யானையாரே! யானையாரே! எங்கே போறீங்க?

M.Jagadeesan

New member
யானையாரே! யானையாரே! எங்கே போறீங்க?
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்-கொடிய
வீணர்தம்மை அழிப்பதற்கு விரைந்து போகிறேன்.

தந்தங்கள் உமக்கெதற்கு யானையாரே?
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வலுவில்
வந்தசண்டை முடிப்பதற்கு வைத்திருக் கின்றேன்.

காதிரண்டும் ஆட்டுவதேன் யானையாரே?
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்-மனிதரின்
கடுஞ்சொல்லைக் கேட்காமல் இருப்பதற்குத் தான்.

தூண்போன்ற காலெதற்கு யானையாரே?
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!-கொடிய
துஷ்டர்தமை மிதிப்பதற்கு அறிந்திடுவீரே!

தும்பிக்கை உமக்கெதற்கு யானையாரே?
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்-வாழ்வில்
நம்பிக்கை வளர்ப்பதற்கு வைத்திருக் கின்றேன்.

பானைவயிறு உமக்கெதற்கு யானையாரே?
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!-உணவை
ஆனமட்டும் உண்பதற்கு அறிந்திடுவீரே!

மண்ணைவாரித் தூற்றுவதேன் யானையாரே?
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!-வாழ்க்கை
மண்ணிலே முடியுமெனக் காட்டிடத் தானே!
 
யானையடிப் பாதைதனைக் கேட்டதுண்டு.....

பாதைதனைக் காட்டிடும் யானைதனைக் கண்டேன் இன்று......

பின் தொடர்வோம்.....
 
யானையாரை வைத்து இயற்றப்பட்ட பாடல் அருமை.

சில இடங்களில் சந்தம் இடறுவதை தவிர்த்தால் அருமையான சிறுவர் பாடலொன்று எமக்கு கிடைக்கும்.

.
 
அர்த்தமுள்ள ஆனைப்பாடல் அழகு. குழந்தைகளுக்கு இது போன்ற பாடல்கள் மூலம் அழகுத்தமிழைக் கற்றுத்தர முடியும். மிகவும் நன்றி ஐயா.
 
ஜானகி, ஹேகா. கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.
 
யானையின் அங்கங்களின் அர்த்தம் விளக்கிடும் அருமையான பாடல். வாழ்த்துக்கள் ஜகதீசன் அவர்களே.
 
அருமையான பாடல்! பாராட்டுக்கள்!!
அருமையான பாடல்! மனமார்ந்த பாராட்டுக்கள்!!
அன்புடன் அரவிந்த்
 
Back
Top