னொருவகையான சாட்டும் வந்திருக்கும்.
 
நேற்றைய சச்சினின் நூறாவது சதத்தின் மகிழ்ச்சியில் மன்றம் வந்தால், இந்திய அணி தோல்வி அடைந்தமையை இட்டு நண்பர்களின் பதிவுகள் கொஞ்சம் மனதை நெருடத்தான் செய்தன.....

என் மனதிலும் பல எண்ணங்கள், எல்லாவற்றும் ஒன்று திரட்டியதாக உங்கள் பதிவு, மிக்க நன்றி ஆதவா..!! :)

இந்திய அணி வெற்றி பெறுகையில் கொண்டாடுவதும், மாறாக தோல்வியடைகையில் சூதாட்டமாக இருக்குமோ, அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாகவோ இருக்குமோ என நினைப்பது எதிரணி வீரர்களின் வெற்றியினைக் கொச்சைப் படுத்துவதாகவே எனக்குப் படுகிறது....!! :traurig001:

நேற்றைய போட்டியில் சச்சின் பந்துகள் மட்டைக்கு வராமலிருந்தன என கூறியிருந்தார், அத்துடன் பங்களாதேஸ் அணி நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டியதையும் கவனிக்க வேண்டும். அவர்களில் கூட முஷிபுர் ரகுமானும் சகிப் அல் ஹசன் மட்டுமே 100க்கு மேலான ஸ்டைக் ரேட்டில் விளையாடியிருந்தனர், அதவாது பங்களாதேஸ் அணிக்காக 5வதாகவும் 6வதாகவும் துடுப்பெடுத்தாடியவர்கள். ஆக மைதானமும், நாணயச் சுழற்சியும் கூட வெற்றியில் பங்கு வகிக்கின்றதென்பது மறுப்பதற்கில்லை.

சச்சினுக்கு பின் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டுகள் கையிலிருந்தும், வேகமாக ஓட்டங்களைக் குவிக்கத் தவறியிருந்தனர், ரெய்னாவையும் கடைசி ஓவரில் தோனியையும் தவிர இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடத் தவறியிருந்தனர்...

முக்கியமாக ரோஹித், ஜடேஜா.....!!

ஜடேஜா தடுமாறிக்கொண்டிருக்கையில், அவருக்குப் பதில் யூசப் பதானை விளையாட வைத்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்குள் எழுந்து கொண்டிருந்தது.

சச்சின் சதமடித்த போட்டிகளில் இந்தியா வெற்றி வாய்ப்பு எத்தனை சதவீதமென நம் மன்றத்தில் ஏற்கனவே புள்ளி விபரங்களுடன் ஆராய்ந்த பின்னர், மீளவும் அது போன்ற கருத்துக்கள் வருவது வேதனை தான்....!!

நான் கூட முன்னர் சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்கும் எனத்தான் கூறியிருக்கின்றேன், அதற்கு முக்கிய காரணம் எனக்கு ராகுல் ராவிட்டை நிரம்ப பிடித்திருந்தமைதான் - அவருக்கு போட்டியாக இவர் இருக்கிறாரே என்ற எண்ணத்தால் வந்த தவறான கோபம் அது. :D :D அது கூட ஆதவனின் முன்னைய புள்ளி விபரத்திரியுடன் காணாமல் போய் விட்டது.
 
சச்சினுக்காக பரிதாபப்படத்தான் முடிகிறது. நீ ஒரு இந்தியனாக இருப்பதால்தான் உனக்கு இந்த அவலம். சச்சின் ஒரு அவுஸ்திரேலியனாகவோ அல்லது இங்கிலாந்து வீரராகவோ இருந்திருந்தால் இன்று உன் நிலை மிகவும் போற்றப்பட்டிருக்கும்.

இன்னொரு பிறவி இருந்தால் நீ சச்சினாகவே பிறந்துவிடு ஒரு வேண்டுகோள் அவுஸ்திரேலியனாக பிறந்துவிடு
 
சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்....படிக்கும்போதே எரிச்சலாய் இருக்கிறது...எப்பதான் நீங்க திருந்துவீங்க?

ஆதவா கேட்டதால் சொல்கிறேன்...நாட்டுக்காக விளையாடியவர்கள்...கபில்தேவ், ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத், அனில்கும்ளே....

கிரிக்கெட் மட்டுமே விளையாட்டா....இந்திய தேசிய விளையாட்டு ஹாக்கியைப் பற்றி யாருக்குமே கவலையில்லையா...பாஸ்கரன்....ஒலிம்பிக்ஸ் கோல்மெடல் வாங்கிவந்த அடுத்த நிமிடமே அணியிலிருந்து விலக்கப்பட்டார்....காரணம்...பணம் கொழிக்கும் கிரிக்கெட்டை....இந்த ஹாக்கி ஓவர்டேக் செய்துவிடுமோ என்ற பயம்....பணம் கொழிப்பவர்களின் கையில் தடுமாறும் இந்த கிரிக்கெட்....ஒரு விளையாட்டே அல்ல....வியாபாரம்.

