அதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே

virumaandi

Banned
அதிமுகவிற்கு வோட்டு போட்ட புண்ணியவன்களே , புத்திசாலிகளே , நடிநிலைவியாதிகளே , அறிவாளிகளே நீங்க செய்த பாவத்தால் அதிமுக ஆட்சியில் தமிழகம் பெரும் சலுகைகள் :
அதுவும் திமுக எதிர்கட்சியாக கூட வர முடியாமல் செய்த தமிழகத்தின் அறிவாளிகளே உங்களுக்கு அதிமுகவின் பரிசு : ஆறே அறு மாதங்களுக்குள்
1 . சமச்சீர் கல்வி ரத்து
2 . தலைமை செயலகம் மாற்றம் ( 1200 கோடி )
3 . செம்மொழி பூங்கா மராபரிக்க படாதது
4 . பரமக்குடி துப்பாக்கி சூடு ( 7 பேர் பலி )
5 . இலவச கான்கிரிட் வீடு திட்டம் ரத்து
6 . இலவச இன்சூரன்ஸ் திட்டம் ரத்து
7 . மக்கள் நல பணியாளர்கள் டிஸ்மிஸ்
8 . TNPSC தேர்வு ஆனவர்கள் பணி கொடுக்காதது
9 . பேருந்து கட்டண விலை உயர்வு
10 . பால் விலை உயர்வு
11 . விரைவில் மின் கட்டண உயர்வு
12 . விலை வாசி கடும் உயர்வு
13 . கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
14 . அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம்
15 . மெட்ரோ ரயில் திட்டம் மாற்றம்
இவ்வளு கொடுமைகளையும் பார்த்து கொண்டு எதுவும் பேச தெரியாத , கேட்க தெரியாத நபர்களை எதிர்கட்சியாக கொண்டு வந்த உங்களை எதை கொண்டு அடிப்பது . ?
 
விருமாண்டி, போய்யீ பொழப்ப தலப்ப பாருங்க..

அடுத்த தடவ ஒரு வேள திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விலைவாசிய ஏற்றினா, என்ன செய்றது ஜெ கஜானாவை காலி செய்துட்டு பொய்ட்டாங்கனு கூச்சப்படாம சொல்லுவீங்க, உங்க தலைவர் பேசுறதெல்லாம் உங்களுக்கு தேவாரமா இருக்கலாம், எங்களையும் நம்ப சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க..........

கலைஞரை ஏற்றி ஜெவை தூற்ற வேண்டுமென்றால் சொந்தமா மேட போட்டு பேசுங்க, மன்றத்தில இந்த வேலய இனி வச்சுக்காதீங்க....
 
அய்யோ அய்யோ...ஆரம்பிசிடாங்கையா..இன்னும் காலம் இருக்கு ஏன் அதுக்குள்ளே இந்த பொலம்பல். எதுவுமே முழுசா தெரிந்து கொள்ளும் வரை பொறுமை வேணுமையா பொறுமை
 
ஆறு மாதத்திலேயே இப்படி ஓர் நல்லாட்சியா நன்று நன்று ! !

இதை கூட பாராட்ட ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்க்றது என்ன செய்ய அவர்களிடம் எல்லாம் பேசி ப்ரயோஜனம் இல்லை நாம நம்ம வேலைய பாப்போம் இல்லன்ன நம்மள கூட மேடை போட்டு பிரச்சாரம் பண்ண சொல்லுவாங்க ... :icon_rollout: :icon_rollout:
 
என்ன செய்வது?
அவர்கள் வந்தால் பட்டியல் வேறாக இருக்கும்!
மற்றபடி நாம் தப்பிக்க முடியாது.
அவ்வளவுதான்!
 
என்ன சொல்ற்றீங்க விரு, நம் தமிழ்நாடு என்றும் இல்லா சிறப்புகளை கொண்டுள்ளது, அதுவும் இந்த ஆறுமாத காலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியும் எண்ணிலடங்கா ஓர் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. :sprachlos020:
 
தேளிடமிருந்து தப்பி பாம்பிடம் மாட்டிக்கொண்ட கதையாயிற்று.
 
