ரஜினி மனைவி லதாவுக்கு "பிடிவாரன்ட்'

large_184573.jpg

சென்னை:"செக்' மோசடி வழக்கில், நேற்று காலை நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருக்கு, "பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. மாலையில், கடன்தொகை வழங்கியதை அடுத்து, அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுமர்சந்த் பாப்னா. இவர், சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், "ஆக்கர் ஸ்டுடியோ' பெயரில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், "செக்' கொடுக்கப்பட்டது. அந்த, "செக்' வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, "செக்' மோசடி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்றும் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளியே வரக்கூடிய, "பிடிவாரன்ட்' நேற்று காலை பிறப்பிக்கப்பட்டது.இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான "டிடி'யை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்.
நன்றி; தினமலர்
 
யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ளே வை இந்த பழமொழி தேவை இல்லாமல் இப்ப ஏன் தான் நினைவுக்கு வருதோ?
 
ரஜினி இதை கேட்டு ஆடி போயிருப்பாரே...

ரஜினி தான் கோடீஸ்வரர் ஆயிற்றே... இருபது லட்சம் அவருக்கு சொற்பம் தானே... அவரது மனைவி கடன் வாங்கினார் என்றால் நம்ப முடியவில்லை... இல்லை.. இல்லை...
 
கவனிக்கத் தவறிய கணக்கு,கவனிக்கப்பட்டு பிரச்சினை முடிக்கப்பட்டதாக கடைசித் தகவல்.
 
பிடிவாரன்டா...ரொம்ப குண்டா இருப்பாங்களே..அவங்கள "பிடிக்கிறது" ரொம்ப கஷ்டமாச்சே..:confused:
 
பிடிவாரன்டா...ரொம்ப குண்டா இருப்பாங்களே..அவங்கள "பிடிக்கிறது" ரொம்ப கஷ்டமாச்சே..:confused:

ரொம்ப கஷ்டம் இல்ல! கொஞ்சம் கஷ்டம் தான் :D தமாசு
 
சாமானியக் குடிமக்கள் இப்படியான நிலையொன்றில் நீதிமன்றுக்குச் சமூகமளிக்காதிருந்தால்,
நீதிமன்றம் இப்படிச் சலுகையளித்திருக்குமா..?

நீதிமன்றம் போயிருக்காதிருந்தால் இப்பிரச்சினை இவ்வளவு விரைவில் தீர்ந்திருக்குமா..?

கடன் கொடுத்தவர், இவர்களிடம் பேசித் தீர்க்காமல், உடனடியாகவே நீதிமன்றத்தை அணுகியிருந்தாரா..?

கேள்விகள் மட்டுமே...

இன்று, இலங்கைச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது.
Code:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் சரண்
[ வெள்ளிக்கிழமை, 11 பெப்ரவரி 2011, 09:33.26 AM GMT ]

பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வாபஸ் பெற்றது. 
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த 7 ஆம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சட்டத்தரணிகள் எம்.கே.பி. சந்திரலால் மற்றும் அநுருத்த பண்டார மாகம்மன ஆகியோருக்கூடாக நீதிமன்றில் சரணடைந்தார். அமைச்சருக்கு எதிரான பிடிவிறாந்தை வாபஸ் பெறுமாறு அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கோரினர்.

அதையடுத்து, நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ. வராவேவ மேற்படி பிடிவிறாந்தை வாபஸ் பெற்றதுடன் அமைச்சர் தேவானந்தாவை எதிர்வரும் மே 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
ஒரு அரச அமைச்சரின் வதிவிடம், அரச காவலருக்குத் தெரியாதா..?
என்று யாரிடம் கேட்பது...
 
பிடிவாரன்டா...ரொம்ப குண்டா இருப்பாங்களே..அவங்கள "பிடிக்கிறது" ரொம்ப கஷ்டமாச்சே..:confused:

இதை ரஜினி கேட்டா உங்க மேல குண்டு போடுவார்..
 
இதை ரஜினி கேட்டா உங்க மேல குண்டு போடுவார்..

லதா மேடத்த தூக்கி போடாலே `குண்டு` போட்டதற்க்கு சமம்தானேனு என் மனசாட்சி சொல்லுது, ஆனால் அதையெல்லாம் பின்னூட்டத்திலே எழுதவா முடியும்?

என்னாஞ்சொல்லுறது :D
 
லதா மேடத்த தூக்கி போடாலே `குண்டு` போட்டதற்க்கு சமம்தானேனு என் மனசாட்சி சொல்லுது, ஆனால் அதையெல்லாம் பின்னூட்டத்திலே எழுதவா முடியும்?

என்னாஞ்சொல்லுறது :D

:D:D:D
 
Back
Top