அறிஞர்
New member
சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி
தமிழக வீரர் அதிபனுக்கு கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து
தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பாஸ்கரன் அதிபன் (17 வயது) கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார்.
செக் குடியரசில் நடந்த ஒலோமாக் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆக. 4&12), அதிபன் 9 சுற்றுகளில் 7 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இந்த வெற்றியால் 3வது ‘ஜி.எம். நார்ம்’ பூர்த்தி செய்த அவர் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் அவருக்கு நாளை (ஆகஸ்ட் 15) 18வது பிறந்த நாளாகும். சிறந்த செஸ் வீரரான இவர் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு மிகப் பெரிய கவுரவம் கிராண்ட் மாஸ்டர் பட்டம். மூன்று முறை ‘ஜி.எம். நார்ம்’ பூர்த்தி செய்யும் ஒருவர் கிராண்ட் மாஸ்டராக அறிவிக்கப்படுவார்.
கடந்த ஆண்டு தேசிய ‘பி’ பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 முறை பட்டம் வென்ற அதிபன் முதல் ஜி.எம். அந்தஸ்தை பெற்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரிசாவில் நடந்த போட்டியில் அவருக்கு 2வது ஜி.எம். அந்தஸ்து கிடைத்தது. தற்போது, செக் குடியரசில் நடந்த போட்டியில் பட்டம் வென்றுள்ள அவர் இந்தியாவின் 23வது கிராண்ட் மாஸ்டர் ஆனார். தமிழகத்திருந்து இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமை அதிபனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 20 வயதில் இந்த பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளதை அடுத்து உலக போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை அதிபன் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் இருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்றவர்கள் விவரம்:
விஸ்வநாதன் ஆனந்த், கிருஷ்ணன் சசிகிரண், அருண் பிரசாத், மகேஷ் சந்திரன், ஆர்.ஆர்.லஷ்மண், தீபன் சக்கரவர்த்தி, ஆர்.பி.ரமேஷ், எஸ்.ஆர்.கிடாம்பி, பாஸ்கரன் அதிபன்.
நன்றி-தினகரன்