நடிகை சுஜாதா மரணம்

பிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

sujatha-acterss.jpg

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.

கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நன்றி நக்கிரன்
 
மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி. நல்ல நடிகை. எனக்குப் பிடித்த நடிகையும் கூட. அவரின் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்...
 
நல்ல நடிகை - அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்
 
விதி - இவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தபடம்.

தமிழ் திரையுலகுக்கு மற்றுமொரு இழப்பு
அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்
 
அவரது ஆத்மசாந்திக்காகவும், அவரை இழந்து தவிக்கும் அனைவரின் ஆறுதலுக்காகவும்,
பிரார்த்திக்கின்றேன்...
 
அருமையான நடிகை!

அவருடைய குரலின் நடிப்பில் சிலிர்த்த நேரங்கள் ஞாபக ஊஞ்சலில்..

ஆத்மா சாந்தி அடையட்டும்
 
பண்பட்ட சிறந்த நடிகை.அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.
 
'52.. அப்படியென்றால் வயது 59 தான்.
இன்னும் அவர்கள் இருந்திருக்கலாம்.
அருமையான நடிகை; படம் பார்க்கும் பொழுது பல வேடங்களில் நம்ம வீட்டு உறவு பெண்போல உணர வைத்தவர்.
அவள் ஓரு தொடர்கதையில் அவர்கள் ஏற்ற கனமான பாத்திரத்தில், நான் இவரைபோலல்லவா அக்கா இருக்க வேண்டும் என்று நான் நினைததுண்டு..

கடல் மீன் படத்தில் இருந்த மென்மையும்.. எவ்வளவோ படங்கள்

அவரின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்திகிறேன்.
 
வெகு சீக்கிரம் அம்மா பாத்திரத்தை அடைந்த சுஜாதா அவர்கள்.....இத்தனை சீக்கிரம் நம்மைவிட்டுப்போவாரென எதிர்பார்க்கவில்லை. சிறந்த நடிகை. தமிழ்திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.
 
வருத்தம் தரும் செய்தி. அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் அனுதாபங்கள்.
 
ஓளிப்பதிவு கருவி எக்கோணத்தில் நோக்கினாலும்
இலட்சணமாய்த் தோன்றும் முகம் சுஜாதா அவர்களுக்கு ..

சில நுண்ணிய, வறண்ட மன உணர்வுகளை மிக இலகுவாய் முகத்தில் மின்னச் செய்யும் வல்லமை..

உணர்வுக்கேற்ப ஒத்துழைக்கும் குரல்...

அடுக்குமல்லி, தீபம், அவர்கள், மயங்குகிறாள் ஒரு மாது, அந்தமான் காதலி

-- பல படங்களில் மனம் ஈர்த்திருக்கிறார்.


மறைவுக்கு அஞ்சலி... குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்..
 
வருந்துகிறேன். அவர் மறைந்த செய்தி இப்போதுதான் தெரிகிறது. நல்ல குணச்சித்திர நடிகை. ஆன்மா சாந்தியடையட்டும்
 
நான் முன்பு முத்திரை பதித்த நடிகைகள் தலைப்பில் அவரைப்பற்றி எழுதியது இதோ

26) சுஜாதா ..

பாலசந்தரின் பெருமைக்குரிய அறிமுகம் இவர்.

ஆம் அவள் ஒரு தொடர்கதையில் அறிமுகம் அதன் பின் இவரது சினிமா வாழ்கை ஒரு தொடர்கதை
தான்.

இன்றளவும் இவரைப்போல் முகபாவத்துடன் வசனம் பேச ஆளில்லை..

எந்த வேடமேற்றாலும் அதில் தன்னை புகுத்திக்கொண்டுவிடுவதில் வல்லவர்

மாறுபட்ட கோணங்கள் இதோ ..

அவள் ஒரு தொடர்கதை - குடும்பத்தை தோளில் சுமக்கும் பாத்திரம் ..

" கல்யாணத்திற்கு முன்னாடி கர்வமா இருக்கலாம் கர்ப்பமா இருக்கத்தான் கூடாது " என இவர் பேசும்விதம் அருமை.

துணையிருப்பாள் மீனாட்சி - என்ன அருமையான நடிப்பு

நூல்வேலி -- எழுத்தாளராகவும் சென்சார் போர்ட் உறுப்பினராக இவர் நடித்த விதம் அபாரம்

பரீட்சைக்கு நேரமாச்சு .. இதில் ஐயங்கார் மாமி வேடத்தில் ஜொலித்திருப்பார்
அதில் வி.கோபாலகிருஷ்ணனுக்கு சமைத்து போடுவார்
இப்படி இவர் போட்டும் மகன் ஒய்.ஜிக்கு வேலை கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில்
இவர் "அவருக்கு வடிச்சு போட்டு போட்டு என்னத்த கண்டோம் " என்று பேசுவதை பார்த்து கொண்டே இருக்கலாம்

அவர்கள் : கொடுமைக்கார கணவனிடமிருந்து மீண்டு சுயமாக வாழமுடியும் என நிரூபிப்பார் அபார நடிப்பு.


அன்னக்கிளி -- தான் காதலித்தவரை தன் சிநேகிதியும் காதலிக்கிறாள் என தெரிந்து விட்டுக்கொடுத்து
பின் அவர்கள் குழந்தையையும் காப்பாற்ற தன் உயிர் தரும் வேடம்
சுஜாதாவின் நடிப்பு மிளிரியது.

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது .. இதிலும் திறம்பட நடித்திருப்பார்

மாரியம்மன் திருவிழா - இதில் டெல்லிகணேஷிற்கு இணை .. பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு
வாழ்கைப்பட்டு வரும் பெண் வேடம் ஜமாய்த்திருப்பார். நான் ரசித்த வேடம்


லலிதா -- கோரா காகஸ் படத்தின் தமிழ் வடிவம் .. என்ன அருமையான நடிப்பு

அந்தமான காதலி - சொல்லவும் வேண்டுமோ ..


பின் பல குணச்சித்திர வேடங்கள்

உன்னை நான் சந்தித்தேன்,

விதி - இதில் பூர்ணிமாவிற்காக வாதாடும் வேடம் பின்னியிருப்பார் ..

உயிரே உனக்காக - அருமையான வேடம்

ரஜினிக்கு அம்மாவாக உழைப்பாளி
சமீபத்தில் பாபாவிலும் பாந்தமான நடிப்பு ..

இவர் பதித்த முத்திரை ஏராளம் ..

ராஜ்


என்னால் அவரது மறைவை ஜீரணிக்க முடியவில்லை. எந்த திரையுலகும் அவரது திறமையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குறியது

http://youtu.be/O3C_JuW4bqs
 
எனக்குப் பிடித்த நடிகை விதி படத்தில் பாதிக்க பட்ட பெண்ணுக்காக வாதாடும் வேடம் நல்ல பண்ணி இருப்பார்
 
Back
Top