இந்து புராணங்கள் உண்மையா?

அவ்வையார் பற்றி அனைவரும் அறிவோம் அவர் இந்து சாமிகளுடன் நேரடியாக பேசியதாக புராண கதைகள் கூறுகின்றன. மேலும் அவ்வையார் என்றொருவர் இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய ஆத்திசூடி இன்றும் ஆதாரமாக இருக்கிறது. அதுபோல் சரித்திரத்தில் உள்ள பல மன்னர்கள்கூட புராண கதையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்

மேலும் புராணங்களை ஆராய்ந்த போது அதில் பல கருத்துக்கள் நடைமுறை வாழ்வோடு ஒத்து வருவதை அறியமுடிந்தது மகாபாரதத்தில் உள்ள கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள் அப்படியே உண்மை தன்மை வாய்ந்தவையாக இருப்பதை அறியமுடிகிறது. இதன் அடிப்படையில் நான் இந்து புராணங்கள் எல்லாம் உண்மை என்று நம்புகிறேன்

ஆனால் அனேக இந்து நண்பர்களே புராணங்களை வெறும் கதைகள் என்று கூறி அதை நம்ப மறுக்கின்றனர்.

"தேடுவாய் புலத்தியனே நன்றாய் கேளு;தீக்கிடங்கை;
தேடாதே தெரியச் சொன்னேன்
பாடுவார் பதினெட்டுப் புராணங்கட்கும்
பாரதமும் கட்டப்பா பரிகாசங்கள்
நாடதனில் பிராமணர்கள் பிழைக்கச் செய்த
நவகிரகக் கட்டப்பா; நம்ப வேண்டாம்;
ஒருவர் அருள் பூசை செய்து
உத்தமனே கண்ணீரால் கழுவுவாயே;"


- அகத்தியர் 27வது பாடல்

மேலே சொல்லப்பட்ட அகத்தியர் பாடல் இந்து புராணம் பிராமணர் பிழைப்பதற்காக சொல்லப்பட்ட கட்டு கதைகள் என்று சொல்கிறது இதை என்னால் நம்பவும் முடியவில்லை அதே நேரத்தில் அகத்திய முனிவர் ஒரு உயர்ந்தவர் என்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை


இந்நிலையில் இந்து புராணங்கள் உண்மையா? அறிந்தவர் சற்று விளக்கலாமே!
 
என்னைப்பொருத்தவரை புராணங்கள் ஒரு உதாரணங்களே,அது நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
 
புராணம் என்பதற்கு பழமை என்று பெயர்,
பழமை அனைத்தும் புதுமைக்கு வழி காட்டி,

எனவே அது உண்மையாக தான் இருக்கும்
அது மட்டும் இன்றி அகத்தியரும் வேறு கட்டு கதையை பற்றி சொல்லி இருக்க கூடும்
என்னை பொறுத்த வரையில் புராணம் என்பது உண்மை
என்று தான் நினைக்கிறன்
ஏனெனில் அதற்கான சான்றுகளும் நம் முன்னே காணபடுகின்றன.......
 
சங்கீதா அவர்களே,புராணங்கள் உண்மையாகவே இருக்கக்கூடும் என்ற பதில் தெளிவில்லையே.உங்களால் அடித்து ஆனித்தரமாக கூறமுடியவில்லையே.
 
என்னைப்பொருத்தவரை புராணங்கள் ஒரு உதாரணங்களே,அது நடந்திருக்குமா என்பது சந்தேகமே.

சிவம் அய்யா அவர்களே நீங்கள் ஒரு அர்ச்சகராக இருப்பதால் உங்கள் கருத்து மற்றும் அகத்தியர் பாடல் சொல்வதுபோல், இந்து புராணங்கள் உண்மையல்ல என்றும் அது கதையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் நம்புகிறேன்.

18புராணங்கள் எல்லாம் உண்மைஇல்லை என்றால்

ராமாயாணம், மகாபாரதம், சிவபுராணம், கருடபுராணம், கந்தபுராணம், கூர்ம புராணம், பெரியபுராணம், விஷ்ணு புராணம் போன்ற எல்லாமே வெறும் கதைகள்தானோ?
 
புராணங்கள் எல்லாம் மையக்கருத்து ஒன்றை சொல்ல புனையப்பட்டவை என்றே நினைக்கிறேன்.

