நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

RAJAKING_ALM

New member
நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ்

சென்னை : மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள்

கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீஸ்சில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மன்மதன் அப்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது.

நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளை புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு தீங்கிழைக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இந்த பாடலில் அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்து இடம்பெற்ற பாடலில் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

படத்திற்காக, நடிப்புக்காக, சும்மா கதைக்காக, பாடலின் வீரியத்திற்காக யாரும் விளக்கம் கோரலாம்.யாரும் எந்த மதஉணர்வையும், சிறுமைபடுத்தியும், இந்திய மக்கள் சட்டங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டத்தின் வாயிலாகவும், நீதிமன்றத்தின் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

எச்சரிக்கை: குழந்தைகளும், பெண்களும் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டாம்.

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.

தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்.அந்தக், "கவிதை' இப்படி போகிறது:

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....


கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....


வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....


இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....


தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...


மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...


வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
....


இதுதான் அந்தக், "கவிதை.'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

"எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.
 
இந்து மக்கள் கட்சியா...அப்படீன்னா....

அட போங்கப்பா....இதுக்குப் போயி அலட்டிக்கலாமா....
 
மன்றத்துக்கு நல்வரவு நண்பரே!

முல்லை மன்றத்தில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
 
மனங்களை புண் படுத்தி இருந்தால் மன்னிப்பும் கேட்டு படத்தில் அந்த பாடலையும் நீக்கி விட்டார் கமல்

கமல் என்றாலே சர்ச்சைகள் தானோ
 
கமல் உலக நாயகனோ இல்லையோ கண்டிப்பாக சர்சை நாயகன்தான். இந்த சர்சை படத்திற்கு பெரிய விளம்பரமாக ஆனது. இருந்தும் என்ன பிரயோஜனம் படம் ஓடலையே
 
அந்த பாட்டை இன்னும் நீக்கவில்லை - நீக்க வேண்டியது அவசியமா????
 
ஏனோ தெரியவில்லை...
கமலுடைய படைப்புகளுக்கு ஏனோ தமிழர்களுக்கு பிடிப்பதே இல்லை...
இதை ஒரு சினிமா கண்ணோட்டத்தில் பாருங்க.. கமல் சொல்வது சரிதான் என்று தோணும்.
நம்ம ஆளுங்க கடுகு போன இடம் ஆராய்வர் பூசணிக்கா போன இடம் தெரியாதுங்கற பழமொழிக்கு சரியானவர்கள்.
 
சினிமா ஊடகம் என்பது ஒருவர் இருவர் காணும் பொழுது போக்கு ஊடகம் அல்ல ..வன்மையாக கண்டிக்க படவேண்டிய ஒரு நிகழ்வு இது ...இளம் மனதில் இது போன்ற நஞ்சினை தூவுவது தவிர்க்கப்படவேண்டும் .பின்னர் புலம்பவது கூடாது .மற்றவர்களின் காலாச்சாரத்தில் எது நல்லதோ அதை ஏற்று கொள்ள வேண்டும் .அதனை போல் அவ்வாறே பின்பற்றுவது என்பது கூடாது ..
 
Back
Top