முத்தரப்பு போட்டி

வெற்றி பெறும் அணி

  • இலங்கை

    Votes: 4 30.8%
  • இந்தியா

    Votes: 9 69.2%
  • நியூசிலாந்து

    Votes: 0 0.0%

  • Total voters
    13
  • Poll closed .
இந்தியாவுக்கு ஓட்ட இலக்கு 300.

சேவாக், கார்த்திக், கோலி, சர்மா, யுவ்ராஜ், ரைனா, தோனி என ஏழு மட்டையாளர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா எட்டுமா இலக்கை.

எட்டும் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன்.
 
இந்தியாவுக்கு ஓட்ட இலக்கு 300.

ஏழு மட்டை வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா எட்டுமா இலக்கை.

எட்டும் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன்.
ஒருவேளை எட்டு மட்டையாளர்களுடன் இறங்கினால் எட்டுவதில் சிரமமிருக்காதோ??:icon_b:
 
ஆட்டம் நினைத்த அளவிற்கு பரபரப்பாக இருக்காதென்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தியா வெல்வதற்கு குறைவாகவே வாய்ப்பிருக்கிறது.
 
Last edited:
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் களத்தில். 100 அடித்தால் நிச்சயம் வெற்றி ... பார்க்கலாம். முதலாவது ஓவரிலேயே கார்த்திக் சென்றுிட்டார். பார்க்கலாம்.
 
ஆட்டம் நினைத்த அளவிற்கு பரபரப்பாக இருக்காதென்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தியா வெல்வதற்கு குறைவாகவே வாய்ப்பிருக்கிறது.

ஏஏஏஏஏ...................ன்?:icon_hmm:
 
2 தடவை நடுவரின் தவறான தீர்ப்பில் தப்பிய யுவி சிறப்பாக ஆடினாலும் பெரேராவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்துவிட்டான். அணித்தலைவர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் கோலி உடன் ஆட வந்துகொண்டிருக்கிறார்.
 
முன்பு தோற்கும் போது நடுவர் தர்மசேனாவின் நாட்டுப்பற்று என்று சுயதேற்றல் கொண்டோம். இன்று, நடுவர்கள் இருவரும் உதவியும் வெற்றி கொள்ள முடியவில்லை. போராடித்தானே தோற்றோம், மோசமாகத் தோற்கவில்லை என்று இன்றும் நம்மை நாமே தேற்றுவோம்.

இந்தியாவிடம் இல்லாத எது இலங்கையிடம் இருந்தது.

இந்தியாவுக்கு நிகரான எதிர்பார்க்கத்தக்க திறனுடைய துடுப்பாட்ட வரிசை இல்லாத போதும் நம்பத்தக்க வகையில் துடுப்பாட்ட வரிசை கடைசி வரை இருந்தது.

மேத்யூ, பெரெரா, ரந்திவ் போன்ற சகலதுறை ஆட்டக்காரர்கள் அணியில் இருந்தமை நெருக்கடியான நிலையை இலங்கைக்குக் கொடுக்கவில்லை.

பந்துவீச்சாளர்கள் பொறுப்புணர்ந்து பந்து வீசியமை.

இந்த ஆட்டக்காரருக்கு இந்த பந்து வீச்சாளர் நெருக்கடி கொடுப்பார் எனக் கணித்த தலைமை. அதனை பிசகின்றிச் செயற்படுத்திய மேலாண்மை.
 
நேற்று விளையாட்டுவீரர்களிலும் நடுவர்கள் நன்றாகவே தடுமாறினார்கள். கார்த்திக் அவுட் அல்ல. ஆனால் கொடுத்துவிட்டார். சேவாக்கிற்கு கேட்க்க கொடுக்கவில்லை. ஆனால் அவரே ரன்னவுட்டுக்கு வழிவிட்டுக்கொடுத்தார். யுவி 2 தடவை தப்பினார். நான் நினைத்தது அவருக்கு இன்று நல்ல காலம் என... பெரேராவின் பந்துக்க தேவையற்ற விதத்தில் மட்டையை காட்டி ஆட்டமிழந்தார்.

நேற்று ஆரம்ப ஆட்டக்காரர்கள் சற்றே எழுந்துவரும் பந்துகளை விலத்தியே விட்டார்கள். ஆனால் எட்டாத பந்துக்கு மட்டையை காட்டி ஆட்டமிழந்தார்கள். அனுபவ ஆட்டக்காரர்கள் போல் தோன்றவில்லை...

தோனி நிதானமா ஆடினார். எந்த பந்தையும் தூக்கி அடிக்கவில்லை. மட்டை அடிதான்.
 
டாஸ் ஜெயித்து யார் முதலில் பேட் செய்கிறார்களோ.... அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என இரு அணி தலைவர்களும் போட்டி துவங்குவதற்கு முன்னரே அடித்து ஆணித்தரமாக ஆரூடம் சொல்லி விட்டார்கள். மின்விளக்கொளியில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம் எனவும் தெரிவித்திருந்தார்கள். அப்படிப்பட்ட நிலையில் போட்டியை ஏன் இரவு பகல் ஆட்டமாக நடத்த வேண்டும்.....? பகல் ஆட்டமாகவே நடத்தியிருக்கலாமே....?
 
Back
Top