இது அதிமுக ஆதரவு தளம் என்பதை ஆதன் பதிப்பும்... இதற்கு முன்னர் தேர்தல் நேரத்தில் செய்த விவாதங்களும் உறுதி செய்கின்றது...

தமிழை இகழ்ந்தவர்களை தாய் தடுத்தாலும் விடேன்...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
நான் ரசித்த சில கமெண்ட்டுகள்

பஸ் கட்டணம் உயர்ந்தால் என்ன ?
பஸ்சுல நாம ஏறுவதற்கு பதிலாக பசு நம்மமேல ஏறட்டும் !
பால் விலை உயர்ந்தால் என்ன ?
பாலுக்கு பதில் பாலிடால் குடிப்போம் !
என்றுமே மாத்தி யோசிக்கும் மரியாதைக்குரிய தமிழ் மக்கள் .....
#ஒவ்வொரு மாற்றமும் தேவ மச்சான்

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமகதான் மிதேபேன் , கவிழ்ந்து விட மாட்டேன் .. இது : நம் தலைவர் ....
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் சுனாமியாக வந்து சாகடிபேன் .. உங்களை சும்மா விடமாட்டேன் .. இது : தானே தாய் தமிழக மக்களின் கன்னடதாய் .. அம்மா என்கிறே பேய் ....
 
தேளிடமிருந்து தப்பி பாம்பிடம் மாட்டிக்கொண்ட கதையாயிற்று.

கண்டிப்பாக இல்லை..

"விக்கல் தீர விஷம் குடித்த மக்கள்...."

இது தான் உண்மை.. இதில் பார்பன தேர்தல் அதிகாரிகளின் உள்குத்துக்களும் அடங்கும்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
இது அதிமுக ஆதரவு தளம் என்பதை ஆதன் பதிப்பும்... இதற்கு முன்னர் தேர்தல் நேரத்தில் செய்த விவாதங்களும் உறுதி செய்கின்றது.....

மன்றம் எத்தகைய தளம் என்பதை எல்லாரும் அறிவார்கள். புதிதாக நீங்கள் சான்றிதழ் கொடுக்கத் தேவை இல்லை நண்பரே!

உங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்து வந்தாலே அது அதிமுகவுக்கு ஆதரவாக அமைந்திடுவது எதனால் என்று நீங்களே சிந்தித்து முடிவெடுங்கள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பட்டியல் இருந்துகொண்டே இருக்கும். பட்டியலிடுபவர்களும்..
 
பட்டியல் எப்புடி இருக்கும் என்று எல்லோரும் அறிவார்கள். ஆனால், அந்த பட்டியல் நல்லதை நோக்கி இருக்கவேண்டும். நாட்டில் 97 சதவிகிதம் மக்கள் அடித்தட்டு மக்கள். அவர்களின் வாழ்க்கையில் கை வைக்கும் எந்தொரு ஆட்சியையும் நல்ல ஆட்சி அல்ல.

இந்த "இனிய" ஆட்சியின் பட்டியல் அனைத்தும் அன்றாடும் அல்லல்:sauer028::sauer028:படும் மக்களின் வயிற்றில் அடிக்கும் போக்கில் இருக்கிறது.

அரசியல், ஊழல், வருமானத்திருகு அதிகமாக சொத்து போன்றவைகள் அனைத்தையும் ஒதிக்கி விட்டு, இங்கு மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு விவாதம் (மரியாதையான முறையில்) நடத்தினால் நன்று.

பால் விலையேற்றம், பேருந்து விலையேற்றம், நாளை மின் விலையேற்றம் போன்றவைகள் அடித்தட்டு மக்களால் சகிக்க முடியாது. இதற்கு முன் நடந்த ஆட்சி எதிலும் இல்லா ஒன்று. :sauer028:
 
தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமகதான் மிதேபேன் , கவிழ்ந்து விட மாட்டேன் .. இது : நம் தலைவர் ....

மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது எத்தனை கட்டுமரத்தை பாதுகாப்புக்கு அனுப்பி வைத்தீர்கள்..

இலங்கையில் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்ட* போது எத்தனை கட்டுமரங்கள் தமிழர்களை காப்பாற்ற அனுப்பி வைத்தார்கள்..