ஹலோ வியாசரே....இதே சச்சின் அவுஸ்த்ரேலியராகப் பிறந்திருந்தால்...எப்போதோ அணியைவிட்டு அதிரடியாய் விலக்கப்பட்டிருப்பார் பாண்டிங்கைப் போல...இந்தியராய் பிறந்த புண்ணியத்துக்காகத்தான்...இப்போது இத்தனை ரசிகர்கள்....குருட்டுத்தனமாய்.....போங்க போய் வேற வேலையிருந்தாப் பாருங்க....
 
Last edited:
சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்....படிக்கும்போதே எரிச்சலாய் இருக்கிறது...எப்பதான் நீங்க திருந்துவீங்க?



ஹலோ வியாசரே....இதே சச்சின் அவுஸ்த்ரேலியராகப் பிறந்திருந்தால்...எப்போதோ அணியைவிட்டு அதிரடியாய் விலக்கப்பட்டிருப்பார் பாண்டிங்கைப் போல...இந்தியராய் பிறந்த புண்ணியத்துக்காகத்தான்...இப்போது இத்தனை ரசிகர்கள்....குருட்டுத்தனமாய்.....போங்க போய் வேற வேலையிருந்தாப் பாருங்க....
ஐயா சிவா.ஜி
குஷ்புவிற்கு கோவில் கட்டியதைவிட கடவுள் என்பது கேவலமில்லை. இந்த அளவு சாதனைகள் செய்யாத பான்டிங் இன்னமும் அணியிலிருப்பது உங்களுக்கு தெரியாது போலு
ம்
 

நான் கூட முன்னர் சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்கும் எனத்தான் கூறியிருக்கின்றேன், அதற்கு முக்கிய காரணம் எனக்கு ராகுல் ராவிட்டை நிரம்ப பிடித்திருந்தமைதான் - அவருக்கு போட்டியாக இவர் இருக்கிறாரே என்ற எண்ணத்தால் வந்த தவறான கோபம் அது. :D :D அது கூட ஆதவனின் முன்னைய புள்ளி விபரத்திரியுடன் காணாமல் போய் விட்டது.

இந்த மாதிரி உண்மையை ஒத்துக்கொள்ள வெகு சிலரால் மட்டுமே முடியும் ஓவியன். சச்சின் எப்படியாவாது இருந்துட்டுப் போகட்டும். ஆனால் அவர் கொரிக்கெட் விளையாட்டுச் சாதனையாளர். பாராட்டுவோம்.. போற்றுவோம்.. மதிப்போம்...
 
ஆங்கில மோகம், சினிமா மோகம், கிரிக்கெட் மோகம் இவற்றிலிருந்து விடுபட்டால்தான் தமிழகம் உருப்படும்.
 
அதுதான் ஏற்கெனவே ஒரு திரி போட்டு காரண காரியங்கள், புள்ளி விபரங்களுடன் விளக்கோ விளக்குண்ணு விளக்கியாச்சுல்ல. மறுபடி ஒரு திரி ஆரம்பிக்கவேண்டிய அவசியமென்ன வந்தது?

சச்சினின் சதமும் இந்தியாவும் - கற்பிதம்
http://tamilmantram.com/vb/showthread.php?t=26771

இதை அந்தத் திரியுடனே இணைத்துக் கொள்ளலாமே...?
 
நிஜமாவே மேட்ச் முழுக்க யாராவது பார்த்தீங்களா? எத்தனை ஃபுல்டாஸ்கள், இடுப்புக்கு மேல் வீசப்பட்டன யாராச்சும் எண்ணியிருக்கீங்களா?

10.1

Raina to Tamim Iqbal, 1 run, 84.6 kph, low full toss and he pushes it to long-on

38.1


Pathan to Shakib Al Hasan, 1 run, 130.6 kph, high full toss but Shakib was down the track, however it appeared over the waist, slashes it to third man

38.5


Pathan to Nasir Hossain, 1 run, 130.6 kph, charges down the track again and it's another high full toss, slices it square on the off side

40.4


Pathan to Shakib Al Hasan, FOUR, 132.2 kph, another high full toss but he was outside the crease, on waist height and he pulls wide of square leg and beats fine leg

46.6


Kumar to Nasir Hossain, 1 run, 128.6 kph, full toss and he swings at it and fortunately for the batsman it lands in front of long-on, that's his fifty as well

47.2


Pathan to Mushfiqur Rahim, 1 wide, 130.2 kph, Irfan misdirects the full toss wide outside the off stump, too wide for the batsman to chase that

