ஜனகன்
New member

ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைபவர் சியான் விக்ரம். பாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் விக்ரம், பிதாமகனில் பிணங்களோடு வளர்ந்த சித்தன், கண்களுக்கு பதிலாய் இசைவழியே பார்க்கும் காசி, என்று விளிம்புநிலை பாத்திரங்கள் ஏற்றாலும் சரி, கந்தசாமி போல ஹைடெக் சூப்பர்மேன் கேரக்டர் என்றாலும் கேரக்கடருக்காக அவர் செய்யும் ஹோம் ஒர்க் அளப்பரைக்கு ஒரு அளவே இருக்காது.
தற்போது விக்ரம் நடிக்க இருக்கும் ஒரு தாதா பாத்திரத்துக்காக; குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்து, சமீபத்தில் விடுதலையான வடசென்னை ரவுடிகள் இரண்டு பேரை, காவல்துறை நண்பர்களின் உதவியுடன் தனது தி.நகர் பாரதி தெரு அலுவலகத்துக்கு அழைத்து, அவர்களோடு தண்ணியடித்து, சாப்பிட்டு அவர்கள் அனுபவங்களை தெரிந்துகொண்டாராம்.
அது மட்டுமல்லாது, பொருட்களை எப்படிப்பிடிப்பது, எப்படி தாக்குவது, (பொருட்கள்-ஆயுதங்கள்) எப்படி பிளேடைக் கையாள்வது உட்பட பல டெக்குனிக்குகளை தனது கேரக்டருக்காக கத்துக்கொண்டாராம்.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. விக்ரமுக்கு ஜோடியாக இலியானா நடிக்கும் இந்தப்படத்துக்கு டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. இருபது நாட்கள் முதல் ஷெட்யூல் சென்னையிலும். இரண்டாவது ஷெட்யூல் 15 நாட்கள் ஹைதராபாத்திலும் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் மதக்கலவரம் வெடித்துள்ளதால் மங்களூரில் இரண்டாவது ஷெட்யூளை நடத்த திட்டமிட்டு வருகிறது படக்குழு. முன்றாவது ஷெட்யூல் மலேசியா மற்றும் ஹாங்காங்கில் நடத்த இருக்கிறார்களாம்.
போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு சிம்பசொப்பனமாக தண்ணிகாட்டும் ஒரு டானாக விக்ரம் இதில் நடிக்கிறார். விக்ரம் தனது அலுவலகத்துக்கு அழைத்த அந்த இரண்டுபேர் வடசென்னையை ஒரு காலத்தில் ஆட்டிவைத்த பிரபல தாதா சேராவின் வலது கைகள். இவர்களும் படத்தில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகம் என்று தகவல் கிடைக்கிறது விகரம் அலுவலக வட்டாரத்திலிருந்து.
ஆர்வக் கோளாறு ஆபீஸ் பையன் கேட்கிறான், " அப்போ பொணமா நடிக்கணும்னா இன்னா பண்ணுவாரு...?"