ஏக வசனம் நான் கூட பேசுவேன், செய*லில் காட்ட*னும்....

உங்கள் கூற்றுபடி ஜெ தமிழர்களின் விரோதி..

உலகத்தமிழர்களின் ஒரே தலைவர் என்று சொல்லிக் கொண்டு இலங்கை இனப்படு கொலையை வேடிக்கைப் பார்த்த கலைஞருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்..

எதிரியை மன்னிக்க முடியும் கலைஞரை ??

கலைஞராண்ட போது தேனாறும் பாலாறும் பாய்ந்ததாக சொல்லுவதும், ஜெ ஆட்சியில் பட்டினியிலும் பசியிலும் சாவதும் போல எழுதுவதைத்தான் ஏற்க முடியவில்லை..

//2 . தலைமை செயலகம் மாற்றம் ( 1200 கோடி )//

இது மக்களுக்கான அதிநவீன வசதி பொருந்திய மருத்துவ மனையாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது..

புனித ஜார்ஜ் கோட்டைக்கே திரும்பி சென்ற முடிவை மன்றத்தில் விமர்ச்சித்து நான் பதிலிட்டிருக்கிறேன், அதற்கு திமுககாரன் என்று கூட பட்டம் கிடைத்தது, அதே நேரத்தில் அந்த கட்டடம் மக்களுக்காக பயன்பட போகிறது என்பதை உணர்ந்ததும், கட்டடம் இருட்டடிக்கப்பட்டவில்லை என்று அமைதியானேன்.

விலை வாசி ஏற்றத்தை நீங்கள் ஒரு செய்தியாக பகிர்ந்து விவாதத்துக்கு அழைத்திருந்தால், அம்மாவின் இந்த செயல் அவர் சொல்லும் காரணம் என எல்லாத்துக்கும் என் விமர்சனங்களை வைத்திருப்பேன்..

ஆனால் நீங்கள் இந்த திரியில் செய்வது அஃமார்க் அரசியல், உங்களுக்கு ஜெவை தூற்ற வேண்டும்..

அப்போது என்னால் ஒரு அடித்தட்டு மக்களை போன்றுத்தான் பதிலகளிக்க முடியும்..

விருமாண்டி மற்றும் உதயசூரியன் உங்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான், நான் எந்த தலைவன் தலைவிக்கும் தொண்டன் அல்ல, நான் ஒரு தண்ணீர் மாதிரி எந்த முகத்தோடு கொண்டு என்னை பார்க்குறீர்களோ அதே முகத்தை உங்களுக்கு காட்டகிறேன், காட்டிய பிறகு என்னை குறை சொல்லாதீர்கள், நீங்கள் பார்த்தது உங்களின் கோர முகத்தை, அதனால் பிரச்ச்னை உங்களிடம் உண*ர்ந்து கொள்ளுங்கள்
 
பட்டியல் எப்புடி இருக்கும் என்று எல்லோரும் அறிவார்கள். ஆனால், அந்த பட்டியல் நல்லதை நோக்கி இருக்கவேண்டும். நாட்டில் 97 சதவிகிதம் மக்கள் அடித்தட்டு மக்கள். அவர்களின் வாழ்க்கையில் கை வைக்கும் எந்தொரு ஆட்சியையும் நல்ல ஆட்சி அல்ல.

இந்த "இனிய" ஆட்சியின் பட்டியல் அனைத்தும் அன்றாடும் அல்லல்:sauer028::sauer028:படும் மக்களின் வயிற்றில் அடிக்கும் போக்கில் இருக்கிறது.

அரசியல், ஊழல், வருமானத்திருகு அதிகமாக சொத்து போன்றவைகள் அனைத்தையும் ஒதிக்கி விட்டு, இங்கு மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு விவாதம் (மரியாதையான முறையில்) நடத்தினால் நன்று.

பால் விலையேற்றம், பேருந்து விலையேற்றம், நாளை மின் விலையேற்றம் போன்றவைகள் அடித்தட்டு மக்களால் சகிக்க முடியாது. இதற்கு முன் நடந்த ஆட்சி எதிலும் இல்லா ஒன்று. :sauer028:

ராம்கி இல்லை என்று சொல்லாதீர்கள் இருந்தது, ஆனால் கொஞ்ச கொஞ்சமா கொஞ்ச கொஞ்சமா உயர்ந்தது..

