வந்தியத் தேவனாக விஜய்!

vijay2.jpg

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது.

இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.

மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
நன்றி:தட்ஷ்தமிழ்
 
வந்தியத் தேவனாக - விஜய்
ஆதித்திய கரிகாலனாக - விக்ரம்
உத்தம சோழராக - விஷால்
அருள்மொழி வர்மராக - மகேஷ் பாபு

இருக்கலாம் எனது கற்பனைப்படி
 
நண்பன் ஒருவனிடம் இருந்த பொன்னியின் செல்வன் வாங்கி வைத்து சில மாதங்களாக என்னுடைய புத்தக புதையல்களுக்கு நடுவில் அது தூங்குகிறது........ தூசு தட்டி அதனை எடுக்க வேண்டும்.....

இதுவரை நான் நான் பொன்னியின் செல்வனை படித்ததே இல்லை..... வெட்கமாக தான் இருக்கிறது...
 
இந்த செய்தி உண்மை தானா ?( அதாவது நடிகர்கள் தேர்வு)
 
நண்பன் ஒருவனிடம் இருந்த பொன்னியின் செல்வன் வாங்கி வைத்து சில மாதங்களாக என்னுடைய புத்தக புதையல்களுக்கு நடுவில் அது தூங்குகிறது........ தூசு தட்டி அதனை எடுக்க வேண்டும்.....

இதுவரை நான் நான் பொன்னியின் செல்வனை படித்ததே இல்லை..... வெட்கமாக தான் இருக்கிறது...

:sprachlos020::fragend005::eek::rolleyes::eek::eek::eek:
 
நம் மன்றத்திலேயே பொன்னியின் செல்வன் மின்னூலாக இருக்கின்றதே...

என்னதான் இருந்தாலும் புத்தகத்தில் வாசிப்பதுபோல வருமா...
புத்தகத்திலேயே வாசியுங்கள் ரங்கராஜன்...

சொதப்பாமல் பெருமைசேர்க்கும் வண்ணம் எடுத்தார்கள் என்றாற் சரி...

பஞ்ச் டயலாக் வச்சுப் பஞ்சராக்கமாட்டாங்க என்று நம்புவோம்... :lachen001:
 
கதையின் நாயகர்களாக புதிவர்களை தேர்வுசெய்து அவர்கள் மூலம் படத்தினை எடுத்தால் கல்கி அவர்களின் கதையாக இருக்கும் ...இந்த கதாநாயகர்கள் இதில் நடிப்பது உண்மையென்றால் ஒரு சரித்திரகதையின் சாராம்சம் தொலைந்து போய் விடும் ..இதுபோல் நடக்காமல் இருப்பதே நன்று ...ஒரு நூலின் ரசிகனாக என் கருத்து...
 
எம்.ஜி.ஆர் முதற்கொண்டு பலரும் முயன்று எடுக்க முடியாமல் திணறிய கதையமைப்பும், வருணனைகளும் கொண்ட கதை.

மணிரத்னத்துக்காக ஏற்கனவே சுஜாதா திரைக்கதை அமைத்து விட்டார் என்றே நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் என்ற பிரயளத்தை திரைப்படத்துக்குள் அடக்குவது ஒரு சவால்.

குறைந்தது இரண்டு வருஷ உழைப்பு நடிகர்களுக்குத் தேவைப்படும். பல முக்கிய நடிகர்கள் கதாபாத்திரங்களில் தேவைப்படுவதால் சாத்தியப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல.

நந்தினி கதாபாத்திரத்துக்கும், குந்தவைக்கும் எந்த நடிகைகள் நடிக்கப் போகின்றார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறது. உண்மையில் நடிப்பதற்கு சவாலான இந்த பாத்திரங்களில் நடிக்க நடிகைகள் போட்டிப்போட வேண்டும்.
 
சினிமா தகவல் நன்றாக உள்ளது.அறியமுடியாத பல செய்திகளை தெரிந்துகொள்கிறேன்.(முரளிராசா...உன்னை வெச்சு...இம்சை அரசன் படத்தோட இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று யோசிக்கிறேன்?) :cool:
 
இத பலமுறை என்கிட்ட கெஞ்சி கேட்டிருக்க ராஜாராம். யோசிச்சு பதில் சொல்றேன்.
 
உங்களை வெச்சு நாங்க தான் படம் எடுக்கணும்..

சிவாஜி ப்ரொடக்க்ஷன்ஸ் அமரன் கம்பைன்ஸ் "மயிலாடுதுறை மைனர்ஸ்"
கதை திரைக்கதை வசனம் கதை வசனகர்த்தா "டக்ஸ் -மதி"
சண்டைபயிற்சி: அக்னி
இசை (சங்கீதம்) : கீதம்
கொ ப செ : உமாமீனா

பி, கு: படத்துல நாயகிகள் கிடையாது, குத்துபாட்டு கிடையாது
 
என்னைப் போன்ற இளையதளபதி ரசிகர்களுக்கு,அருமையான தகவல்...அண்ணே....கலக்கிட்டிங்கண்ணே.....எங்கண்ணே இதையெல்லாம் தேடிப்புடிக்கிறிங்க... :confused:
 
எங்களை வைத்து எடுக்கும் படத்திற்கு,
"நாயகிகள் கிடையாதா?',இதை வன்மையாக கண்டிக்கின்றோம் சரண்...

இப்படிக்கு..
முரா....ராரா
 
எங்களை வைத்து எடுக்கும் படத்திற்கு,
"நாயகிகள் கிடையாதா?',இதை வன்மையாக கண்டிக்கின்றோம் சரண்...

இப்படிக்கு..
முரா....ராரா

சரி.. உங்களுக்கு யார் ஜோடியாக வேணும்? அசினா? நயன்தாராவா?
 
எங்களவெச்சு காமெடி கீமடி பன்னலயே??????
நெசமாத்தான் கேக்குறிங்களா????

எனக்கு நயன்தாரவும்,
முரளிக்கு பறவைமுனியம்மாவையும் போட்ருங்க...
ப்ளீஸ்ஸ்...(முரளிக்கு தெரியவேணாம்..:icon_ush:)
 
சரி.. உங்களுக்கு யார் ஜோடியாக வேணும்? அசினா? நயன்தாராவா?

இன்னமும் இந்த கழுதைகள் தானா வேற வேற யாரையாவது சொல்லகூடாதா?
 
ராஜாராம் :smilie_bett: இந்த நிலமை உனக்கு வராம பாத்துக்க

லாங்கிள பார்த்தால்தான் நான் காமெடியா இருப்பேன் :aetsch013:

கிட்டக்கப்பார்த்தால் டெரர்ரா இருப்பேன் :sauer028:
வேண்டாம்,,..எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை :huepfen024::huepfen024:தட்டி எழுப்பிடாதே...முரள்ஈ
 
லாங்கிள பார்த்தால்தான் நான் காமெடியா இருப்பேன் :aetsch013:

கிட்டக்கப்பார்த்தால் டெரர்ரா இருப்பேன் :sauer028:
வேண்டாம்,,..எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை :huepfen024::huepfen024:தட்டி எழுப்பிடாதே...முரள்ஈ

எழும்பினா இப்படித்தான் துள்ளுமா??? அப்ப தலைக்கு மேல பெரிய பாறாங்கல்லை கட்டிப்போட்டு தட்டியெழுப்புங்கள். :D
 
Back
Top