சொல்ல வந்த கருத்தை கருத்து கந்தசாமி மாதிரி சொன்னால் கேட்க மாட்டார்கள் என்று கதை சேர்த்து சொல்லியிருக்கனும். அந்தக்காலத்தில் புத்தகம் காப்புரிமை இல்லாததால் செவிவழியாக கேட்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு கதை சொல்லப்படும் போது அதனை இடையிடையே மற்றவர் தங்கள் ரசனைக்கேற்றபடி கதை சேர்த்து விட்டிருக்கலாம்.

மூலக்கருத்தே நாம் எப்போதும் பார்க்க வேண்டும்.

இராமாயணம் - அடுத்தவன் மனைவியை அபகரிக்காதே, நட்புக்கு மதிப்பு கொடு, பெரியவர் வாக்கு நிறைவேற்று இப்படி நிறைய செல்லலாம்.

மகாபாரதம் - சகோதரர்களுடையே விரோதம் கூடாது, சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும், வஞ்சகத்தால் வென்றவன் வாழ்க்கை நிலைக்காது, இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

எனவே புராணம் நிஜமா பொய்யா என்ற ஆராய்சிக்குள் போகாமால், அதில் கிடைக்கும் மூலக்கருத்து சரியா தப்பா என்று பார்த்து, நடப்பு உலகிற்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளுதலே சிறந்தது.
 
புராணங்கள் கற்பனைகளே.. இவ்வுலகில் அவைகள் எல்லாம் சம்பவித்தது இல்லை எல்லாம் கட்டுக்கதைகள்
 
இராமாயணம் - அடுத்தவன் மனைவியை அபகரிக்காதே, நட்புக்கு மதிப்பு கொடு, பெரியவர் வாக்கு நிறைவேற்று இப்படி நிறைய செல்லலாம்.

மகாபாரதம் - சகோதரர்களுடையே விரோதம் கூடாது, சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல முடியும், வஞ்சகத்தால் வென்றவன் வாழ்க்கை நிலைக்காது, இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
.


நல்ல விளக்கம் ஏற்றிக்கொள்ள கூடிய ஒன்றுதான்.


எனவே புராணம் நிஜமா பொய்யா என்ற ஆராய்சிக்குள் போகாமால், அதில் கிடைக்கும் மூலக்கருத்து சரியா தப்பா என்று பார்த்து, நடப்பு உலகிற்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளுதலே சிறந்தது.

எந்த ஒரு காரியத்தையுமே உண்மையானதா என்று ஆராய்து பார்க்காமல் கண்மூடிதனமாக உண்மை என்று நம்பிக்கொண்டு இருப்பதோ அல்லது பொய் என்று ஒதுக்குவதோ ஒரு மனிதனின்
சரியான நிலை அல்ல என்றே நான் கருதுகிறேன். எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து உண்மை நிலையை அறிவதே சாலச்சிறந்தது. (எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்)

கதை என்று வரும்போது அதில் என்ன கருத்து கூறப்பட்டாலும் அது அதிகமாக மனதை தொடாது ஆனால் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பே தனி. கடவுளை வைத்தே கதை புனைத்து எல்லாமே கதை என்று ஆனபிறகு அதிலுள்ள கருத்து என்ன பெரிய காரியத்தை சாதித்துவிட போகிறது?

வேதவியாசகர் மகாபாரதத்தை போதித்தபோது விநாயகர் தனது தந்தத்தை உடைத்து அதை எழுதினார் என்று மிக உயர்ந்த விதத்தில் கூறப்படுகிறது. அதனாலேயே விநாயகருக்கு ஒருபுற தந்தம் உடைந்திருக்கிறது போன்று உருவம் காட்டப்படுகிறது. அர்ச்சகர்கள் ஆராதிக்கும் விநாயகரின் தோன்றம் பொய்யா?

ஓன்று உண்மையல்ல என்று ஆகும் பட்சத்தில் எல்லாவற்றின்மேலும் அதன் பாதிப்பு வரும் என்பதை அறியவேண்டும்.

புராணங்கள் எதுவுமே பொய்யானது அல்ல என்பதே எனது கருத்து. நடந்த காரியங்களை சிலர் தங்கள் நலனுக்காக அனேக மாற்றங்கள் செய்து புனைந்து விட்டனறேயன்றி, அது முற்றிலும் புனையல் அல்ல என்றே நான் கருதுகிறேன்.
 