ஜெவுக்கு கலைஞர் அளவுக்கு திறமை கிடையாது..

அவ்வளவுதான் விடயம்..

போன ஆட்சியின் போது இந்திய டுடேவில் வந்தது ஜென்சஸ் என்ன சொல்லிற்று தெரியுமா ??

விலைவாசியில் தமிழகம் பெங்களூரை முந்திக் கொண்டு போனது என்று சொன்னது..

உலக விலைவாசி பட்டியலிலும் சென்னை 102 இடத்திலும், நெங்களூர் 103 இடத்திலும்என்றுத்தான் இருந்தது..
 
Last edited:
விருமாண்டி மற்றும் உதயசூரியன் உங்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான், நான் எந்த தலைவன் தலைவிக்கும் தொண்டன் அல்ல, நான் ஒரு தண்ணீர் மாதிரி எந்த முகத்தோடு கொண்டு என்னை பார்க்குறீர்களோ அதே முகத்தை உங்களுக்கு காட்டகிறேன், காட்டிய பிறகு என்னை குறை சொல்லாதீர்கள், நீங்கள் பார்த்தது உங்களின் கோர முகத்தை, அதனால் பிரச்ச்னை உங்களிடம் உண*ர்ந்து கொள்ளுங்கள்

இதைத்தான் நானும் சொல்கிறேன்

உங்களுக்கு பிடித்த தலைவர் நல்லது செய்துவிட்டால் அவர்தான் கடவுள் என்பது போலவும், அதே தவறு செய்தால் தெரிந்திருந்தும் தவறில்லை என்பதை போலவும் சொல்வது.

இதையே பிடிக்காத ஒரு தலைவர் செய்தால் அப்படியே மாற்றி பேசுவது.

இதற்க்கு பெயர்தான் சிந்திப்பது என்று அர்த்தமா

நீங்கள் எப்படி திமுக விற்காக இருக்குறீர்களோ? அதே சிலர் சிந்திக்காமல் அதிமுக விற்க்காக இருக்கிறார்கள். அதனால்தான் நாடு இன்னமும் இப்படி இருக்கிறது

தமிழன் என்ற முறையில் எனக்கு கருணாநிதியை பிடித்த அளவிற்கு ஜெ வை பிடிக்காது. ஆனால் அரசியல் வாதிகளாக இவர்கள் இருவரையுமே எனக்கு பிடிக்காது. என்னைப் பொறுத்தவரை ஒருவர் தமிழ் மொழியை வைத்து அரசியலில் சம்பாதிக்கிறார், இன்னொருவர் அவரை திட்டி திட்டியே முதல்வராகிறார். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இவர்களுக்காக பரிந்து பேசினால் நாம் என்ன மாதிரியான மனிதர்கள்.

இன்றைக்கு இருக்கும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம், மத்தியில் இருந்து நிதி உதவி இல்லை என்று சொல்லப் படுகிறது. இல்லை என்றால் ஏன்? இலங்கைக்கு எதிராகவும்? கூடங்குள பிரச்சனைக்கு ஆதரவாகவும் தீர்மானம் போட்டதன் விளைவு?

தன்மானம் காக்க கொஞ்சம் கஷ்டப் படுகிறோம் என்று நினைக்கலாமே,

கடந்த ஆட்சியில் வாங்கிய இலவசத்திற்கு நாம் குடுத்தவிலை என்ன? இழந்த உயிர்கள் எத்தனை?

என்னடா இப்படி சொல்கிறானே என்று எனக்கும் அதிமுக காரன் என்கிற பட்டம் கட்டி விடாதீர்கள். சிந்தியுங்கள் முதலில். வீட்டிலிருந்து கிளம்பி பாட்டெழுத வந்தவருக்கு இன்று 3000 கோடி சொத்து, மூப்பனார் வீட்டில் சென்று நடனமாடியவர் இன்று நம் முதல்வர்.

