அவன் - இவன்...

kulirthazhal

New member
பாலாவின் படம்தான்.. திரை அரங்கை விட்டு வெளியே வந்த அனைவரையும் நோட்டமிட்டேன்.. யாரும் யாருடனும் பேசவில்லை.. சிரிக்கவில்லை.. முக தசைகளில் ரத்த ஓட்டம் மிகுந்துக்கிடப்பதாய் குறியீடுகள்..

திரைக்கதையில் சில சறுக்கல்கள்... என்றபோதும் விஷாலின் அர்ப்பணிப்பும்.. ஆர்யாவின் இயல்பான நடிப்பும்.. மற்றும் பின்னணி இசையும் பலம்.. பலம்..

மீண்டும் பாலாவின் மூன்றாம் பரிமாண கதாபாத்திரங்கள்... சிலருக்கு பார்க்க பயம்... சிலருக்கு வெறுப்பு.. சிலருக்கு உடன்பாடு...

என்றபோதும் பாலாவின் படம் பார்க்க பலரும் பழகிவிட்டதாகவே நம்புகிறேன்... அன்புடன்.. -குளிர்தழல்..
 
இந்த விமர்சனம் மூலம் நீங்கள் கூறவருவது என்ன வென்று புரியவில்லை தோழர் ..இதனை தாங்கள் திரைவிமர்சனம் பகுதியில் திரைப்படத்தின் விமர்சனத்தினை தங்களுக்குரிய நடையில் பகிர்வின் மிகவும் நன்றாக இருக்கும் ..தொடருங்கள் தோழர்...
 
பாலாவின் படம்தான்.. திரை அரங்கை விட்டு வெளியே வந்த அனைவரையும் நோட்டமிட்டேன்.. யாரும் யாருடனும் பேசவில்லை.. சிரிக்கவில்லை.. முக தசைகளில் ரத்த ஓட்டம் மிகுந்துக்கிடப்பதாய் குறியீடுகள்..

திரைக்கதையில் சில சறுக்கல்கள்... என்றபோதும் விஷாலின் அர்ப்பணிப்பும்.. ஆர்யாவின் இயல்பான நடிப்பும்.. மற்றும் பின்னணி இசையும் பலம்.. பலம்..
மீண்டும் பாலாவின் மூன்றாம் பரிமாண கதாபாத்திரங்கள்... சிலருக்கு பார்க்க பயம்... சிலருக்கு வெறுப்பு.. சிலருக்கு உடன்பாடு...

என்றபோதும் பாலாவின் படம் பார்க்க பலரும் பழகிவிட்டதாகவே நம்புகிறேன்... அன்புடன்.. -குளிர்தழல்..

இந்த விமர்சனம் மூலம் நீங்கள் கூறவருவது என்ன வென்று புரியவில்லை தோழர் .....

அவர்தான் தெளிவாக சொல்லி இருக்கிறாரே ... இதற்குமேல் என்ன வேண்டும் .... 55 /100 என்ற விகிதத்தில் பாலா பாசாகி இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

ஆனால் வசனங்களின் நெடிதான் கொஞ்சம் தூக்கல் என்று கேள்விப்பட்டேன்.......... :confused:

பாலாவின் படம் பார்க்க பலரும் பழகிவிட்டதாகவே நம்புகிறேன்... :cool:

இது பாலாவின் படமா அல்லது பலான படமா என்று ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டு இருகிறார்கள்.. அந்தளவிற்கு இந்த படத்தில் கொச்சையான வசனங்கள் இடம் பெற்றிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது.. தவிர அந்த கடைசி காட்சி அப்படி எடுக்கத்தான் வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுகிறது.. மொத்தத்தில் பாலாவிடம் சரக்கு குறைய ஆரம்பித்திருகிறது என்றே தோன்றுகிறது..
 
விமரசனம் மூலம் ஒன்றும் சரியாக புரிந்துகொள்ளமுடியவில்லை. படம் ஓடுமா? பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் திரும்பப் பெறுவார்களா?

கொஞ்சம் வவரமாக எழுதினால் புரிந்துகொள்ள நன்றாக இருக்கும்
 
இன்னொரு பிதாமகனாக இருக்குமோ கதையே இல்லாமல் படம் முழுவதும் முடிந்து விடும்
 
Back
Top