தமிழ் தெரிந்தவர்க*ளையே கதாநாயகியாக்குவேன் - பாக்யராஜ்

தமிழ தெரிந்தவர்களை மட்டுமே என்னுடைய படத்தின் நாயகியாக்குவேன் என்று டைரக்டர் பாக்யராஜ் கூறினார். பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சித்து நாயகனாக நடிக்கும் படம் சித்து பிளஸ் 2. படத்தின் நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இந்த படம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் முதல் படம் செய்தபோது பயந்தது இல்லை. ஆனால் இந்த படம் தாமதம் ஆவதால் சற்று பயமாக இருக்கிறது. சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. முன்பு 16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்தானது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன ஒருவர் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது. அது போல்தான் இந்த படத்துக்கும் தாமதம் எற்பட்டது. என கருதுகிறேன். 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் வெற்றி பெறும். என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களை தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.

இவ்வாறு பாக்யராஜ் என்றார்.
********************* நன்றி தினமலர் ***************
 
எல்லாம் சரி இவரது இயக்கத்தில் அறிமுகமான ஊர்வசி, அம்பிகா, பூர்ணிமா என எல்லோரும் தங்கள் சொந்த குரலில் தமிழ் பேசவில்லை.. ஊர்வசி பின்னர் பேச ஆரம்பித்தார். மற்றவர்கள் ஹூம் ஹூம்
 
இப்போது உள்ள நடிகை,நடிகர் எல்லாரும் தமிழ் தெரியாமலே
வந்து படம் நடித்து விட்டு பாணத்தை சம்பாதிக்கிறார்கள்
தமிழ் தெரிந்த நடிகர்கள் வீட்டில் இருந்து வேற தொழிலை
செய்கிறார்கள்
இது தான் நடிப்பத்ற்க்கு உள்ள கிசு,கிசு என்ன செய்வதற்க்கு
இவர்களை ........

இருந்தாலும் மக்கள் விரும்பி படம் பார்க்கத்தான் செய்கிறார்கள்
 
சிறந்த திரைக்கதை அமைப்பாளர்..

தற்போதைய ட்ரெண்டுக்கு ஒத்துவருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..
 
இந்தியாவிலே சிறந்த முதல் இடத்தை தக்க வைத்து கொண்ட திரைகதை மன்னனின் தமிழ் பற்றுக்கு வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
 
Back
Top