47.3


Pathan to Mushfiqur Rahim, SIX, 127.5 kph, that's gone miles! Irfan comes round the wicket and bowls a friendly full toss and Mushfiqur moves across and clubs it high over deep midwicket

48.1


Kumar to Mushfiqur Rahim, (no ball) FOUR, 121.7 kph, it's a waist high no-ball! Mushfiqur was down the track and slices it over cover point, the din gets louder at Mirpur

48.4


Kumar to Mushfiqur Rahim, 1 run, 124.1 kph, full toss and he just about clears the circle, the ball drops short of long-on

49.1


Dinda to Mushfiqur Rahim, 1 run, 134.5 kph, full toss outside the off stump and it sped off the bat but Kohli swoops to to his left and stops it

இப்படி போட்டுக் கொடுத்த பவுலர்களைக் கண்டுக்காம தெண்டுல்கரை தப்பு சொல்றீங்களே ஞாயமா?

இந்த்ப் போட்டியில் தோற்க இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்களே காரணம்.
 
இந்த்ப் போட்டியில் தோற்க இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்களே காரணம்.
ஹாஹா!! தப்பு கண்டுபுடிச்சிட்டேன். வேகம்னா? :icon_b:
 
எல்லாம் சரி.. சச்சின் ஐம்பது அடித்தால் இந்தியா ஜெயிக்கும்னு அம்பது அடிச்சவுடனே ரிட்டயர்ஹர்ட் ஆக சொல்லிடலாம்.
 
தாமரை நொண்டிச்சாக்குகள்....நல்லாவே இருக்கு. சச்சின்...கடவுளல்ல.....இன்னைய மேட்சில் பாகிஸ்தானோடு எப்படி தினறினார்....விராட்கோஹ்லியே....பரவாயில்லை.....என்னத்த சீனியர்...அட போங்கப்பா...
 
ஐயா சிவா.ஜி
குஷ்புவிற்கு கோவில் கட்டியதைவிட கடவுள் என்பது கேவலமில்லை. இந்த அளவு சாதனைகள் செய்யாத பான்டிங் இன்னமும் அணியிலிருப்பது உங்களுக்கு தெரியாது போலு
ம்

குஷ்புக்கு கோவில் கட்டியதுகூட....எங்கள் நல்ல மனசுதான்....சரி விடுங்க...பலமுறை சொல்லி சலிச்சுப் போயிட்டேன். சச்சின் கடவுள்தான்...கோயில் கட்டுங்க....வந்து பிரசாதம் வாங்கிட்டுப் போறேன்......
 
தாமரை நொண்டிச்சாக்குகள்....நல்லாவே இருக்கு. சச்சின்...கடவுளல்ல.....இன்னைய மேட்சில் பாகிஸ்தானோடு எப்படி தினறினார்....விராட்கோஹ்லியே....பரவாயில்லை.....என்னத்த சீனியர்...அட போங்கப்பா...

விராட் கோலி நல்லா ஆடினா சச்சின் மோசம்கறது சரியான வாதமில்லையே.. நீங்க ரொம்ப நல்லவர் என்று சொன்னால், நான் கெட்டவன் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளல் சரியா?

நேற்று துடுப்பாடிய கம்பீரை விட சச்சின் நன்றாக ஆடினார். ரோஹித் சர்மாவை விட நன்றாக ஆடினார். தோனி-ரெய்னா இருவரும் சிறிது நேரமே ஆடியதால் ஒப்பிட இயலாது.

SR Tendulkar - 2nd innings v

Bowler 0s 1s 2s 3s 4s 5s 6s 7+ Dismissal Runs Balls SR

Mohammad Hafeez 2 5 0 0 1 0 0 0 9 8 112.50
Umar Gul 1 3 1 0 0 0 0 0 5 5 100.00
Aizaz Cheema 8 3 2 0 2 0 1 0 21 16 131.25
Saeed Ajmal 4 3 0 0 0 0 0 0 caught 3 7 42.85
Shahid Afridi 1 3 0 0 1 0 0 0 7 5 140.00
Wahab Riaz 3 3 0 0 1 0 0 0 7 7 100.00


சாயித் அஜ்மலைத் தவிர மற்ற எல்லா பந்து வீச்சாளர்களையும் சரியாக எதிர் கொண்டிருக்கிறார்.

இரண்டாம் விக்கெட்டிற்கான ஓட்ட விகிதத்தைப் பாருங்கள்

சச்சின் 52(48 பந்துகள்) -- கோலி 73(68 பந்துகள்)

ஏறத்தாழ தன்னை விட 15 வயது இளமையான கோலியின் வேகத்திற்கு இணையான வேகத்தில் ஆடி இருக்கிறார். கூடவே ரோஹித் சர்மாவை விட வேகமாகவே ஆடி இருக்கிறார்.
Tendulkar was totally unrestrained and went along at a faster clip than Kohli.

