விருது பெற்ற படங்கள் ஒளிபரப்பு.

தூர்தர்சன் Lok Sabha TV Channel - லில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

நன்றி: பிச்சைப்பாத்திரம் வலைப்பூ.
 
தகவலுக்கு நன்றி பாரதி.

(விருதுப் படங்களென்றாலே...கொஞ்சம் தயக்கமாய்த்தானிருக்கிறது. எண்பதுகளில்...தூர்தர்ஷனில் இரவில் இப்படிப்பட்டப் படங்களை ஒளிபரப்பினார்கள்.

பாடாவதிப் படங்களாய் சில பெங்காலிப் படங்களும், எலிப்பத்தாயம் போன்ற தற்கொலைக்குத் தூண்டும் மலையாளப் படங்களும் அந்த வரிசையில் ஒளிபரப்பாயின. இப்போது மீண்டும் அந்த ரிஸ்கை எடுக்க எனக்கு விருப்பமில்லை.)
 
ஆமாம்! ஆமாம்! சிறுவன் உருட்டி விட்ட கோலி குண்டு குழிக்குள் விழுகின்ற வரை காட்டுவது...சிறுவர்கள்................முடிக்கும்வரை காட்டுவது..........என்ற விமர்சனங்கள் அன்றைய நிலையில் அனைவரிடமும் உண்டு ………..(ராஜ்கிரண் கறி கடிக்கிற மாதிரி, சோறு சாப்பிடற மாதிரி:D இதிலாவது மற்ற இடங்களில் விறுவிறுப்பு இருக்கும்)

.அன்று ஒரேயொரு சானல் மட்டுமே என்பதால் வேறுவழியில்லாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்...வெறும் பொம்மையை காட்டினாலும் பார்த்தார்கள்...

இப்பொழுது தடுக்கி விழுந்தால் கூட தொலைக்காட்சி சானல் மேல் தான் போய்விழுவார்கள்...என்ன? பார்ப்பதற்கு இரண்டு கண்கள்மட்டும் தான் இருக்கிறது (வீட்டின் அறைக்கு அறை தனித்தனியான தொலைக்காட்சி பெட்டி) அது தான் குறை....

இப்பொழுதாவது நல்ல படங்களை ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும்... விளம்பரங்கள் இல்லாமல் ஒளிபரப்புவது கூடுதல் சிறப்பு....(யாராவது? விளம்பரம் கொடுத்தா தானே?:D....... மாகாபாரத்....இழுத்து ஒலித்துக்கொண்டிருந்ததே!........அப்பொழுது விளம்பரங்களை ஒரு வாரு வாரினாங்களே! அத்தோடு சரி! இப்பவெல்லாம் அரசு பொதுநல விளம்பரங்கள் மட்டுமே!)

பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று...?

பகிர்வுக்கு நன்றி!
 
பின்னூட்டங்களுக்கு நன்றி சிவா, நம்பி.
நல்ல படங்களும் விருதுகளுக்கு தேர்வாவது உண்டே..! சில படங்கள் மொழிப்பிரச்சினையாலும் இரசிக்க இயலாமல் போய் விடுகின்றன என்பதும் உண்மையே.
 
தூர்தர்சனைப் பார்ப்பதே அபூர்வம்...
அந்த அளவுக்கு ஆக்கி வைத்திருக்கிறார்கள்..

அவார்டு படம் என்றால் படு ஸ்லோவாக இருக்கும் என்பது பொதுவான கருத்து.. ஓரளவுக்கு உண்மையும் கூட..
ஆனாலும் நல்ல படங்களைப் பார்க்க ஆவல்தான்
 
திரைப்படம் என்பது 4 சண்டை 4 பாட்டு 4 பஞ்ச் வசனம் என்றே நம் திரை உலகம் நம்மை பழக்கப்படுத்திவிட்டார்கள்
என்னை பொறுத்தவரையில் எந்த ஒரு கலையானாலும் ஊடகமானாலும் பலதரப்பட்ட விசயங்களை நல்ல அணுகுமுறையோடு தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் மிகைப்படுத்தாத எத்தனையோ படங்கள்
உண்டு. வீடு போன்ற நல்ல எதார்த்தங்களை தழுவிய படங்கள் உண்டு என்ன கொஞ்சம் சோகம் கலந்திருக்கும் அவ்வளவே . மறுபடியும் நாம் நம் ரசனையை கொஞ்சம் தூர்தர்ஷனுக்கும் செலவிடலாமே
 
எலிப்பத்தாயம் ஒரு சிறந்த படம். அதை நான் சென்னை தூர்தர்ஷனில் சிறுவயதில் பார்த்தேன். இப்பொழுது விருது பெற்ற படங்களை பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது.
 
எலிப்பத்தாயம் ஒரு சிறந்த படம். அதை நான் சென்னை தூர்தர்ஷனில் சிறுவயதில் பார்த்தேன். இப்பொழுது விருது பெற்ற படங்களை பார்ப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது.

அந்தக் காலத்தில் ஸ்வயம்வரம் என்ற மலையாளப் படமும் ஒரு விருது பெற்ற படம்.. ஆனால் இரண்டு மணி நேரம் இருந்து பார்ப்பது .. ஹிம்..நடக்காது.. அந்த அளவுக்கு இழுவை.

சமீபத்தில் பார்த்தது... காஞ்சிவரம்.. நன்றாக இருந்தது..

பசங்க.... நான் பார்த்து ரசித்த ஒரு படம்.. ஆனால் தேசிய விருது எல்லாம் கிடைத்ததா தெரியாது..

ஆடுகளம்.. தென் மேற்குப் பருவக்காற்று .. பதிவிறக்கம் செய்து பல வாரங்கள் ஆகி விட்டன.. இது வரை பார்க்க அவகாசம் கிடைக்க வில்லை!
 
காந்தி படம் பல வருஷங்களாக ஒளிபரப்பப்பட்டது
 
Back
Top