சிந்திக்கவே மாட்டீர்களா? என்று திருந்துவோம் நாம்?

காமராஜர் என்ற ஒருவரோடு செத்துவிட்டது தமிழ் நாட்டு அரசியல். இப்படி பட்ட இவர்களுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று உங்கள் மனசாட்சியை நீங்களே கேளுங்கள்
 
//இன்றைக்கு இருக்கும் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம், மத்தியில் இருந்து நிதி உதவி இல்லை என்று சொல்லப் படுகிறது. இல்லை என்றால் ஏன்? இலங்கைக்கு எதிராகவும்? கூடங்குள பிரச்சனைக்கு ஆதரவாகவும் தீர்மானம் போட்டதன் விளைவு?
//

நிவாஸ் நிதி உதவி வராமல் இல்லை, இதை படிங்க புரியும்

http://tamil.oneindia.in/news/2011/...uestions-jaya-claim-central-fund-aid0091.html
 
சரிதான் ஆதன்,

ஆனா உண்மை என்னனே தெரியலையே, ஒரு வேலை தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினால் தெரிய வருமோ? :sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:
 
பல அரசியல் விவாதங்களில் மனம் நொந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்....

இந்த விவாதத்தை இத்தோடு விட்டு விடுங்கள்.

யாருக்கு ஒட்டு போட்டாலும் ஓட்டாண்டியாய் ஆவது ஒட்டு போட்டவர்கள்தான் என்பது காலம் காலமாய் நிருபிக்கப்பட்டுவரும் உண்மை.

விடியல்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.....

மன்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் அரசியலால் தூற்றிக்கொள்ள வேண்டாம் என்பது என் வேண்டுகோள் ..
 
ராம்கி இல்லை என்று சொல்லாதீர்கள் இருந்தது, ஆனால் கொஞ்ச கொஞ்சமா கொஞ்ச கொஞ்சமா உயர்ந்தது..

ஜெவுக்கு கலைஞர் அளவுக்கு திறமை கிடையாது..

அவ்வளவுதான் விடயம்..

போன ஆட்சியின் போது இந்திய டுடேவில் வந்தது ஜென்சஸ் என்ன சொல்லிற்று தெரியுமா ??

விலைவாசியில் தமிழகம் பெங்களூரை முந்திக் கொண்டு போனது என்று சொன்னது..

உலக விலைவாசி பட்டியலிலும் சென்னை 102 இடத்திலும், நெங்களூர் 103 இடத்திலும்என்றுத்தான் இருந்தது..

அடாவடியாக பேச கூடாது..
ஜூலை மாதம் கொடுத்த பேட்டியில் ஜெயா கேட்டதை விட 3ஆயிரம் கோடி அதிகமாக கிடைத்தது என்றவர்... இப்பொழுது விடும் கதை படிக்காதவனுக்கு கூட காமெடியாக தோன்றுகிறது... எல்லாம் தெரிந்த்தவர் என்ற பார்வையில் பார்ப்பதை விட ... கடந்த ஐந்து வருடம் குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாய்... எல் எஸ் எஸ் கட்டணம் 2.50

ஆனால் தற்போது தான் உயர்ந்துள்ளது.. இதையே ஆதன் அவர்கள் இல்லை என்று சொல்கிறாரா??? அதிலும் விலை ஏற்றிய பின்...
எல் எஸ் எஸ் என்ற பஸ்சையும் எடுத்துவிட்டு அனைத்தும் பச்சை கலர் போட்ட எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ஓடுது.. அதாவது.. பீச் ஸ்டேஷன் இருந்து மகாராணி வர முன்பு 3 இப்பொழுது ஒன்பது ரூபாய் இதை பொதுவான கண்ணோட்டத்தில் விவாதியுங்கள்..
 
நான் என்ன அடாவடியா பேசினேன், உள்ளதை தான் சொன்னேன்..

உங்களுக்கு அளித்திருந்த பதிலில் தெளிவா சொல்லி இருக்கேன், இது வெறும் அரசியல் செய்ய துவங்கப்பட்ட திரி, தலைப்பை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்கவும்...

ஜெ செய்தது சரி என்று சொன்னேனா ?

