முத்தரப்பு போட்டி

வெற்றி பெறும் அணி

  • இலங்கை

    Votes: 4 30.8%
  • இந்தியா

    Votes: 9 69.2%
  • நியூசிலாந்து

    Votes: 0 0.0%

  • Total voters
    13
  • Poll closed .
முத்தரப்பு போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது...

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து ஒரு போட்டிகளைப் பற்று இங்கு அலசலாம்.
 
அம்பயரின் தவறான முடிவால் இந்தியா தடுமாறுகிறது...

ரோகித் சர்மாவுக்கு தவறான அவுட்டை.... கொடுத்தார் பாகிஸ்தான் அம்பையர்.....

32-3/10.4 ஓவர்
 
இந்திய வெற்றி
ஊக்கப் புள்ளியுடன்
34 . 3 ஓவர்களுக்கு 171 / 4 எடுத்து அபார வெற்றி

சேவாக் விளாசல்

99 ஓட்டங்கள் (100 பந்துகளுக்கு)
11 - நான்கு
2 - ஆறு
 
Last edited:
இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ரந்தீவ் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாதவர்........!:sauer028: இந்தியா வெற்றி பெற ஒரு ரன் வேண்டும். அதே நேரம் வீரேந்திர சேவாக் 100 ரன் எடுத்து சென்சுரி அடிக்கவும் ஒரு ரன் வேண்டும். அந்த சூழ்நிலையில் வேண்டும் என்றே ரந்திவ் நோ பால் போட, அதன் காரணமாக கிடைத்த ஒரு ரன் மூலமாக இந்தியா வென்று விடுகிறது. ஆனால் அந்த பந்தில் சிக்ஸர் விளாசியும் சேவாக்கினால் 99 ஐ கடக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

எப்படி இருந்தாலும் நமது டீம் தோற்பது நிச்சயம் தான். இருந்தாலும் சேவாக் சென்சுரி போடக்கூடாது என்பதில் சிங்களன் எவ்வளவு தெளிவாக இருக்கிறான் பாருங்கள்.....!:eek:
 
போட்டி என்று வந்துவிட்டால் இதெல்லாம் சகஜமப்பா...

எப்படியோ போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது
 
வெற்றி உறுதி எனத் தெரிந்தும், சேவாக் அடித்தாடியதுக்குக் காரணம், போனஸ் பொயிண்டுக்குத்தானே தவிர சதமடிக்க வேண்டும் என்றில்லை. சதமடித்திருந்தால் அது போனசுக்கே போனசு.:lachen001:
 
நீயூஸிலாந்துக்கு எதிராக ஆடிய இந்திய ஆட்டத்தைப் பற்றியும் இங்கே அலசலாமே.

உதை வாங்கும்போது மட்டும் நம் மக்கள் இங்கே தலை வைத்து படுப்பதேயில்லை
 
ஒரு உதை வாங்காவிட்டால்
நம்ப ஆளுங்களுக்கு அலட்சியமும், திமிரும், தலைக்கனமும் வந்துவிடும் :mini023:

இப்படி உதை வாங்கினால் தான் மற்ற ஆட்டங்களை ஒழுங்கா விளையாடுவாங்க :icon_b:
 
ரண்டிவ் தன் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சேவாக் தன் டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்...!!
 
ரண்டிவ் தன் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டதாக சேவாக் தன் டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்...!!

இன்னும் மீத ஆட்டங்கள் உண்டு அல்லவா?
 
sehwag ஒரு ரன் எடுத்தால் சதம் என்கிறபொழுது அந்த கயவர்கள் நடந்தது கொண்ட விதம் cricket அரங்கில் பலரின் முக சுளிபுக்கு ஆளாகவேண்டி இருந்தது.. இதை விட கேவலம் வேறொன்றுமில்லை..
 
sehwag ஒரு ரன் எடுத்தால் சதம் என்கிறபொழுது அந்த கயவர்கள் நடந்தது கொண்ட விதம் cricket அரங்கில் பலரின் முக சுளிபுக்கு ஆளாகவேண்டி இருந்தது.. இதை விட கேவலம் வேறொன்றுமில்லை..

இந்த நினைப்பு தவறானது. அறிஞர் சொன்னது போல் விளையாட்டு போட்டி என்று வந்துவிட்டால் சட்டரீதியாக எதுவும் செய்யலாம்.

2000ம் ஆண்டில் சார்ஜாவில் ஜெயசூரிய 189 ஓட்டங்களில் இருந்தபோது அகலப்பந்து வீசி ஆட்டமிழக்கச்செய்திருந்தனர். சட்டப்படி அந்த ஆட்டமிழப்பில் தவறில்லை. ஆனால் அது ஒரு நேர்மையான ஆட்டம் இல்லை தான்.

