பொன்னின் செல்வன் நாயகி அனுஷ்கா!

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நாயகியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


விஜய்யின் ஜோடியாக, குந்தவை வேடத்தில் நடிப்பவர் இவரே.

இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு இணையாக மேலும் சில நாயகிகளும் நடிக்க உள்ளனர். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.

மகேஷ்பாபு, ஆர்யா மற்றும் முன்னணி நடிகர்கள் இணையும் பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பிரபல நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், கலை இயக்குநராக சாபு சிரிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது
 
ஆரியா - அதித்தக் கரிகாலனாகவும்

மகேஷ் பாபு - பொன்னியின் செல்வராகவும்

ரீமாசென் - பழூர் ராணியாக

தேர்வு செய்யப்பட்டால் நன்று
 
இச்செய்தி வெட்டி ஒட்டப்பட்ட இடத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பகிரப்பட்டிருக்கிறது. அவ்வளவாக அரிய விஷயமில்லாத இத்திரியை மூடும்படி நிர்வாகிக்கும் மற்ற பொறுப்பாளர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்...

அல்லது

முகம்மது ஹூமாயுன்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப சேதிகள் குறித்து விரிவாக எழுதி மற்ற மக்களை அதனுள் பங்கேற்கச் செய்யலாம்.....
 
இச்செய்தி வெட்டி ஒட்டப்பட்ட இடத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பகிரப்பட்டிருக்கிறது. அவ்வளவாக அரிய விஷயமில்லாத இத்திரியை மூடும்படி நிர்வாகிக்கும் மற்ற பொறுப்பாளர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்...

அல்லது

முகம்மது ஹூமாயுன்:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப சேதிகள் குறித்து விரிவாக எழுதி மற்ற மக்களை அதனுள் பங்கேற்கச் செய்யலாம்.....

ஆதவா அவர்கள் கூறியது ஏற்ககூடிய விஷயம்.
இதுப்போன்று அரிய விஷயம் அல்லாதவைகளை தவிர்த்தல் நன்றே.
மேலும் நன்றி என்பதை குறிப்பிடாததும் சற்று நெறுடலாக உள்ளது.
 
ஆதவா அவர்களுக்கு,
நான் வெளியிட்ட இந்தச்செய்தி வெட்டிஒட்டப்பட்டதுதான்.அதை நான் மறுக்கவில்லை.
தகவலை சேகரித்து இதில் கொடுத்துள்ளேன்.அந்ததகவலை எனது நடையில் வெளியிட்டேன்.நான் ஓர் பத்திரிகையில் இதழ்தொகுப்பாளராக பணிபுரிந்திருந்தேன்.
இதில் எவ்விதப் பாதிப்பாகவும் இருக்காது என்று எண்ணுகிறேன்.இதை பூட்டவிரும்பினால் பூட்டிக்கொள்ளவும்.இதை தாங்கள் தனிமடலில் என்னிடம் சொல்லியிருக்கலாம்.

நன்றியுடன் முகம்மது ஹூமாயூன்.
 
நண்பரே..... கோபம் கொள்ள வேண்டாம்.

உங்களது இச்செய்தி கிட்டத்தட்ட பல இணையதளங்களிலும் காணப்படுகிறது. ஒரு செய்தியை அப்படியே பகிருவதும், படித்தபின் அதே செய்தியை தட்டச்சி பகிருவதும் ஒன்றுதான். காப்பி பேஸ்ட் கமாண்ட் மட்டும்தான் உபயோகிக்கப்படவில்லை... இல்லையா...

இச்செய்தியை நான் குறிப்பிட்டவாறு மக்களை அதனுள் பங்கெடுக்குமாறு எழுதியிருந்தால் அது வரவேற்கப்பட்டிருக்கும்... அதாவது உதாரணத்திற்கு,

இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்தபடம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய் கதாநாயகனாகவும், அனுஷ்கா குந்தவை பாத்திரத்தில் கதாநாயகியாகவும் மேலும் சிலரும் நடிக்கிறார்கள். (இவை செய்தி, இனி)

பொன்னியின் செல்வன் நாவலை நம் மன்றத்தில் படித்தவர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். அவர்கள் அனைவருக்கும் அந்தந்த பாத்திரங்களின் மேல் ஒரு கற்பனை இருக்கும். வந்தியத்தேவன் என்றால் இப்படியிருப்பான், குந்தவை என்றால் இப்படி இருப்பாள் என்ற கற்பனை விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பொருத்தமாக இருக்குமா? ஏனைய பாத்திரங்களுக்கு யார் யாரெல்லாம் பொருத்தமாக இருப்பார்கள் என்று விவாதிக்கலாம் நண்பர்களே... (இது பதிவர்களை உள்ளிழுக்கும் உத்தி) “

இப்படி கொடுத்திருந்தால் அது காப்பியல்ல.... ஒரு செய்தியை முன்னிருத்தி விவாதத்திற்கோ அல்லது மக்களின் கருத்துகளுக்கோ அடிகோடலாம். பொன்னியின் செல்வனைப் பற்றிய இச்செய்தி கிட்டத்த்தட்ட நூறு தளங்களுக்கும் மேலாக, பல தொலைக்காட்சிகளிலும் வந்திருப்பதால் நீங்கள் நன்றி போடவேண்டிய அவசியமும் ஏற்படாது.

உங்களது முந்தைய பதிப்புகளைப் பார்வையிட்டபிறகுதான் தனிமடலில் சொல்லாமல் பொதுவில் சொன்னேன். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். சிலவிஷயங்களை நேரடியாகச் சொல்லும் பொழுது அதைப் படிக்கும் பலரும் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது!!!

அன்புடன்
ஆதவா..
 
நண்பரே..........

நண்பரே..... கோபம் கொள்ள வேண்டாம்.

உங்களது இச்செய்தி கிட்டத்தட்ட பல இணையதளங்களிலும் காணப்படுகிறது. ஒரு செய்தியை அப்படியே பகிருவதும், படித்தபின் அதே செய்தியை தட்டச்சி பகிருவதும் ஒன்றுதான். காப்பி பேஸ்ட் கமாண்ட் மட்டும்தான் உபயோகிக்கப்படவில்லை... இல்லையா....

அன்பு... சரியாகச் சொன்னீர்கள்!!

என்னைப் பொறுத்தவரையில் பதிவுகள் இரண்டே இரண்டுதான்...

1. ஓரிடத்திலிருந்து காப்பி செய்யப்பட்டு எந்தவித டைப்பிங்கும் செய்யாமல் அப்படியே பதிவு போடுவது
2. நாமாகவே டைப் அடித்து போடுவது.

இதில் முதலாவது காப்பி, இரண்டாவது சொந்தம்....

:confused: :confused: :frown:
 
பிற தளங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் ஒரு மேற்கோளுடன் தமது உள கருத்துகளையும் கொண்டு அமைந்திருந்தால் மிகவும் நன்றாயிருக்கும்....
 
Back
Top