நிவாஸுக்கு பதிலிட்டு ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன் அதை அம்மா நமது எம்.ஜி.ஆரில் பெருமை பொங்க கொடுத்த பேட்டியை பற்றி சுபவி சுட்டிக்காட்டி ஐயம் எழுப்பி இருக்கிறார்...

இது போன்ற பதிவுகள் உங்களுக்கும், விருமாண்டிக்கும் புதிதல்ல, கண்மூடித்தனமாய் கலைஞரை புகழ ஜெவை தூற்ற கூடாது. இவை தொடர்ந்து நடப்பதாலேயே உங்களிடம் விவாதம் செய்ய வேண்டிய சூழல் உருவானது..

இப்போது கூட வர்ண சாயம் பூசவே நீங்கள் முற்படுகுறீர்கள், உங்கள் நோக்கம் மக்களின் பிரச்சனையை பேசுவதல்ல என்பது நீங்கள் பயன்படுத்து வார்த்தைகள் சொல்லுகிறது..

//ஆனால் தற்போது தான் உயர்ந்துள்ளது.. இதையே ஆதன் அவர்கள் இல்லை என்று சொல்கிறாரா??? அதிலும் விலை ஏற்றிய பின்...
எல் எஸ் எஸ் என்ற பஸ்சையும் எடுத்துவிட்டு அனைத்தும் பச்சை கலர் போட்ட எக்ஸ்பிரஸ் மட்டும் தான் ஓடுது.. அதாவது.. பீச் ஸ்டேஷன் இருந்து மகாராணி வர முன்பு 3 இப்பொழுது ஒன்பது ரூபாய் இதை பொதுவான கண்ணோட்டத்தில் விவாதியுங்கள்..
//

இது மக்களை மட்டுமல்ல போக்குவரத்து துறை ஊழியர்களையும் பாதித்திருக்கிறது..

முன்பு 100 ரூபாய்க்கு கலக்ஸனுக்கு 2 ரூபாய் 50 பைசா பேட்டா நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது அது 1 ரூபாய் 65 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது, இப்படி பலரின் மடியில் இந்த அரசு கைவைத்திருக்கிறது, இதனை பற்றி எல்லாம் பேசத்தான் ஆசை ஆனால் உங்கள் நோக்கம் மக்களின் பிரச்சனையை பேசுவதை விட அரசியல் செய்வது என்பதாக இருக்க எப்படி பேசுவது, நாங்கள் எங்களுக்காக போராட்டிக் கொள்கிறோம், நீங்கள் எங்களுக்காக போராடுகிறேன் எனும் பெயரில் எங்களை வைத்து உங்கள் அரசியல் வியாபாரம் செய்யாதீர்கள் என்றே சொல்ல வேண்டியாதாக முதல் வேலையாக இருக்கிறது..
 
பல அரசியல் விவாதங்களில் மனம் நொந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்....

இந்த விவாதத்தை இத்தோடு விட்டு விடுங்கள்.

யாருக்கு ஒட்டு போட்டாலும் ஓட்டாண்டியாய் ஆவது ஒட்டு போட்டவர்கள்தான் என்பது காலம் காலமாய் நிருபிக்கப்பட்டுவரும் உண்மை.

விடியல்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.....

மன்ற நண்பர்கள் ஒருவருக்கொருவர் அரசியலால் தூற்றிக்கொள்ள வேண்டாம் என்பது என் வேண்டுகோள் ..

என்ன இப்புடி சொல்லிட்டீங்க தோழரே, எந்த ஆட்சி வந்தாலும் நம் உரிமையை கேட்டு பெறுவது தான் பகுத்தரிவாதிகளின் இயல்ப்பு, அதான் நமது என்னமாய் இருக்க வேண்டுமே தவிர. "அட! விடுங்கபா"- என்று பேச கூடாது..

யார் இருந்தால் என்ன, நமக்கு கிடைக்க வேண்டியதை சரியான முறையில் பெற வேண்டும்.

தட்டினால் திறக்கவில்லை என்றால், இப்பொழுது உடைக்க வேண்டும். அதுவே சிறந்தது.:icon_b:
 
Back
Top