புராணங்கள், இதிகாசங்கள், கடவுள் எல்லாமே மக்களை நல்வலிபடுத்தவே சொல்லப்பட்டவை.. கோவில்கள் உருவாகப்பட்டது எல்லாம் ஆயுதங்களை பதுக்கி வைப்தற்கும் ரகசியங்கள் பரிமாற்றம் செய்வதற்கும்தானே ஒழிய வேரதேற்குள் இல்லை.
 
கோவில்கள் உருவாகப்பட்டது எல்லாம் ஆயுதங்களை பதுக்கி வைப்தற்கும் ரகசியங்கள் பரிமாற்றம் செய்வதற்கும்தானே ஒழிய வேரதேற்குள் இல்லை.

ஹா ஹா ஹா உண்மை மிக்க உண்மை.. கோவில்கள் எல்லாம் கொள்ளை குகைகள்...

எனது பாராட்டுக்கள்...
 
ஹா ஹா ஹா உண்மை மிக்க உண்மை.. கோவில்கள் எல்லாம் கொள்ளை குகைகள்...

எனது பாராட்டுக்கள்...

கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகச் சரித்திரமே தவிர கொள்ளையடித்ததில்லை. :D:D:D:D எப்படி பத்தாவது சரித்திரம் பாஸ் செஞ்சீங்களோ தெரியலை.

புராணங்கள் வெறும் கற்பனையோ அல்லது மிகைப் படுத்தப் பட்டக் கதைகளோ அல்லது உண்மையோ.. அதைப் பற்றி கவலைப் பட வேண்டியது. அதை நம்புபவர்கள் மட்டுமே. நம்பாதவர்கள் அதைத் தொட வேண்டிய அவசியம் என்றுமே கிடையாது.. அதை விட செய்ய உருப்படியான வேலை நிறைய இருக்கு,

ஒரு புராணத்தைப் பற்றி விமர்சிக்க வேண்டுமானால் அதை முதல்ல நல்லா படிக்கணும். அதன் ஆதியை அதாவது அது எதனால் உருவானது என்று படிக்கணும்.. அதன் காரணியைப் படிக்கணும்.. அப்படி முழுசா படிக்காம, இரண்டு மூணு கதைகளை படிச்சிட்டு இதெல்லாம் கதைகள் என்று நீங்களாகவே முடிவு கட்டிக் கொள்ளலாம். ஆனால் அதை மற்றவர்களிடம் வலியுறுத்துவது தவறு..

இப்போ இங்க இறைனேசன் இங்க அகத்தியர் பாடல் என்று ஒன்றைக் கொடுத்திருக்கார். அது எந்த அகத்தியர்? தமிழ் அகத்தியரா? சித்த அகத்தியரா? சங்கககால அகத்தியரா? மருத்துவ அகத்தியரா? ஜோதிட அகத்தியரா? எந்தக் காலத்தைச் சேர்ந்தவர்.. இல்லை இரண்டு மூணு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதா? இப்படி எதுவுமே தெரியாது.. இதை நம்புறோம் அதை நம்ப மாட்டோமா என்ன?

இந்து மதத்தைப் பற்றி ஏற்கனவே அடிப்படையைச் சொல்லி இருக்கிறேன். இதுதான் கடவுள் என்று இந்துமதம் நம்மைத்தான் தேடச்சொல்லுது.. மற்றபடி சிவன், விஷ்ணு, சக்தி விநாயகன் போன்றவை பலர் வரித்த கடவுள்கள். எனவே குறுகிய பார்வையுடன் பார்த்து இந்து மதம் இவ்வளவுதான் என்று என்றும் முடிவு கட்டிவிடக் கூடாது.

வேதங்கள், வேதங்களை விளக்க புராணங்கள், புராண விளக்கங்களுக்கு உபநிஷங்கள் இப்படி பல்வேறு அடுக்கு பாடங்களைக் கொண்டது இந்து மதம்.

இதை முழுமையாய் அறிந்தவர் இத்தளத்தில் யாருமில்லை. அதனால் இதெல்லாம் பொய் என்றும் வசை பாடல்களையும் அரங்கேற்றும் வகையில் தெரியாததை தவறாக விமர்சனத்திற்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டி இது போன்ற எதிர்மறைத் திரிகளை தவிர்ப்பது நலம் என்று கருதுகிறேன்.

