aren
New member
சச்சின் டெண்டுல்கர்!!!
கடந்த நான்கு டெஸ்டு போட்டியில் நான்கு சதங்களை அடித்துள்ளார் சச்சின். இது ஒரு சிறந்த சாதனையாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
அவர் ஒவ்வொரு முறை இந்த சதங்களை அடித்தபோதும் ஆட ஆரம்பித்தவுடனேயே எனக்குத் தோன்றியது இவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று. இதற்குக் காரணம் ரிக்கி போண்டிங் வெகு அருகாமையில் வந்துவிட்டார் அவரை இவர் தொடவிடமாட்டார் என்று நான் நினைத்ததே காரணம்.
இது உண்மையா, ரிக்கி போண்டிங் தன்னை மிஞ்சிவிடக்கூடாது என்பதால்தான் இப்படி ஒரு சதம் முடிந்தவுடன் அடுத்த சதம் அடிக்கிறாரா?
நான் என் மனதில் நினைப்பது சரியா தவறா? சரியென்றால் அவர் அவருடைய ரெக்கார்டுக்காக மட்டுமே ஆடுகிறாரா, நாட்டுக்காக ஆடவில்லையா என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
சமீபத்தில்கூட பங்களாதேஷில் நடந்து முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் பங்கேற்கவில்லை ஆனால் டெஸ்ட் போட்டிக்கு வந்துவிட்டார்.
அதிக டெஸ்ட் போட்டிகள் இந்த வருடம் இல்லை என்று குறைபட்டுக்கொண்டவரும் இவரே.
என்னுடைய சந்தேகம் சரியானதா?