டெண்டுல்கர் நல்லா ஆடினாரா என்றால் நன்றாக ஆடினார் என்பதுதான் சரி. அவர் நேற்று பாகிஸ்தானிற்கு எதிராகத் திணறவில்லை.

ஒரு பந்தை அவர் சரியாக கணிக்காததால் (தூஸ்ரா - ஆஃப் ஸ்பின்னர் வீசும் லெக்ஸ்பின் ) அவர் அவுட் ஆனார். இருந்தாலும் பாரமாயில்லை.

கோலி ஆரம்பகாலங்களில் இருந்த ஆர்பாட்டங்களைக் குறைத்துக் கொண்டு மிகச் சிறந்த வீரராக உருவெடுத்து வருகிறார். அவரை இன்னொரு சச்சின் ஆக்குவது யார் கையில் இருக்கிறது என்று உங்களுக்கேத் தெரியும்.

சச்சினுக்கு அடுத்த இலக்காக ஒரு நாள் போட்டிகளில் 100 - 50கள்(49 முடிச்சாச்சி), 50-100கள் இருக்கின்றன(96 அடிச்சாச்சி). இதை அவர் பார்க்கிறாரோ இல்லையோ நம்ம செய்தியாளர்கள், வர்ணனையாளர்கள் சொல்லிச் சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை இரணகளப்படுத்தப் போறாங்க.

கோலி, ரெய்னா, தோனி செட் ஆயாச்சி. இதில் ரெய்னாவிற்கு ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து போன்ற நாடுகளில் ஆட இன்னும் பயிற்சி தேவை. இப்போதைக்கு ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜெடெஜா-யூசுஃப்-பதான் சகோதரர்களில் ஒருவர் தேறுவார்.

சேவாக் உடைய நிலை கவலை தருவதாக இருப்பதால் கண்டிப்பாக இரண்டு நல்ல தொடக்க ஆட்டக்காரர்களை உருவாக்க வேண்டிய கட்டாயமும், இடைநிலை ஆட்டக்காரர்கள் இன்னும் இருவரை (மனோஜ் திவாரி மற்றும் ஒருவர்) உருவாக்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணி மேலாண்மைக்கு இருக்கிறது. கூடவே ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களையும் இரு சுழல்பந்து வீச்சாளர்களையும் தயார் செய்யும் கடமையும் இருக்கிறது.

ஆனால் அதையெல்லாம் செய்ய வேண்டிய கிரிக்கெட் வாரியம் அதில் கவனம் செலுத்துவதில்லை. இதில் சச்சின் தன்னுடைய ஓய்வை அறிவித்தால் மட்டும் வாரியம் திருந்திடப் போகிறதா என்ன?

சச்சினை விட மிகச் சிறந்தவர் யாருமில்லை என்பது வேறு கோணம். அந்த விஷயத்திற்கு நான் வரப்போவதில்லை.

இன்றைய சூழ்நிலையில் துவக்க ஆட்டக்காரர்களை முறையாக உருவாக்கத் தவறியதால் சச்சின் இன்னும் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவ்வளவுதான். அதற்கு சச்சின் காரணமில்லை.

சச்சின் இன்னும் ஆடிக்கொண்டிருக்க சச்சின் காரணமில்லை. ஒருவிதத்தில் நானும் நீங்களும் கூட காரணம். (சச்சினைப் பத்திப் பேசறமில்ல - அதான்)
 
தாமரை நொண்டிச்சாக்குகள்....நல்லாவே இருக்கு. சச்சின்...கடவுளல்ல.....இன்னைய மேட்சில் பாகிஸ்தானோடு எப்படி தினறினார்....விராட்கோஹ்லியே....பரவாயில்லை.....என்னத்த சீனியர்...அட போங்கப்பா...

நேற்றைய போட்டியில் கம்பீர் ஆட்டமிழந்து போட்டி பாகிஸ்தானின் கைக்குள் சென்று விடாதிருக்க சச்சினின் ஆட்டமும் ஒரு முக்கியமான காரணமென்பேன், தொடக்கத்தில் சச்சினின் ஸ்ரைக் ரேட் விராட் கோலியின் ஸ்ரைக் ரேட்டை விட அதிகமாகவே இருந்தது....!!!

17 வது ஓவர் முடிவில் நிலமை இப்படித்தான் இருந்தது....

V Kohli 56* (55b 7x4)
SR Tendulkar 50* (45b 5x4 1x6)


பின்னரே விராட் கோலி தன் அதிரடியால் போட்டியினை தன் கைக்குள் கொண்டு வந்தார் - அதற்கு சச்சினின் உறுதுணை அவருக்கு உதவியிருந்தது.
 
Back
Top