பதினெண் புராணங்களும் ஒன்றுக் கொன்று எதிர்மறையான பல கருத்துகளைக் கூறினாலும் ஒன்றிற்கொன்று சண்டை போடாமல் ஒற்றுமையாய் இருக்கக் காரணம் அவை மற்றவற்றை குறை கூறி விமர்சிப்பதில்லை. இந்தப் புராணத்தில் அப்படிச் சொல்லி இருக்கே.. அந்தப் புராணத்தில் அப்படி சொல்லி இருக்கே .. இதுதான் சரி அது தவறு என்று அவை அனைத்தையும் படித்தவர்கள் விவாதிப்பதில்லை.

காரணம் புராணம் என்பது வரலாற்றுக் கதையல்ல.. அவை தத்துவ விளக்கங்கள். ஒரு தத்துவம் பல கோணங்களில் பார்க்கப் படலாம். பார்க்கப் படவேண்டும்..

எதையும் முழுதாக இழித்து பேச நமக்கு உரிமை கிடையாது.. என்பதை பதிவர்கள் தயவு செய்து உணர வேண்டும்.

நானும் கோவில்களின் நிர்வாகத்தில் பங்கு கொண்டிருக்கிறேன்.. மன்றத்தில் சிலரும் அப்படி இருக்கலாம். எனவே இது போன்ற விஷயங்களில் சற்று கவனமுடன் இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்..
 
ஆன்மீகம் என்பது தனிநபர் நம்பிக்கை. ஒரு சமய ஆன்மீகத்தில் இருந்து கொண்டு இன்னொரு சமய ஆன்மீகத்தை அலசவோ, ஆராயவோ முடியாது. எல்லா சமயங்களிலும் குறைகள் உள்ளது. எல்லா சமயநூல்களிலும் இடைச்சொறுகல்கள் அவ்வப்பொழுது நடைபெற்றே வந்திருக்கிறது. ஒன்றொக்கொன்று உள்ள வேறுபாடுகளை கொண்டே அறியலாம். (இது மிகப்பெரிய விவாத கருப்பொருள்) இவையனைத்தும் மனிதனால் எழுதப்பட்டவைகள் தான்.

விவேகானந்தர் குறிப்பிட்டது போல இந்த உலகில் மரண பயம் இருக்கின்ற வரை நம்பிக்கைகள் இருக்கும். அதைச்சார்ந்து சமயங்கள் தோன்றும், அதைச் சார்ந்து தத்துவங்கள் தோன்றும். தோன்றிக்கொண்டேயிருக்கும். எதுவெல்லாம் மனித தர்மத்துக்கு, மனித நேயத்திற்கு எதிராக இருக்கிறதோ? அவைகளெல்லாம் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் பொதுவாக. அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அது இறை சார்ந்த அல்லது எந்த சமயஞ் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி. இல்லையென்றால் சமங்களுக்குள்ளேயே ஏன்? இத்தனை பிரிவுகள்? இத்தனை முரண்பாடுகள்?

இதை பகுத்தறிவு திரிகளில் ஆன்மீகம் சாரமால் அலசப்படவேண்டியது. இதை ஆன்மீகம் சார்ந்த திரிகளில் அலசப்படவேண்டியவைகள் அல்ல. இது சமயச்சண்டைகளைத்தான் உருவாக்கும். இந்தச்சமயம் பெரிதா? அந்த சமயம் பெரிதா? என்பது போன்று அலசப்படமுடியாது. அலசப்படவும் கூடாது.

பலசமயங்களில் சிலர் பெரியாரை வைத்துக்கூட இது மாதிரி இன்னொரு சமயத்தின் கருத்துக்ளை விமர்சிக்கிறார்கள். (இணையங்களில் பெருவாரியாக காணமுடிகிறது) இது மிகத்தவறானது.

கல்லூரியில் பயிலுகின்ற சமயத்தில் ஒரு வகுப்பு நண்பர் அதிகமாக இப்படித்தான் இந்து சமயத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிப்பார், இறை நம்பிக்கைகளையும் விமர்சிப்பார். பெரியார் பெயரின் துணை கொண்டு... நான் கூட பெருமை பட்டதுண்டு பெரியாரின் காருத்துக்களை இந்த வயதிலேயே புரிந்து வைத்திருக்கிறாரே? என்று. (என்னை அடையாளப் படுத்திக்கொள்ளாமல்)

ஒரு முறை தன் நோட்டுப்புத்தகத்தில் ஒரு பாடக்குறிப்பை எழுதும் பொழுது மேலே ''ஜே சி'' என்று குறிப்பிட்டுவிட்டு எழுதினார். அதற்கு நான் கேட்டேன். இது என்ன? ''ஜே சி'' என்று எழுதுகிறாய்? காதலியின் பெயரா? (அப்படி போடுபவர்கள் உண்டு) அதற்கு அவர் சொன்ன பதில் தான் என்னை மிகவும் எரிச்சலடையவைத்தது?

