தினசரி தியானம்

பொன்னரசி நாரணனார் தேவி, புகழரசி

மின்னு நவரத்தினம் போல் மேனி அழகுடையாள்

அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள், தேவி

தன்னிரு பொற்றாளே சரண் புகுந்து வாழ்வோமே

பாரதியார்
 
நித்தியமாம் இவ்வுலகில்- கடல் நீரில் சிறுதுளி போலும் இப்பூமி

இன்பமும் ஓர் கணத்தோற்றம் - இங்கு இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்

துன்பமும் ஓர்கணத் தோற்றம்- இங்கு தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்

தோன்றி அழிவது வாழ்க்கை- இதில் துன்பதோடின்பம் வெறுமை என்றோதும்

மூன்றில் எது வருமேனும்- களி மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி
பாரதியார்​
 
எல்லையில் வாசல் குறுகச்சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்போது

நில்லுமின் என்னும் உபாயமில்லை, நேமியும் சங்கமும் ஏந்தினானே !

சொல்லலாம்போதே உன் நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிகொண்டு என்றும்

அல்லல் படா வன்ணம் காக்கவேண்டும், அரங்கத்து அரவணைப்பள்ளியனே !

பெரியாழ்வார்
 
#700 மணிவாசகப்பெருமான் மனதில் இறைவன் சிவபெருமான் குடிகொண்டு எப்பொழுதும் பேரின்ப உணர்வுகளையே தருகிறான். இந்த வெண்பா பாடல் மணிவாசகப்பெருமான் செய்த சிவபுராண கருத்துக்களை சுருக்கமாக சொல்வதாக படுகிறது.

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற்போல
சிறந்தடியார் சிந்தனையில் தேனூறி நின்று

என்று இறை உணர்வை சிவபுராணத்தில் வெளிப்புடுத்துகிறார். இதில் இரண்டே வார்த்தைகளில் இன்பம் பெருக்கி என்று சொல்கிறார். இறைவன் சிவபெருமான் தன்னுடைய அடியாராகிய மணிவாசகப்பெருமானுடையை சிந்தையையே தான் வாழும் ஊராக சொல்வது

"சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்"

என்ற சிவபுராண வரிகளை நினைவுபடுத்துகிறது. இந்த திரியின் தலைப்பு தினசரி தியானம் என்று உள்ளது. இறைவனை எப்பொழுதும் சிந்தையில் வைத்து தெய்வீக உணர்வுகளை அனுபவிப்பது பக்தர்களுக்கு பேரின்பம். இறைவன் திருவடி நிழல்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும்

போன்று இருக்கும் என்று திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் சொல்கிறார்.

திரி தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.
 
Back
Top