மிக முந்திய காலத்தில் டெஸ்ட் போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் (சரியாக நினைவில்லை) எடுக்க வேண்டும். நேராக போட்டால் வென்றுவிடுவார்கள் என்று பந்தை உருட்டி விடுவார் அந்த பந்துவீச்சாளர். அந்தக்காலத்தில் அந்த பந்து சட்டபூர்வமாக எடுக்கப்பட்டது. இப்படி விளையாட்டு வரலாற்றில் ஏராளம்.

100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததிலும் 99உடன் ஆட்டமிழக்காமல் வந்தது அவரது சராசரிப்புள்ளியை ஏற்றும் என்ற நல்ல எண்ணத்தில் பாருங்கள்.
 
ரந்தீவ் செய்ததில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, ஆனால் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்று சொல்லிக்கொள்ளும்போது இந்த மாதிரியாக நடந்துகொள்வது கொஞ்சம் தவறுதான்.

ஆனால் ரந்தீவ் இப்படி செய்து அனைவரையும் அவர் பக்கம் இழுத்திருக்கிறார். நெகடிவ் அட்வர்டைசிங் என்று சொல்வதுபோல்.
 
ரந்தீவ் செய்ததில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!:cool:
 
தான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்தான் சேவாக்கிடம் சென்று எல்லோர் முன்னிலையிலும் ரந்தீவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்ங்ணா.............!:cool:

இந்த விஷயம் பெரியதாக ஆனதால் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆனால் கிரிக்கெட்டில் இதைவிட மட்டமான விஷயங்கள் பல நடந்துள்ளன.

இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் ஒரு பந்து பாக்கி இருந்தது, இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும், கிரெக் சாப்பல் அப்பொழுது காப்டனாக இருந்தார், அவர் அவருடைய தம்பியான டிரவெர் சாப்பலை பந்தை உருட்டிப் போடுமாறு சொன்னார். அவர் ஓடிவந்து பந்தை உருட்டி விட்டார், இங்கிலாந்து ஆட்டக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை அடிக்க முடியாமல் தினறினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் ரூல் படி இது தவறல்ல, ஆனால் இறையான்மைபடி இது ஒரு மட்டமான காரியம்.

ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
 
இந்த விஷயம் பெரியதாக ஆனதால் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சரியாக சொன்னீங்ணா.....!
இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியில் ஒரு பந்து பாக்கி இருந்தது, இரண்டு ரன்கள் எடுக்கவேண்டும், கிரெக் சாப்பல் அப்பொழுது காப்டனாக இருந்தார், அவர் அவருடைய தம்பியான டிரவெர் சாப்பலை பந்தை உருட்டிப் போடுமாறு சொன்னார். அவர் ஓடிவந்து பந்தை உருட்டி விட்டார், இங்கிலாந்து ஆட்டக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை அடிக்க முடியாமல் தினறினார். ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால் ரூல் படி இது தவறல்ல, ஆனால் இறையான்மைபடி இது ஒரு மட்டமான காரியம்.
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?:eek: ஜென்டில்மேன்கள் சில நேரங்களில் மென்டல்மேன்களாகி விடுகிறார்கள்.:)
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
உட்கார வைக்கணும்.....! அவர் செய்த தவறுக்கு அதுதான் சரியான தீர்ப்பாகும்.
 
அடப்பாவிங்களா......!! அப்படியா செஞ்சாங்க.....?:eek: ஜென்டில்மேன்கள் சில நேரங்களில் மென்டல்மேன்களாகி விடுகிறார்கள்.:)

சிங்களர்களை விட மட்டமானவர்கள்
ஆஸ்த்ரேலியர்கள்

அதற்கு பல ஆட்டங்கள் சான்று
 
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இதுக்காகத்தான் இந்தளவுக்குப் பெரிசாக்கிறாங்களோன்னும் தோணுது.
 
ரந்தீவ் பிரச்சனை பெரியதாகிவிட்டதால் அவரை அடுத்த ஆட்டத்தில் உட்கார வைத்தாலும் வைக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
நீங்க சொன்னாமாதிரி இன்றைய நியூசிலாந்துடன் நடக்கும் போட்டியில் ரந்தீவுக்கு விளையாட தடை விதிச்சிட்டாங்கள்ல.......! சரியான நடவடிக்கைதான் என ஐ சி சி யும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தை பாராட்டியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த யோசனையை ரந்தீவுக்கு சொன்ன தில்ஷானின் சம்பளப்பணத்தில் பாதியையும் எடுத்து விட்டார்கள்.

இனிமேலாவது திருந்தினால் சரிதான்.......!:eek:
 
Back
Top