இது ''ஜிசஸ் கிரைஸ்ட்'' என்பதை தான் அப்படி குறிப்பிடுகிறேன் என்று நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தார் அவர்கள் மட்டும் ''ஓம்'' என்று குறிப்பிடுகிறார்களே நாங்கள் குறிப்பிடக்கூடாதா? என்று பதிலுரைத்தார்.

நான் வேறு எதுவும் கூறவில்லை இதை மட்டும் தான் தான் கூறினேன் ''இன்னொருமுறை பகுத்தறிவு வாதி என்று கூறிக்கொண்டு பெரியாரின் பெயரை பயன்படுத்தாதீர் நண்பரே என்றேன்! உங்களுக்கு ஏற்பட்டுள்ளது சமயக்காழ்புணர்ச்சி மட்டுமே! மூடநம்பிக்கை எதிர்ப்பு அல்ல! அதற்கு பெரியார் உருவாக்கிய பகுத்தறிவையும், சுயமரியாதை இயக்கத்தையும் இந்த மாதிரி காழ்ப்புணர்ச்சிகளுக்காக பயன்படுத்துவது அவரை இழிவு படுத்துவது ஆகும். ''

இதன் பிறகு பல நண்பர்களும் அவர் மீது வெறுப்பு கொண்டு அவரிடம் பழகுவதிலிருந்து விலகியே இருந்தனர். அவரிடம் நெருக்கமாக எந்த வகுப்பு நண்பர்களும் பழகுவதில்லை இன்று வரை.

இந்த திரி அது மாதிரி விஷயங்களைத்தான் வெளிப்படுத்துகிறது.
(இதில் தலையிடக்கூடாது என்று முடிவுடன் இருந்தாலும் இது பல இடங்களிலும் சர்ச்சகளை உருவாக்கியிருக்கிறது ஆகையால் குறிப்பிட்டேன் அவ்வளவே.)
 
Last edited:
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதம் உள்ளது இந்த கட்டுரை
 
இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதம் உள்ளது இந்த கட்டுரை

இந்துக்கள் புராணங்களில் அனேக காரியங்கள் உண்மை என்பதை இறைவன் எனக்கு உணர்த்தியதோடு மகாபாரதத்தை படிக்கவேண்டும் என்றும் எனக்கு கட்டளை இட்டார். அதை விவிலியத்தொடு ஒப்பிட்டு அதன்மூலம்அனேக உயர்ந்த கருத்துக்களை எனக்கு போதித்திருக்கிறார்

இந்நிலையில் பல இந்துக்களே "புராணங்கள் உண்மையல்ல " என்று வாதிடுவதால்தான் இந்த கேள்வியை எழுப்பினேன். அதுவும் அந்த "சித்தர்" ஏன் ஆவ்வாறு பாடினார்? என்பதற்கு வேறு ஏதாவது விளக்கம் கிடைக்கும் என்ற கருத்திலேயே இந்த பதிவை தந்தேன்.

இத்திரியில் மனம் புண்படும் கருத்துக்கள் இருந்தால் மன்னிக்கவும்!

ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மத்ததை ஆராய முடியாது என்பதெல்லாம் அர்த்தமற்ற கூற்று. பரந்த மனமும் நல்லது எங்கிருந்தாலும் எடுத்துகொள்ளும் பக்குவமும் இருந்தால் எல்லாவற்றையும் நலமனதோடு ஆராய முடியும்!

எந்த மதமானாலும் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஒருவரே!
 
இந்நிலையில் பல இந்துக்களே "புராணங்கள் உண்மையல்ல " என்று வாதிடுவதால்தான் இந்த கேள்வியை எழுப்பினேன்.


எந்த மதமானாலும் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஒருவரே!

