வணக்கம்...
நெடுந்தொடர் பற்றிய இந்த திரியில் என் கருத்தைப் பதிவதில் மிக்க மகிழ்ச்சி!!
சின்னத்திரையின் அருமை பெருமைகளை அறியாதோர் தான் இப்படி 'சின்னத்திரை வில்லிகளும் சீரழியும் தமிழ் கலாச்சாரமும் ' என்று அதனை இழிவுப்படுத்தி எழுத முடியும்!!
சின்னத்திரை நெடுந்தொடர்களால் தமிழ் கூறும் நல்லுலகம் வளம் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று தான் கூற முடியும்...
இக்கால நெடுந்தொடர்களுக்கும் சங்க இலக்கியங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சங்க இலக்கியங்களிலேயே நெடுந்தொடர் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கிறன!!
அகநானூறு
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலுநின் காதலி எம்போல்
என்று கூறுகிறது!!
ஜி.கே.செஸ்டெர்டோன் (G.K.Chesterton) என்று ஒரு மாமேதை இருந்தார். அவர் வாசிக்கும் பழக்கம் எவ்வளவு நல்லது என்று கூறும்போது, தற்கொலை செய்துகொள்ளப் போகும் ஒருவன் திடீரென தான் வாசித்துவரும் தொடர்கதையில் கதாநாயகிக்கு அடுத்த வாரம் என்ன ஆகும் என்ற நினைப்பு வந்ததும், ‘சரி, அதைப் படித்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாமென நினைத்துத் திரும்பிவிடுவான் என்று எழுதுவார்.
நம்ம ஊரு சின்னத்திரை மெகாசீரியல்கள் எடுக்கும் இயக்குனர்கள் இதே போல எத்தனை எத்தனை தற்கொலைகளைத் தடுத்துள்ளனரோ, யாருக்குத் தெரியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவர்களைப் பற்றியும் அவர்கள் எடுக்கும் சீரியல்கள் பற்றியும் மக்கள் நிறைய பேருக்கு கிண்டலும் கேலியும். நியாயப்படி அவர்களை நம் சமுதாயம் தனிப்பட்ட முறையில் கெளரவிக்க வேண்டும்.
இப்படி நெடுந்தொடர் பற்றி ஆன்றோர் சான்றோர் கூறியவற்றை இன்னும் சொல்லலாம்!!
நெடுந்தொடர்களால் ஏற்பட்டுள்ள சில நல்ல விளைவுகளை அனைவரும் அறிந்து கொள்வோம்:
* அளப்பறிய பல நல்ல (??!!) தமிழ் சொற்களை உலகம் அறிந்து கொள்கிறது!
* பிறருடன் பேச்சை வளர்க்க நல்ல தொடக்கம் [நான் ..... சீரியல் விடாம பார்ப்பேன்.. நீங்க?]
* கருத்துபரிமாற்றத் திறனை (Communication Skills) ஐ வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல களமாக செயல் படுகிறது!! [ யார்கிட்ட பேசினாலும், அந்த சீரியல்கள் பற்றி தானே பேச்சு]
* காலந்தவறாமையை மக்களிடத்தில் அதிகரித்துள்ளது [ ஐய்யோ!! இன்னும் பத்து நிமிசத்துல *** சீரியல் போட்டு விடுவானே!!]
* வார நாட்களில் வெளியிட களிப்பாட்டங்களுக்கு விடை கொடுக்கிறது [ஒரு நாள் பார்க்கலைனாலும், கதை (??!!) புரியாதுல!]
* பல முகங்களை அருகாமையில் [ Closeup] காட்டி பூச்சாண்டி பயத்தை ஒழிக்கிறது!!
* ஏறும் விலைவாசியினால், பல வீடுகளில் உணவு சிக்கனம் கடைப்பிடிக்கப் படுகிறது!
முக்கியமாக,
அரசுக்கு நல்ல வருவாயைத் தேடித் தருகிறது!
(குடி போதை அடிமைகளுக்கு - டாஸ்மாக் - மது;
சீரியல் அடிமைகளுக்கு - சீரியல் - மின்சாரம்)
இன்னும் பல...
இனியேனும், சீரியல்களைப் பழிக்காமல், சீரியசாக
D ) சிந்தியுங்கள்!!
நன்றி: தருமி