இது தான் சர்ச்சை...? இதை அறிவிக்க முயல்வதற்காகத்தான்....இத்தனை சுற்றுகள் என்பதை இத்திரி சுட்டுகிறது...? இங்கு தான் மதம் என்ற வேற்றுமைப் பார்வை உள்நுழைகிறது. இது உண்மையா? இது உண்மையா? இது பொய்யா? இது பொய்யா?

இந்தக் கடவுள் பெரியவரா? அந்தக் கடவுள் பெரியவரா? இவர் சிறியவரா? அவர் சிறியவரா?

ஒப்பிடே மதத்தோடு தான்.....அது சார்ந்த கடவுளோடுதான்.

ஒப்பிடாமல் குறிப்பிட்டால் சமயப்பற்றாகிவிடும்..ஒப்பிட்டு இதை குறிப்பிட்டால்...வேற்றுமை கருத்தாகிவிடும்.
.........................................

உலகில் மனித நேயமிக்கவனே! உயர்ந்தவன்!

(ஒட்டு மொத்தவரையும் பாகுபாடின்றி இணைக்கும் முடிவு)
 
அகத்தியர் பாடலில் உண்மையே உள்ளது... எல்லா மதங்களிலும் பிரார்த்தனை உள்ளது..... வழிபாடு உள்ளது.... பிரார்த்தனை இறைவன் சம்பந்தப்பட்டது ( தனி மனித நம்பிக்கையை பொறுத்தது ) , வழிபாடு மதம் சம்பந்தப்பட்டது ( வழிகாட்டிகள் மற்றும் தொடர்ந்து சடங்குகளை செய்பவர்கள் ) எல்லா நல்ல செயல்களும் பணத்தோடு ஒப்பிட்டு மதிப்பிடும்போது உண்மையினை இழந்துவிடும்,,, வழிபாடு நிச்சயம் தேவையா என்று தெரியவில்லை.... பிரார்த்தனையே இறைவனை நெருங்க உதவும்...
 
இறை நேசன் அவர்களே!
எங்கும் நிறை இறைவன் எனும் பரம் பொருள் ஒன்றே! எமக்குள்ளும் அவ் விறையே நிறைந்திருப்பதால் யாமும் இறையே! என்ற ஒன்று பட்ட நிலைக்கு உயர்ந்தவர்கள் சித்தர்கள். எனவே அந் நிலை எய்தியவர்களுக்கு மற்ற நிலைகளின் இனிப்பு மேல் பூச்சுக்கள் தேவயில்லை. எனவேதான் அகத்தியர் பாடலில் அவ்வாறு கூறியுள்ளார்.
இதையே வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனிதன் - களங்கங்கள் = கடவுள் என்று குறிப்பிடுகிறார்.
இக் களங்கங்களைப் போக்க தனக்குள்ளேயே தேடுவதைத்தான் தாங்கள் கொடுத்துள்ள அகத்தியர் பாடலின் கீழ் வரிகள் புலப்படுத்துகின்றன.
அந்த நிலையை அடையா முன்னம் அனைவரும் நேர் வழி செல்ல வேண்டுமல்லவா? அதற்காகத்தான் ஒரு சராசரி மனிதனின் உணர்வு வழியே நிகழும் நிகழ்வுகள், அதன் விளைவுகள் ஆகியவற்றை புராணங்களின் வழி கூறி, அறங்களையும் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
நீங்கள் புராணங்களின் மூலங்களைப் படித்தீர்களேயானால் எவருக்கும் அங்கே விலக்கில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
 
இது நான் சிறுவயதில் கோகுலம் இதழில் படித்த கதை , ஒருநாள் கடவுளிடம் இருந்து எல்லா உயிர்களுக்கும் ஒரு அழைப்பு வந்தது . ஒரு குறிப்பட்ட இடத்தை சொல்லி அங்கே வந்தால் அனைவருக்கும் காட்சி தருவதாக கூறினார். எல்லா உயிர்களும் அந்த இடத்தில் கூடியது. அங்கே பெரிய விவாதம் ... கடவுள் யாரை போல இருப்பார் என்று .... ஆப்ரிக்கன் சொன்னான் கடவுள் எங்களை போல கருப்பாக உதடு தடித்து இருப்பார் என்று ,வெள்ளையன் சொன்னான் கடவுள் எங்களை போல நிறமாக நீள அங்கி அணிந்து இருப்பார் என்று ஜப்பானியர்கள் சொன்னார்கள் கடவுள் எங்களை போல சப்பை மூக்குடன் இருப்பார் என்று இதை பார்த்த பறவைகள் சொன்னது கடவுள் கண்டிப்பாக எங்களை போல இருப்பார் என்று , விலங்குகள் சொன்னது கடவுள் எங்களை போல இருப்பார் என ... இது கொசுவரை விவாதமாக , அந்த நேரம் கடவுள் தோன்றினார். அனைவரும் பார்த்தனர் . ஒரு நிமிடத்தில் கடவுள் மறைந்து விட்டார் ......பின்னர் ஆப்ரிக்கன் சொன்னான் பார்த்தாயா கடவுள் எங்களை போலவே இருந்தார் என்று அதற்கு வெள்ளையன் சிரித்தான் உனக்கு கண்ணில் எதோ கோளாறு என்று , ஜப்பானியன் சொன்னான் உங்கள் இருவருக்குமே கண் கோளாறு என்று ... இதை கேட்டு ஒவ்வொரு உயிரும் சிரித்தன.... கடவுளும் சிரித்தார்.

நமக்கு இருக்கும் அறிவை கொண்டு கடவுளை ஆராய்ந்தால் நம் அறிவு எட்டும் உயரம்தான் கடவுள். முதலில் நாம் நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களையும், உலகத்தை சரியாக புரிந்து கொள்வோம். பிறகு கடவுளை பற்றி கவலைபடுவோம் . நம்மை படைத்தவருக்கு அவரை பார்த்துக்கொள்ள தெரியும். நாம் கடவுளை காப்பாற்றத்தேவை இல்லை .
:p :p :p
 
எதிலும் கருத்தை மட்டும் எடுத்தால் போதும் என்பதே என் கருத்து. அந்தக் கருத்தை அலசி ஆராய்ந்து நாம் ஒரு முடிவுக்கு வருவதே மெய்ப்பொருள் காண்பதின் பொருள்.
 
என்னை பொறுத்தவரை இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் மனிதர்களை நல்வழியில் நடத்துவதற்காக நடந்த சில விஷயங்களை மிகையாக சொல்லப்பட்டவைகள் தான்.

அலுவலகங்களில் நாம் வேலை செய்யும் போது நம்மை நம் பாஸ் காமிராவில் பார்த்துக் கொண்டு இருக்கிறார், கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்றால் ஒரு பயம் வரும், நம் வேலையை ஒழுங்காக செய்வோம், . அப்படி தான் கடவுள் நம்பிக்கையும்.

இப்படி அவர் கவனிக்கும் போது, வேலை செய்யாத இத்தனை பேருக்கு வேலை போய்விட்டது.......... இது இதிகாசம், புராணங்கள்.

கடவுளுக்கு பயந்து ஒழுங்காக வேலை செய்துக் கொண்டு இருப்பவர்கள்... ஆன்மீகவாதிகள்.

காமிராவின் முன்னாடி வேலை செய்வது போல் நடித்துவிட்டு பின்னாடி மறைவில் திட்டுவது சராசரி மனிதர்கள்.

என்வேளையை நான் செய்கிறேன், அது பாஸ் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன, காமிராவிற்கு எல்லாம் என்னால் நடிக்க முடியாது. நான் இப்படி தான்...... இது நாத்திகவாதிகள்...

மொத்தத்தில் ஆன்மிகவாதிகளும், நாத்திகவாதிகளும் தங்கள் வேலைகளை சரியாக செய்துக் கொண்டு இருக்கிறார்கள்........ நடுவில் தத்தளிப்பது இரண்டுகெட்டான்கள் தான்.

குழந்தைக்கு கதை நல்ல விஷயங்களை கதைகளுடன் சொல்வோம், அப்படி தான் வளர்ந்த குழந்தைகளுக்காக புராணங்களும், இதிகாசங்களும் சொல்லப்பட்டது...... அதனால் குழந்தைக்கு நல்லது நடந்ததா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, பொய் சொல்லி விட்டார்களே என்று கூறக்கூடாது என்பது என் கருத்து.......

இவை எந்த மதமாக இருந்தாலும், எல்லா மதங்களிலும் உண்மைக்கதைகளும் இருக்கும், கட்டுக் கதைகளும் இருக்கும.

முக்கியமாக நீங்கள் யாரிடம் இருந்து இந்த கதைகளை தெரிந்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான்..... புராணங்களின் உண்மைத் தன்மை புரியும்.
 
Back
Top